Friday, 11 January 2013

வாழ்க்கையின் வெற்றிக்கு 6 வழிமுறைகள்!

தடம் பார்த்து நடப்பவன் மனிதன், தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் என்று சொல்வார்கள். எல்லோருக்கும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையும், மற்றவர்கள் நம்மை விரும்ப வேண்டும் என்ற எண்ணமும் இருக்கத்தான் செய்யும். வெற்றிக்கு முயற்சியும், தன்னம்பிக்கையும் போதும். வெற்றி பெற்றால் மற்றவர் உங்களை திரும்பி பார்க்கலாம், ஆனால் எல்லோரும் உங்களை விரும்பியும், நெருங்கியும் வர வேண்டுமென்றால் 6 அடிப்படை விஷயங்கள் அவசியம். அவை இங்கே
…
நம்பிக்கை:

நம்மிடம் இருக்கும் சிறந்த பழக்க வழக்கங்களே பிறரை நம்மை நோக்கி ஈர்க்கும். முதலில் நமக்கு நம் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். நான் அழகானவ(ன்)ள் என்ற எண்ணம் உங்கள் மனதில் எப்போதும் இருக்கட்டும். அழகு என்பது சருமத்தில் மட்டுமில்லை. சருமத்தை பராமரித்து அழகு படுத்திவிடலாம். கவர்ச்சியை விட நம்பிக்கை மேலானது. நம்பிக்கையின் பலனையும், ஈர்ப்பையும் உங்கள் வெற்றி தான் மற்றவர்களுக்கு உணர்த்தும்.

நேர்த்தியான உடை:

`நான் கலராக இல்லை. எலும்பும் தோலுமாக இருக்கிறேன். எனக்கு எந்த டிரெஸ் போட்டாலும் நல்லா இருக்காது` என்று எண்ணாதீர்கள். நேர்த்தியாக உடை அணியுங்கள். உடை அணிவது ஆளைக் கவர்வதற்கல்ல என்றாலும், பார்ப்பவர்களை மதிக்கத் தூண்டுவதும் நாம் அணியும் உடை தான். அது உங்களுக்கு வசதியானதாகவும் இருக்கட்டும். நல்ல மரியாதை, நல்ல நட்பு எல்லாவற்றையுமே நல்ல ஆடைகள் உருவாக்கித் தரும். நேர்த்தியான ஆடை உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்
.
கனிவான பழக்கம்:

வீட்டுக்குள்ளேயே கிணற்றுத் தவளையாக முடங்கிக் கிடந்தால் இந்த உலகத்தின் அதிசயங்கள் உங்களுக்கு தென்படாமலே போகும். பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டால் தான் வெற்றியின் முகம் உங்களுக்கு காட்சி தரும். எனவே ஓய்வு நேரத்தை நண்பர்களுடன் இணைந்து சமூக சேவை செய்யும் விதமாக வெளியே கழித்தால் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்போது உங்களுக்கு புதிதாக பலர் அறிமுகமாகலாம். நீங்களும் முதலில் உங்களை அறிமுகம் செய்து பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பழக பழகத்தான் நம் பலமும், பலவீனமும் தெரியும். பிறகு நம் நடையை மாற்றி வெற்றி நடை போடலாம்.

நட்பை தேர்வு செய்யுங்கள்:

வெற்றிக்குத் துணை நம்பிக்கை மட்டுமல்ல, நட்பும் தான். யாருடன் சினேகிதம் கொள்கிறோமோ அவர்களின் பழக்கம் நமக்கும் ஒட்டிக் கொள்ளும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதனால் நட்பு கொள்வதில் அதிக கவனம் அவசியம். அதேபோல அருகில் இருப்பவர்கள், உடன் பணிபுரிபவர்கள் ஆகியோருடன் நட்புறவுடன் இணக்கமாக பழகுவதும் வாழ்க்கையில் வெற்றிக்கு உதவும். உங்களின் அழைப்பை மதிப்பவருடனும், மரியாதையுடன் பழகுபவருடனும், உங்கள் நலனில் அக்கறை கொள்பவருடனும் நட்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

விமர்சனத்தை எதிர்கொள்ளுங்கள்:

நீங்கள் நிறைவான தோற்றத்தில் இருக்கும்போது பலரும் உங்களைப் பற்றி பேசிக் கொள்வார்கள். அதுபோல குறையான தோற்றத்தில் இருந்தாலும் பலரும் விமர்சிப்பார்கள். புகழ் பேச்சில் மயங்காமலும், குறை காணும் விமர்சனங்களில் கலங்காமலும் இருங்கள்.


விலக்க வேண்டியவை:

வெற்றிக்காக விலக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு. முதலாவது எதிர்மறையாக பேசுபவர்களை விட்டு விலகுங்கள். அடுத்ததாக நேரத்தையும், செல்வத்தையும் விரயம் செய்யும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். நண்பர்களுடன் அதிகமாக அரட்டையடிப்பது, தூங்கிக் கழிப்பது, தியேட்டரில் கழிப்பது போன்றவற்றை விலக்குவதன் மூலம் நேரத்தையும், செல்வத்தையும் மிச்சப்படுத்தலாம். இந்த ஆறும் இருந்தால் வெற்றி உங்களைச் சேரும், மற்றவர்களும் உங்களிடம் விரும்பி நட்பு பாராட்டுவார்கள்.
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பிரமாண்டமாக நடைபெற்ற தொங்கா நாட்டின் அரசரின் இறுதி ஊர்வலம்

தெற்கு பசிஃபிக் நாடான தொங்கா வின் மன்னர் 5ஆம் ஜோர்ஷ் இன் இறுதிக் கிரிகைகள் இன்றைய தினம் (27) பிரமாண்டமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இவ் இறுதிக் கிரிகையில், நூற்றுக்கணக்கான, அவர்களின் பாரம்பரிய உடை அணிந்தவர்களால் மன்னரின் பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
கறுப்பு ஆடை அணிந்து, இடுப்பை சுற்றி பாய் போல வேயப்பட்ட சிறப்பு அங்கி அணிந்து மன்னருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அந் நாட்டின் பல பகுதிகளில் இருந்து மாணவர்களும் இவ் ஊர்வலத்தில் கலந்துகொண்டார்கள்.





12 வருடங்களின் பின் முதன் முதலாக தலைமுடி வெட்டப்போகும் பெண்

பிறேசில் நாட்டை சேர்ந்த சிறுமி நடாஷா மோரேஸ், 12 வயதாகும் சிறுமி. இவர் பிறந்ததில் இருந்து தலைமுடி வெட்டியதே கிடையாதாம். தற்பொழுது இவரது தலைமுடி 5அடி 2 இன்ச் வரை வளர்ந்து விட்டது.
பிறந்ததுக்கு முதன் முதலாக தனது தலைமுடியை வெட்ட திட்டமிட்டுள்ளார் இந்த வினோத சிறுமி. தனது வெட்டப்பட்ட கூந்தலை £3,500 இற்கு விற்க திட்டமிட்டுள்ளாராம் இவர்.
தற்பொழுது இத் தலை முடியை பராமரிக்க நாள் ஒன்றுக்கு ஒரு முழு போத்தல் சம்பூ தேவைப்படுகிறதாம் இவருக்கு. அத்துடன் தலைமுடியை சம்பூ போட்டு கழுவ 4 மணி நேரம் பிடிக்கிறதாம்.
இவர் வீட்டில் இருக்கும் போது மின்விசிறி போடமாட்டார்களாம். மீறி போட்டால் தலைமுடி சிக்கிக்கொண்டு, சிக்கெடுக்க ஒருநாள் முழுவதும் செலவழியுமாம்.
 

இவன் எல்லாம் ஒரு அப்பனா…?

தந்தை என்பவர் குழந்தையை காக்கும் கவசமாக இருக்க வேண்டும். ஆனால்… இங்கு இவனை பாருங்கள்…!
குழந்தையை விளையாட்டு பொருளாக நினைக்கிறானோ தெரியவில்லை.
கீழுள்ள புகைப்படம் மேற்கு சீனாவின் Shaanxi மாகாணத்தில் உள்ள பெருந்தெரு ஒன்றில் பாதசாரி ஒருவரால் எடுக்கப்பட்டுள்ளது.


பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

இந்தியாவின் புத்திசாலி சிறுத்தை புலி!

இந்தியாவின் வடகிழக்கு பகுதி, மேற்கு பெங்காலில் சங்காட்ரம் எனும் ஊரில் உள்ள 14 அடி உயர சுற்று சுவரை கொண்ட நீர்த்தேக்கம் ஒன்றில் விழுந்த சிறுத்தை புலி வெளியே வரமுடியாது தத்தளித்தது.
விரைந்து வந்த வனத்துறையினர், கயிறு கொண்டு அதனை மீட்பதற்கு முயன்றும் முடியவில்லை.
இறுதியில் கிணற்றில் ஏணி வைக்கப்படவே, புத்திசாலித்தனமாக அதில் ஏறி மேலே வந்தது சிறுத்தை.
அதனை பார்த்தவர்கள் வியப்பில் ஆழ்ந்து போயினர்!





பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

வாயில்லா பிராணிகளுக்கும் உணர்வுகள் உண்டு: அதை மதித்திடுவோம்



  • 0
  • 0
நாங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் எம் குழந்தைகள் போல் உணர்வுகள் கொண்டவைதான், தனிமை, துக்கம் என்பன இவற்றின் மனதையும் பாதிக்கவே செய்கின்றன என்பதை காட்டும் புகைப்படங்களே இவை.
செல்லப்பிராணிகளின் உணர்வுகளையும் மதித்து நடந்திடுவோம்.
 


பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பிரிடேட்டர் ஏலியன் போல பயங்கர தோற்றம் கொண்ட வௌவால் கண்டுபிடிப்பு (Pictures)




  • 0
  • 0
 
அர்னோல்ட் ஸ்வஸ்நேகர் இன் பிரிடேட்டர் திரைப்படத்தில் வரும் அகோர தோற்றம் கொண்ட ஏலியனின் வாய் போன்ற வாய் கொண்ட வௌவாலை உயிரியல் ஆய்வாளர்கள் வியட்நாம் உயிரியல் பூங்காவில் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ரொகிஃபில்லர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டொனால்ட் ரெட்ஃபீல்ட் கிரிஃபின் என்ற பேராசிரியரால் இவ் வகை வௌவால்களுக்கு leaf-nosed வௌவால்கள் என பெயரிடப்பட்டுள்ளது.