Thursday 13 November 2014

லைட்டிங் எஃப்க்ட் கொடுப்பது எப்படி? – போட்டோஷாப்

ஒவ்வொருவருக்கும் போட்டோஷாப்பை எளிதாக்குவதே எமது நோக்கம்.. படத்தில் உள்ளது போல் உங்கள் படத்தை லைட்டிங் எஃபக்ட் கொடுத்து அழக கூட்டலாம்.. எப்படி என்று பார்போமா?
 உங்களுக்கு தேவையான புகைப்படத்தை போட்டோஷாப்பில் கொண்டு வாருங்கள்.அதை டூப்ளிகேட் செய்து கொள்ளவும்.. (Ctrl+J)
டூப்ளிகேட் லேயரை செலக்ட் செய்து கொள்ளவும்..  (இங்கு படத்தை டூப்ளிகேட் செய்வது, எதற்கென்றால் ஒரிஜினல் புகைப்படம் எக்காரணம் கொண்டு சேதமடையாமல் இருப்பதற்காகத்தான்)
முதலில் பில்டர்(Filter) செல்லவும்..
அங்கு உருவாகும் மெனுவில் Render தேடவும்.. அதில் விரியும் மெனுவில் Lighting Effects.. என்றிருக்கும்.. அதை கிளிக் செய்யவும்..
கிளிக் செய்தவுடன் இதைப்போன்ற விண்டோ ஒன்று திறக்கும்..
 1. படத்தில் காட்டியுள்ளபடி Style என்றிருக்கும் இடத்தில் Blue Omni – யை தேர்வு செய்யவும்..2. light type -ல் Spotlight -ஐ தேர்ந்தெடுக்கவும்.. On என்ற இடத்தில் டிக் கொடுக்கவும்..படத்தில் உள்ளது போல் மற்ற  அளவுகளை கொடுக்கவும்..
3. தங்களுக்கு எந்த திசையில் லைட்டிங் எஃப்க்ட் கொடுக்க வேண்டுமோ அதற்கான திசையில் திருப்பவதற்கு ஏதுவாகவும், ஒளியை விரவுவதற்கும் மையப்புள்ளிகள் கொடுக்கப்பட்டியிருக்கும்.. அதில் பாய்ண்ட்ரை வைத்து இழுத்தால் அதற்கு தகுந்த மாதிரி விரிவுபடுத்தலாம்.. சுருக்கலாம்.. தங்களின் ரசனைக்கேற்ப படங்களை ஒளிவிளைவு (Light Effect) கொடுத்து கொண்டாடுங்கள்…மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்
இறுதியாக படம் இப்படிக் காட்சியளிக்கும்..
பாருங்கள் வித்தியாசத்தை.. கூறுங்கள் தங்களின் மேலான கருத்துக்களை.. புரியவில்லை என்றால், தெளிவாக இல்லையென்றால் சுட்டிக்காட்டவும்..

போட்டோஷாப் மூலம் எளிமையாக படங்களுக்கு பார்டர் அமைப்பது எப்படி?

இது ஒரிஜினல்
இந்தப் படம் பார்டர் கொண்டுவந்த பிறகு
போட்டோஷாப்பில் எளிமையாக பார்டர் அமைப்பது (ஓரங்களை அழகுப்படுத்துவது ) எப்படி எனபதைப் பார்ப்போம்..!
 முதலில் தங்களுக்குத் தேவையான படங்களை (அ) படத்தை போட்டோஷாப்பில் திறந்து வைத்துக்கொள்ளவும்..
ரெக்டேங்கிள் (Rectangle Marquee)  மார்க்யூ டூல் செலக்ட் செய்து கொள்ளவும்.
தங்களுக்கு எந்த அளவு பார்டர் தேவையோ அந்த அளவுக்கு செலக்ட் செய்துகொள்ளவும்… இவ்வாறு தேர்வு செய்த பிறகு கண்ட்ரோல் + ஐ (ctrl+I) கொடுக்கவும்..

டாப் மெனுவில் இருக்கும் Filter ஃபில்டர் மெனுவிற்கு செல்லவும். அதில் 
 Distort  ==> Ripple அல்லது Ocean ripple சென்று கிளிக் செய்தால் இப்படி ஒரு விண்டோ திறக்கும்.
படத்தில் உள்ளபடி செட்டிங் செய்துகொள்ளவும்
பிறகு ok கொடுக்கவும்..
இவ்வாறு இருக்கும்…
இறுதியாக படத்தை Jpeg பைலாக சேமித்து வைத்துக்கொள்ளவும்..
அழகான பார்டர் உங்களுக்கு கிடைத்திருக்கும்.
இப்படி..! என்ன எளிமையாக இருக்கிறதா? இல்லையா..? என்பதை சொல்லத் தவறாதீர்கள்..!
இதைப்போன்றே டிசைன் செய்த புகைப்படங்கள்.
ஏன் யோசிக்கீறீங்க முயற்சி வேண்டியதுதானே..!!

வித விதமான மேகக்கூட்டங்களை உருவாக்கலாம் – போட்டோஷாப்

புதியவர்களே!
போட்டோஷாப் பற்றிய ஆர்வம்தான் இந்தப் பதிவின் மூல காரணம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்…
முதலில் போட்டோஷாப்பில் புதிய பைலை திறந்து கொள்ளுங்கள்..! உங்கள் வசதிக்கேற்ப நீள அகலங்களை வைத்துக்கொள்ளுங்கள்..
நான் 500×500 pixel வைத்துள்ளேன்.
ஒரு எளிய முறைதான் இது..! போட்டோஷாப்பில் பேக்ரவுண்ட் , போர்கிரவுண்ட் வண்ணங்களை கருப்பு வெள்ளையாக இருக்கட்டும்..அப்படி இல்லையெனில் ctrl+D ஒரு சேர அழுத்தவும்.
இப்பொழுது Filter —->Render—>clouds அழுத்தவும்…
ஹயா.. மேகக்கூட்டம் உருவாகிட்டோம்..! பார்த்தீங்களா எவ்வளவு எளிமையா இருக்குன்னு…!
அதேபோல் பேக்ரவுண்ட் மற்றும் போர்கிரவுண்ட் வண்ணங்களை நீங்கள் மாற்றி கலர்புல்லான மேகக்கூட்டங்களை உருவாக்கலாம்..!

Monday 27 October 2014

ALL MOBILE GPRS SETTING

இணைய வசதி இன்று சின்னஞ்சிறு கிராம் வரை பரவியுள்ளது, இதற்கு காரணம் மொபைல் போன் வசதி ஆகும். இந்த மொபைல் போன்களின் துணைக்கொண்டு இணையப்பக்கங்களை நம்முடைய மொபைல் போன்களில் பார்வையிட முடியும். இந்த இணைய வசதியினை பெறவேண்டுமெனில்  நம்முடைய மொபைல் போனில்  GPRS  வசதி இருக்க வேண்டும். மேலும் அதில் இணைய வசதியானது ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு மொபைல் புரவைடர்களும் தனித்தனி செட்டிங்குகள் வழங்குகிறனர். அவைகளை நாமே நம்முடைய மொபைல் போனில் உருவாக்கி கொள்ள முடியும். ஒரு சில பொபைல் புரவைடர்கள் இந்த இணைய வசதிகளை அளிக்கிறனர்.
1.Airtel
Airtel Live settings
Account Name Airtel live
Access Point Name airtelfun.com
Username
Password
Proxy server Address 100.001.200.099
Proxy Port 8080
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com
Airtel Mobile Office settings  
Account Name : Mobile Office
Access Point Name airtelgprs.com
Username
Password 
Proxy server Address
Proxy Port
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com
2.Vodafone 
 Vodafone Live GPRS settings
Account Name Vodafone Live live
Access Point Name portalnmms
Username
Password
Proxy server Address 10.10.1.100
Proxy Port 9401
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com
3.Aircel
Aircel GPRS settings
Account Name Aircel
Access Point Name aircelgprs.pr (postpaid customers use aircelgprs.po)
Username
Password
Proxy server Address
Proxy Port
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com

Aircel PockerInternet settings

Account Name Aircel
Access Point Name aircelwap.pr
Username
Password
Proxy server Address 192.168.35.201
Proxy Port 8081
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com
4.Idea
Idea GPRS settings
Account Name idea_gprs
Access Point Name imis
Username
Password
Proxy server Address 10.4.42.15
Proxy Port 8080
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://wap.ideafresh.com
Idea Internet Settings

Account Name idea_internet
Access Point Name internet
Username
Password
Proxy server Address
Proxy Port
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com
5.Tata Docomo

Tata Docomo GPRS settings

Account Name tata docomo internet
Access Point Name tata.docomo.internet
Username
Password
Proxy server Address
Proxy Port
Data bearer GPRS
Authentication Type Off
Homepage http://internet.tatadocomo.com
Tata Docomo Dive In Settings


Account Name tata docomo dive in
Access Point Name tata.docomo.dive.in
Username
Password
Proxy server Address 10.124.94.7
Proxy Port 8080
Data bearer GPRS
Authentication Type Off
Homepage http://divein.tatadocomo.com
6.Reliance

 Reliance GPRS settings

Account Name smartnet (smartwap for wap users)
Access Point Name smartnet (smartwap for wap users)
Username
Password
Proxy server Address 97.253.29.199
Proxy Port 8080
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com
இனி நீங்களே உங்களுடைய மொபைல் போனில் செட்டிங்குகளை உருவாக்கி மொபைல் மூலமாக வலைப்பக்கங்களை பார்வையிடவேண்டும்.
குறிப்பு: உங்களுடைய சிம்கார்டில் GPRS வசதி ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பென்டிரைவ் மூலம் உங்கள் கணணியை லாக் செய்வது எப்படி.?

பென்டிரைவ் மூலம் உங்கள்உங்கள் வீட்டின் பூட்டிற்கு சாவி இருப்பதைப் போல…உங்களுடைய காருக்கு சாவி இருப்பதைப் போல. உங்களுடைய பெட்டி, பீரோவின் பாதுகாப்பிற்கு பூட்டு-சாவி இருப்பதைப் போன்று உங்களுடைய கம்ப்யூட்டருக்கும் ஒரு பூட்டுச்சாவி இருந்தால்… நன்றாகத்தானே இருக்கும்.
அந்த சாவி இல்லாமல் கம்ப்யூட்டரை ஓப்பன் செய்யவே முடியாது. நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு USB பென்டிரைவ் மூலம் இதைச் செய்யலாம். பென்டிரைவ் என்பது கோப்புகளை சேமிக்கப் பயன்படும் ஒரு Removable Device. அதை எப்படி சாவியாக பயன்படுத்த முடியும்? என்ற கேள்வி எழுகிறதா?
முடியும் நண்பர்களே..!
இதற்கென இணையத்தில் ஒரு புரோகிராம் இருக்கிறது. அந்த புரோகிராமிற்கு பெயர் பிரிடேட்டர் (Predator). இது முற்றிலும் இலவசமான புரோகிராம். இனி உங்களிடம் உள்ள பென்டிரைவை, கம்ப்யூட்டரில் உள்ள USB போர்ட்டில் செருகினால் மட்டுமே உங்களுடைய கம்ப்யூட்டர் பயன்படுத்த முடியும்.
மற்றவர்கள் பயன்படுத்தவே முடியாது. அப்படியே பயன்படுத்த நினைத்தாலும் அக்சஸ் டினின்ட் (Access denied )அதிலிருந்து எடுத்துவிட்டால் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முடியாது?
இந்த புரோகிராமை பயன்படுத்தி உங்களுடை பிளாஷ் டிரைவை எப்படி கம்ப்யூட்டர் திறவுகோலாகப் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
1. Predator என்று கூகிளில் தேடி இந்த புரோகிராமை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.
2. பிரிடேட்டர் மென்பொருள் இயங்கத்தொடங்கியவுடன், உங்களுடைய பென்டிரைவை கம்ப்யூட்டரில் இணைக்கவும்.
3. இணைத்தவுடன் ஒரு டயலாக்ஸ் பாக்ஸ் கிடைக்கும். பாஸ்வேர்ட் அமைத்திட கேட்கும். OK கொடுக்கவும்.
4. அடுத்து Preferences என்ற ஒரு விண்டோ கிடைக்கும். அதில் New Password என்றிருப்பதில் நீங்கள் மட்டும் தெரிந்துகொள்ளக்கூடிய வித்தியாசமான பாஸ்வேர்ட் ஒன்றை கொடுக்கவும்.
5. அடுத்துள்ள ஆல்வேஸ் ரெக்கொயர்ட் (Always Required) என்ற வாசகம் உள்ளதில் டிக் மார்க் ஏற்படுத்துங்கள். (இந்த செட்டிங்கானது நீங்கள் ஒவ்வொரு முறையும் கம்ப்யூட்டரில் பிளாஷ் டிரைவை செருகும்போதும் கம்ப்யூட்டர் பாஸ்வேர்ட் கேட்பதற்காக.)
6. அடுத்துள்ள ஃப்ளாஸ் டிரைவ் என்ற பிரிவில் உங்களுடைய பிளாஸ் டிரைவினைத் தேர்ந்தெடுக்கவும்.
7. இறுதியாக கிரியேட் கீ — Create key என்பதை அழுத்தி ஓ.கே கொடுத்து வெறியேறவும்.
அவ்வளவுதான் முடிந்தது. பிரிகேட்டர் புரோகிராமினை நீங்கள் சரியாக செட் செய்துவிட்டீர்கள். இப்பொழுது டாஸ்க் பாரில் பார்த்தால் பிரிகேட்டர் புரோகிராமின் ஐகான் இருக்கும். அதை அழுத்தினால் ஒரு சில வினாடிகளில் அந்த ஐகான் ஆனது பச்சை நிறத்தில் ஒளிர ஆரம்பிக்கும். பச்சை நிறமாக மாறியதும் பிரிகேட்டர் புரோகிராம் இயங்கத் தொடங்கிவிட்டது என்று புரிந்துகொள்ளுங்கள்.
30 வினாடிகளுக்கு ஒரு முறை பிரிகேட்டர் புரோகிராம் ஃப்ளாஷ் டிரைவ் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ளதா என சோதனையிடும். இணைப்படவில்லை என்றால் உங்களுடைய கம்ப்யூட்டரின் திரையின் வெளிச்சம் குறைந்து இயக்கம் நின்றுவிடும். இப்புரோகிராமின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்த டாஸ்க் பாரில் பாஸ் மானிட்டரிங் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் Computer log செய்து இருக்கும்போது யாராவது பயன்படுத்த முயற்சி செய்தால் அதனை நீங்கள் கம்ப்யூட்டர் இயக்குகையில் டாஸ்க் பார் மெனுவில் உள்ள வியூ லாக் (View Log) மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
நீங்கள் உங்களுடைய கம்ப்யூட்டரில் பணிபுரிந்து முடிக்கும் வரை பென்டிரைவயும் USB Port -ல் இணைந்திருக்க வேண்டும்
இதற்காகவே ஒரு USB Drive வை நீங்கள் தனியாக பயன்படுத்த வேண்டும். அந்த யூ.எஸ்.பி. டிரைவ்தான் உங்கள் கம்ப்யூட்டருக்கு சாவி.
ஒவ்வொரு முறையும் கம்ப்யூட்டரை இயக்க விட்டு, இந்த சாவியை செருகினால்தான் கம்ப்யூட்டர் திறக்கும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட USB Port-கள் உங்கள் கணினியில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இந்த சாவி செருகியிருக்கும்போது வேறு ஏதேனும் யூ.எஸ்.பி. டிரைவில் பைல் சேமிக்க வேண்டுமெனில் மாற்று யூ.எஸ்.பி போர்ட் கண்டிப்பாக உங்கள் கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும்.
முக்கியமான குறிப்பு: பிரிகேட்டர் புரோகிராம் மூலம் செட் செய்த யூஸ்.எஸ்.பி டிரைவை கம்ப்யூட்டரிலிருந்து நீக்கினால் உங்களுடைய கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்திவிடும் என்பதை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்…!
இம்மென்பொருளை தரவிறக்கம் செய்ய : Click Here

கம்ப்யூட்டர் கீ போர்டில் இல்லாத குறியீடுகள்…

images(2)
கம்ப்யூட்டர் கீ போர்டில் இல்லாத குறியீடுகள்…
Alt + 0153….. ™… trademark symbol
Alt + 0169…. ©…. copyright symbol
Alt + 0174….. ®….registered trademark symbol…
Alt + 0176 …°……degree symbol
Alt + 0177 …±….plus-or -minus sign
Alt + 0182 …¶…..paragraph mark
Alt + 0190 …¾….fraction, three-fourths
Alt + 0215 ….×…..multi ¬plication sign
Alt + 0162…¢….the cent sign
Alt + 0161…..¡….. .upside down exclamation point
Alt + 0191…..¿….. upside down question mark
Alt + 1………..smiley face
Alt + 2 ……☻…..black smiley face
Alt + 15…..☼…..sun
Alt + 12……♀…..female sign
Alt + 11…..♂……male sign
Alt + 6…….♠…..spade
Alt + 5…….♣…… Club
Alt + 3…………. Heart
Alt + 4…….♦…… Diamond
Alt + 13……♪…..eighth note
Alt + 14……♫…… beamed eighth note
Alt + 8721…. ∑…. N-ary summation (auto sum)
Alt + 251…..√…..s quare root check mark
Alt + 8236…..∞….. infinity
Alt + 24…….↑….. up arrow
Alt + 25……↓…… down arrow
Alt + 26…..→…..right arrow
Alt + 27……←…..left arrow
Alt + 18…..↕……up/down arrow
Alt + 29……↔…left right arrow
கருத்துகள் வரவேற்க படுகின்றன
நன்றி