Wednesday, 19 February 2014

புகைப்படக் கலை!

பிளஸ் 2 முடித்ததும் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு மூலம் சிறந்த வேலைவாய்ப்பை பெறுவது பலரது கனவு. ஆனால், சிலர் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் சில துறைகளில் படிக்க விரும்புவர். அது அவர்களின் கற்பனை, திறமையை நிரூபிக்கும் வகையிலான படிப்புகளாக இருக்கும். அந்த வரிசையில் புகைப்படத் துறை, இசை, பங்குச் சந்தை, ஆடியோ இன்ஜினியரிங், அனிமேஷன், பியூட்டிஷியன், ஃபேஷன் டிசைன் உள்ளிட்ட படிப்புகள் இடம் பெறுகின்றன.
புகைப்படக் கலைஞராக விரும்புவோர் தொழில் ரீதியாக கற்றுத் தேர்வது அவசியம். பொதுவாக விஷுவல் கம்யூனிகேஷன், இதழியல் உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் புகைப்படக் கலை குறித்து படிக்கலாம். புகைப்படக் கலைஞர் படிப்பை முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் பயில முடியும். இதில் கமர்ஷியல் போட்டோகிராபி, இன்டஸ்ட்ரியல் போட்டோகிராபி, அட்வர்டைசிங் போட்டோகிராபி, ஆர்ட்ஸ் போட்டோகிராபி, வைல்டு லைஃப், சயின்டிஃபிக், அட்வென்ச்சர், ஃபேஷன், நியூஸ், டிராவல் போட்டோகிராபி என பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதில் எந்தப் பிரிவை தேர்வு செய்ய வேண்டும் என்பது அவரவர் சுய விருப்பம் மற்றும் சுய திறமையின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும்.
பகுதி நேரமாகவும் 15 நாள் முதல் ஓராண்டு வரை இதனைக் கற்பிக்கின்றனர். டில்லியில் ரகுராய் சென்டர் ஃபார் போட்டோகிராபி நிறுவனம், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் போட்டோகிராபி ஆகிய நிறுவனங்களில் புகைப்படக் கலையை படிக்கலாம். நிகான் கேமரா நிறுவனம் புகைப்படக் கலைஞர்களுக்கான பள்ளியை நடத்துகிறது. பிளஸ் 2 முடித்ததும் நேரடியாக புகைப்படக் கலைஞருக்கான படிப்பை படிப்பது நல்ல ஆலோசனையாக இருக்காது. பட்டப் படிப்பை படித்துக் கொண்டே, இதுபோன்ற குறைந்தகால மற்றும் பகுதி நேர படிப்பை படிக்கலாம்.
புகைப்படக் கலைஞராக பகுதி நேரமாக பணியில் சேர்ந்தால் மாதம் ரூ.5000 முதல் ரூ.10,000 வரை சம்பாதிக்கலாம். முழு நேர பணியாளர்களுக்கு அவர்கள் திறமை, அனுபவம் மற்றும் தொழில் தொடர்புகளைப் பொறுத்து குறைந்தது ரூ.20,000 முதல் லட்சங்கள் வரை சம்பாதிக்கலாம். உலக அளவிலும் இந்தியாவிலும் சினிமா துறையில் புகைப்படக் கலைஞர்களுக்கு மிகுந்த மரியாதையும் கோடிகளில் வருமானமும் கிடைக்கிறது.
புகைப்படத் துறை ஆண்டுதோறும் சராசரியாக 15 முதல் 20% வளர்ச்சி கண்டு வருகிறது. தினசரி, வார, மாத பத்திரிகைகள் மற்றும் ஆபரணங்கள், ஃபேஷன், ரியல் எஸ்டேட் என துறைவாரியாக பிரத்தியேக பத்திரிக்கைகள் ஏராளமாக வருகின்றன. எனவே, சிறந்த புகைப்படக் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் ஏராளம்.
  • thankyou
  •                                                                  S.K.Satheeshkumar.
  • Sunday, 16 February 2014

    தேவையில்லாத இ மெயில்களைத் தடை செய்யலாம்

    தேவையில்லாத இ மெயில்களைத் தடை செய்யலாம்



     நம் மின்னஞ்சல் முகவரிக்குத் தேவையற்ற நபர்கள் பலரிடம் இருந்து தொடர்ந்து அஞ்சல் செய்திகள் வந்து கொண்டே இருக்கும். நிச்சயமாக அவை பயனற்றவை என்று தெரிந்தும்,வேறு வழியின்றி அவற்றை நம் மெயில் பாக்ஸிலிருந்தும்ட்ரேஷ் பாக்ஸிலிருந்தும் நீக்கிக் கொண்டிருப்போம். இதற்குப் பதிலாகக் குறிப்பிட்ட முகவரியிலிருந்து வரும் மெயில்களை,வடிகட்டிஅவற்றை இன்பாக்ஸுக்கு அனுப்பாமல் இருக்கும் வசதியினை ஜிமெயில் தருகிறது. அதனை எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம். 
    ஜிமெயிலில் இத்தகைய இமெயில்களின் முகவரிகளுக்கென மற்ற தளங்கள் தருவது போல பிளாக் லிஸ்ட் வசதி இல்லை. இருப்பினும் அவற்றை எப்படி தடை செய்வது என இங்கு காண்போம்.  நீங்கள் இத்தகைய மெயில்களுக்கென ஒரு பில்டர் தயாரிக்க வேண்டும்.  இதற்கு உங்கள் அக்கவுண்ட் மூலம் ஜிமெயிலுக்குச் செல்லவும். நீங்கள் எந்த இமெயில் முகவரிகளிடமிருந்துமின்னஞ்சல்களைப் பெற விரும்பவில்லையோஅவற்றின் முன் ஒரு சிறிய டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். அடுத்து திரையின் மேலாக உள்ள  More Actions  என்ற பகுதியில் கிளிக் செய்திடவும்.இங்கு  Filter Messages like these  என்ற இடத்தில் பின்னர் கிளிக் செய்திடவும். உடன் create filter  என்ற விண்டோ காட்டப்படும். நீங்கள் தடை செய்திட விரும்பும் மின்னஞ்சல் முகவரிகள் அனைத்தும்  From  பீல்டில் இருப்பதனைப் பார்க்கலாம். அந்த மின்னஞ்சல் முகவரிகள் சரியாக உள்ளனவா என்று பார்க்கவும். நீங்கள் விரும்பினால்ஓர் இணைய தளத்திலிருந்து வரும் அனைத்து மெயில்களையும் தடை செய்திடலாம். அதற்கு @என்ற அடையாளம் மட்டும் அமைத்துஅதன் பின்னர் தளத்தின் பெயரை அமைக்கவும். இத்துடன் மெயில் செய்தியில் சில சொற்கள் உள்ள மெயில்களையும் தடை செய்திடலாம். இதனை எல்லாம் முடித்தவுடன்அடுத்து Next Step   என்ற பட்டனை அழுத்தவும். அடுத்து என்ன செயலை நீங்கள் மேற்கொள்ள விரும்புகிறீர்களோஅந்த பாக்ஸ் முன் டிக் அடையாளத்தினை அமைக்கவும். எடுத்துக்காட்டாகவிரும்பாத இமெயில் வந்தால்உடனே அழிக்க வேண்டும்  என எண்ணினால் Delete it என்பதில் டிக் அடையாளம் அமைக்கவும். இந்த முகவரிகளில் இருந்து வரும் அனைத்து மெயில்களும் உடன் ட்ரேஷ் பெட்டிக்குச் செல்லும். நீங்கள் தேர்ந்தெடுக்க  Skip the Inbox, Archive it, Mark as read, Star it, Apply a label, Forward it, Send canned response, and Never send to spam   என்ற பல ஆப்ஷன்கள் உள்ளன. சில வேளைகளில்,சிலரிடமிருந்து வரும் இமெயில்களைப் பார்த்துவிட்ட பின்னர்அழிக்க எண்ணலாம். அத்தகைய இமெயில்கள் ட்ரேஷ் பெட்டியில் 30 நாட்கள் தங்கும். இவற்றை எல்லாம் முடித்தவுடன்  Create Filter Button என்ற பட்டனை  அழுத்தவும். உடனே பில்டர் செயல்படத் தொடங்கும்.  எவற்றை எல்லாம் தடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பது Settings – Filters  என்ற இடத்தில் பட்டியலாகக் காட்டப்படும். உங்களுடைய விருப்பம் மாறும் போதுஇந்த இமெயில் முகவரிகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

    கீறல் விழுந்த சிக்கலான சி.டி.களிலிருந்து தகவல்களை பெறலாம் வாங்க

    கீறல் விழுந்த சிக்கலான சி.டி.களிலிருந்து தகவல்களை பெறலாம் வாங்க


    இன்று கணினி வைத்திருப்பவர்கள் என்று இல்லாமல் அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய சிக்கல் என்ன வென்றால் சி.டி தாங்க சி.டி யில் நாம் நம்முடைய போடோக்களிலிருந்து,பிறந்தநாள் நிகழ்சிகள்திருமண நிகழ்சிகள்நமது தனிப்பட்ட விஷயங்கள் அவரைக்கும் பதிவு பண்ணி பாதுகாத்து வருகிறோம். ஆனால்இதிலும் ஒரு பெரிய சிக்கல் வந்து விடும். அதுதான் சி.டி.கள் மோசமாகி போவது அதாவது சி.டி களில் சிக்கல் ஏற்பட்டு விடும் உராய்வுதூசு படித்தல் போன்ற பல காரணங்களால் சி.டியில் இருக்கும் தகவல்களை நாம் பெற முடியாத சூழல் ஏற்படும் போது தான் நாம் அதிகமாக பாதிக்கப்படிகிறோம். நாம் ஆசை ஆசையாக சேமித்து வைத்த வீடியோக்கள். அனைத்தும் வீணாகி போகும் பொது அதனால் நாம் அடையும் பாதிப்பு மிக மிக அதிகம். 
    இப்படி பட்ட சிக்கல் சி.டி.க்களில் இருந்து தகவல்களை பெறும் வழிமுறைகளைப் பற்றி இன்றைக்கு பார்க்க போகிறோம்.
    வேறொரு சி.டி.யில் இருந்து தகவல்களைவீடியோக்களை காப்பி செய்து கொண்டு வந்து நமது கணினியில் போட்டு பார்த்தல்,அல்லது நாமது சி.டி.க்களை போட்டு பார்த்தால் 'டொயிங்என்ற சத்தத்துடன் cannot read from the source destination என்று கணினியில் பதில் வரும்.
    சி.டி.யில் நமக்கு தெரியாமல் ஏற்பட்டிருக்கும் கீறல்கள்பதிந்திருக்கும் தூசுக்களால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவேமுதலில் மெல்லிய துணி கொண்டு சி.டி.க்களை உள்ளே இருந்து வெளிப்புறமாக துடைக்க வேண்டும். சோப்பு கலந்த நீரில் போட்டு கழுவவும் செய்யலாம். அதன் பிறகும் சிக்கல்கள் ஏற்பட்டால் கீழே இருக்கும் வழிமுறைகளை கையாளலாம்.
    நீங்கள் இந்த இணையத்தளம் வழங்கும் மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பிறகு பிறகு மென்பொருளின் ஆய்வுக்கு சி.டி.யை உட்படுத்த வேண்டும். அப்போது இந்த மென்பொருள் பாதிக்கப்பட்ட சி.டி.யிலுள்ள தகவல்களை பெற்று தரும். அல்லது அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் உள்ள தகவல்களை நமக்கு பெற்று தரும். இதன் மூலம் நாம் சிக்கல் சி.டி.களில் இருந்தும் தகவல்களை பெறலாம். நண்பர்களே இன்னும் சிக்கல் விழுந்த சி.டி.க்களை தூக்கி வீசாமல் தகவல்களை பெற இந்த வழியில் முயற்சித்து பாருங்கள்.