Saturday, 26 October 2013

விண்டோஸ் 8க்கான ஷார்ட்கட் கீகள்

விண்டோஸ் 8 அடிப்படையில் தொடுதிரையை மையமாகக் கொண்டு தொடு உணர் நிலை இயக்கத்தினைக் கொண்டதாகும்.
இருப்பினும் இதனை மவுஸ் மற்றும் கீ போர்டு மூலமும் இயக்கலாம்.
இதில் பல ஷார்ட்கட் கீ தொகுப்புகள் பயன்படுத்தப்பட்டாலும், சிலவற்றை விண்டோஸ் 8 பயன்படுத்துவோர் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
தேடல்
Win + F: மெட்ரோ பைல்ஸ் சர்ச் மெனுவினைப் பெற.
Win + Q: மெட்ரோ அப்ளிகேஷன்கள் சர்ச் மெனுவினைப் பெற.
Win + W: மெட்ரோ செட்டிங்ஸ் சர்ச் மெனு பெற.
Win + . (முற்றுப் புள்ளி):அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனை, இடது, வலது மற்றும் முழுமையாக இழுத்து ஓரத்தில் வைக்க.
Win + , (கமா) டெஸ்க்டாப்பில் ஏரோ பீக்(Aero peek) பெற.
சார்ம்ஸ் மெனு
Win + C: உங்கள் திரையின் வலது பக்கம் சார்ம்ஸ் மெனுவினைக் கொண்டு வர.
ஸ்விட்ச் மெனு
Win + Tab: உங்கள் திரையின் இடது போர்டில் இருந்து ஸ்விட்ச் லிஸ்ட்(Switch List) திறக்க.
பேனர்கள்
Win + I (டி எழுத்து) அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனுக்கான, Settings panel திறக்க.
Win + H - ஷேர் பேனல் (Share panel) திறக்க.
Win + K - புரஜக்டர் அல்லது இன்னொரு மானிட்டரை இணைக்க டிவைசஸ் பேனலைத் (Devices panel) திறக்க.
அப்ளிகேஷன் பார்
Win + Z -அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனுக்கான அப்ளிகேஷன் பாரினைத் திரையின் கீழ் அல்லது மேல் பகுதியிலிருந்து திறக்க.
ஸ்கிரீன் ஷாட்
Win + Print Scrn - இந்த கீகளை அழுத்துகையில் திரைக் காட்சி ஒரு படமாக எடுக்கப்படுவதுடன், அதனை PNG பார்மட்டில், கம்ப்யூட்டரில் உள்ள Pictures போல்டரில் பதிந்து வைக்கிறது.

ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

நாம் பெரும்பாலும் ஒரு மெயில் Compose செய்யும்போது அதை அனுப்ப To என்ற Field இல் நண்பர்களின் மெயில் ஐ‌டிக்களை கொடுப்போம்.
ஆனால் இது மட்டும் Send செய்ய உள்ள வழி அல்ல, மேலும் இரண்டு வழிகள் உள்ளன. அவைதான் Cc, Bcc.
சரி இவற்றை எப்படி பயன்படுத்துவது??
Cc: Carbon Copy
நாம் எப்போது ஒரு மெயிலை இரு வேறு நபர்களுக்கு ஒரே வேலைக்கு அனுப்ப நினைக்கிறோமோ அப்போது இதனை பயன்படுத்தலாம். To field இல் முதல் நபர் ID யும், Cc யில் மற்றவர்கள் மெயில் ID யும் இதற்கு டைப் செய்ய வேண்டும்.
Cc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா(,) போடவும்.
இந்த மெயிலை படிப்பவர் To, Cc என இரு Field லும் உள்ள மெயில் ID க்களை காண இயலும்.
இது எந்த இடத்தில் பயன்படும் என்றால், உங்கள் மேலதிகாரிக்கு ஒரு மெயில் அனுப்ப வேண்டும் அதையே வேறு சிலருக்கும் அனுப்ப வேண்டும் என்றால் To வில் மேலதிகாரி ஐ‌டி, Cc யில் மற்றவர் ஐ‌டி.
இதற்கும் To field க்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
Bcc: Blind Carbon Copy
நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது Bcc யில் அனுப்ப வேண்டிய நபர்களின் பெயரை கொடுத்து இருந்தால் யார் படிக்கிறாரோ அவர் ID யும் மட்டுமே தெரியும். அநாவசியமான மற்றவர்கள் ID அவர்களுக்கு தெரியாது.
இது பாதுகாப்பானதும் கூட. இது Newsletter, மற்றும் பலருக்கு அனுப்பும் போது பயன்படும்.
Bcc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா(,) போடவும்.
Bcc பயன்படுத்தும் போது To வில் கட்டாயமாக எதுவும் நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.


 

நீங்கள் பேஸ்புக்கிற்கு அடிமையானவரா? இதோ உங்களுக்கு ஓர் அதிர்ச்சி தரும் தகவல்

தொடர்ச்சியாக பேஸ்புக் தளத்தினை பயன்படுத்திவருபவர்கள் தமது வாழ்வில் துக்கம் நிறைந்தவர்களாக வரக்கூடிய சாத்தியம் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
Michigan பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போதே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்விற்காக வயது வந்த 82 பேர் சிறு குழுவாக சேர்த்து பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களை நாள் ஒன்றிற்கு 5 தடைவைகள் வீதம் 2 வாரங்களாக அவதானித்த பின்னர் கிடைத்த தகவல்களை ஒன்று திரட்டிய போது,
பேஸ்புக் பயன்படுத்துகின்ற சந்தர்ப்பங்களில் பெரும்பாண்மையானவர்கள் தனிமையில் இருப்பதாகவும்,
பேஸ்புக் பாவனையின் பின்னர் தமது சொந்த வாழ்க்கையில் இழந்த நேரங்களை நினைத்து கவலைப்படுவதாகவும் முடிவுகள் கிடைத்துள்ளது.
இதேவேளை நாள்தோறும் ஒரு பில்லியனுக்கு மேற்பட்டவர்கள் பேஸ்புக் தளத்தினை பயன்படுத்துவதாகவும் குறித்த பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பேஸ்புக் ஷார்ட் கட் கீகள் & யூடியூப் ஷார்ட்கட் கீகள்


பேஸ்புக் தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீகள்
Alt+1 - Facebook Home Page
Alt+2 - Your Profile Page
Alt+3 – Friend’s Request
Alt+4 – Inbox (Message)
Alt+5 – Notifications
Alt+6 - My Account
Alt+7 – Privacy Settings
Alt+8 – Facebook Fans Page
Alt+9 - Terms and Conditions
Alt+0 – Help
யூடியூப் ஷார்ட்கட் கீகள்
Spacebar – Start/Stop The Video
Left Arrow – Rewind The Video
Right Arrow – Previous Video
Up Arrow - Increase Sound
Down Arrow – Descres Sound
F key – Full Screen

IP Address-யை கண்டறிய வேண்டுமா?

இணையத்தை பயன்படுத்தும் பலருக்கும் இணையம் என்பது ஒரு புரியாத புதிராக இருக்கலாம்.
இணையத்தை பயன்படுத்தும் போது நம் இணைப்பிற்கென ஒரு IP Address தரப்படுகிறது.
இந்த முகவரியை இரண்டு விதமாக அறிந்து கொள்ளலாம்.
முதல் வழி
1. முதலில் Network Sharing Center என்பதனைத் திறந்து கொள்ளவும்.
இதனை திறப்ப்தற்கு உங்களுடைய டாஸ்க் பாரில் உள்ள சிஸ்டம் ட்ரேயில், நெட்வொர்க்கிங் ஐகான் இருந்தால், அதனை கிளிக் செய்து Open Network and Sharing Center என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
அல்லது ஸ்டார்ட் பட்டனில் கிளிக் செய்து கிடைக்கும் தேடல் கட்டத்தில், network and sharing center என டைப் செய்திடவும். இதற்கான லிங்க் கிடைத்தவுடன் அதில் கிளிக் செய்திடவும்.
2. இப்போது Network and Sharing Center கிடைக்கும். இங்கு Local Area Connection என்பதில் கிளிக் செய்திடவும் அல்லது உங்கள் இணைய இணைப்பிற்கு ஒரு பெயரினைக் கொடுத்திருந்தால் View your active networks என்பதன் கீழாக அது காட்டப்படும், அதில் கிளிக் செய்திடவும்.
3. Status என்ற டயலாக் பாக்ஸ் காட்டப்படுகையில், Details என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Network Connection Details என்ற டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.
இதில் அப்போதைய இணைப்பிற்கான ஐ.பி. முகவரியும், அதன் தொடர்பான தகவல்களும் கிடைக்கும். இந்த தகவல்களில், நீங்கள் பெற்றிருக்கும் இணைப்பின் காலம், காலம் காலாவதியாகும் நாள், சேவை நிறுவன முகவரி, சர்வரின் முகவரி ஆகியவை காட்டப்படும்.
இரண்டாவது வழி
1. ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்திடவும்.
2. இங்கு cmd /c ipconfig & pause என டைப் செய்து எண்டர் தட்டவும்.
3. இது டாஸ் கட்டளைப் புள்ளி ஒன்றைக் காட்டும். நாம் கேட்ட தகவல்கள் இங்கு தரப்பட்டிருக்கும். ஏதேனும் ஒரு கீயை அழுத்தினால், இந்த டாஸ் கட்டம் மூடப்படும்.
4. மேலே சொன்னபடி நெட்வொர்க் குறித்த கூடுதல் தகவல்கள் தேவைப்படின் cmd /c ipconfig /all & pause என கட்டளை அமைத்து எண்டர் தட்டவும்.
5. நேரடியாக டாஸ் கட்டம் பெற்று, தேவையான தகவல்களைப் பெற ipconfig or ipconfig/all என்றபடியும் கட்டளைகளை அமைத்துப் பெறலாம்.

அன்ரோய்ட்களுக்கான யூ டியூப் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி

தற்போது மியூசிக் பிரியர்கள் அதிகளவில் மொபைல் சாதனங்களை பயன்படுத்தி வருவதனால் அன்ரோய்ட் இயங்குதளத்தினைக் கொண்ட சாதனங்களில் பயன்படுத்தப்படும் யூ டியூப் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றது.
அதாவது எப்போதும் ஒன்லைன் மூலம் பாடல்களை கேட்டு மகிழ்வதற்காக பின்னணியில் பாடல்கள் ஒலிக்கும் வண்ணம் (Background Music) புதிய யூ டியூப் அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.
Background Audio என அழைக்கப்படும் இந்த புதிய அப்பிளிக்கேஷன் ஸ்மார்ட் கைப்பேசி அல்லது டேப்லட்களினை நிறுத்தும் வரைக்கும் (Off) இயங்கக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

தீபாவளி
பண்டைய பண்டிகையா ? பகட்டு பண்டிகையா ?
தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது.
எதற்கு இந்த தீபாவளி ? என்ன செய்கிறோம் நாம் ?
தீபாவளி என்பது ஏதோ ஒரு கேளிக்கை தினமாக மாறிவிட்டது. பலருக்கு எட்டு மணிக்கு எழுந்து, தொலைக்காட்சிகளில் "சின்ன திரையில் முதல் முதலாக" என்று திரைப்படங்களை பார்க்கும் நாளாக அது மாறிவிட்டது. மற்ற சிலருக்கோ தன் அபிமான கதாநாயகர்களின் படம் வரும் நாள். வேறு சிலருக்கோ, ஊர் அறிய உயர்ந்த விலை உடைகள் அணிந்து, சீனத்து பட்டாசுகள் கொண்டு பலரை உறைய வைக்கும் நாள். பல நடுத்தர வர்கத்தினருக்கு, அது பனப் பிரச்சினைகளை கொண்டு வரும் நாள். பல சிறுவர்கள் பக்கத்து வீட்டு பங்களாவின் பட்டாசு ஓசைகளை ஏக்கத்தோடு பார்க்கும் நாள். ஏன் தான் தீபாவளி வருகிறதோ என்று பலர் அங்கலாய்பதும் உண்டு.
ஆக மொத்தத்தில் தீபாவளி என்பது ஒரு பகட்டு பண்டிகையாக மாறிவிட்டது. அதன் ஆன்மீக அடிப்படைகள் அழிந்து போய், ஆர்பாட்டம் மட்டுமே ஓங்கி ஒலிக்கிறது.
எத்தனை பேர் தீபாவளி அன்று விடிவதற்கு முன் நல்லென்னையில் குளிக்கிறார்கள் ? எத்தனை பேருக்கு தீபாவளி அன்று விடியும் வரை தங்கள் வீட்டு தண்ணீரில் கங்கை குடிவருகிறாள் என்று தெரியும் ? எத்தனை பேர் தீபாவளி அன்று விடிவதற்கு முன் கோவிலுக்கு செல்கிறார்கள் ? எத்தனை கோவில்கள் தீபாவளி அன்று விடிவதற்கு முன் திறக்கப்படுகின்றன ? விடிய விடிய தீபாவளி விடிந்து போனால் கோமாளி என்று சொல்வ‌து எத்தனை உண்மை ? விடிந்த பிறகு நமக்கு (தெற்கில்) தீபாவளியே இல்லையே ?
தீபாவளியை நாம் விடிகாலை கொண்டாடுவோம். நம் பாரம்பரியத்தை புனரமைப்போம். விடிவதற்கு முன்னேயே பட்டாசு வெடித்து கொண்டாடுவோம். மத்தாப்புகளும், புஸ்வானமுமாக அனைவரின் வாழ்வும் பூக்கட்டும். வெடிகளை குறைப்போம், உள்ளூர் பட்டாசுகளை அவை எத்தனை பழமையான‌து என்றாலும் பயன் படுத்துவோம்.
முக்கியமாக அந்த பொன்னாளில் யாரேனும் ஒரு ஏழைக்காவது உதவுவோம். யாரேனும் ஒருவர் வாழ்விலாவது தீப ஒளியை ஏற்றுவோம்.
அப்போதுதான் தீமையை அழித்து நன்மையை கொண்டு வரும் இந்த நாளை நாம் நிஜமாகவே உயர்பெற செய்ய முடியும்.

நானும் கிருமி கண்ட சோழன்


அன்பு நண்பர்களே ,

இது க‌ம்யூட்ட‌ர் உல‌க‌ம் . க‌ம்யூட்ட‌ர் இணைய‌ தொட‌ர்புக்குள் வ‌ரும் போது என்ன வேண்டுமானாலும் செய்ய‌லாம் என்ற‌ நிலையில் உள்ளோம் . கூட‌வே ஆப‌த்தும் சேர்ந்துதான் வ‌ருகிற‌து . வைர‌ஸ் என்ற‌ வ‌டிவில் தான் வ‌ருகிற‌து . இணைய‌த்தில் க‌வ‌ன‌மாக‌ இருக்க‌ வேண்டும் .

கம்பியூட்டர் வைரஸ் இது உலக மகா பிரச்சினை , இது வந்த பின் தடுப்பதை விட வரும்முன் தடுப்பது எப்படிஎன்று பார்ப்போம்.

எப்படி ஒரு கம்ப்யூட்டர் வைரஸ் புரோகிராமினைப் பெறுகிறது?


1. ஏற்கனவே வைரஸ் புரோகிராம் புகுந்த பைல்களை காப்பி செய்வது.
2. வைரஸ் கெடுத்த புரோகிராம்கள் அல்லது டேட்டா பைல்களைக் கம்ப்யூட்டருக்குள் கொண்டு வருவதன் மூலம்.
3. இன்டர் நெட்டிலிருந்து தகவல்கள் மற்றும் புரோகிராம்களை காப்பி செய்வதன் மூலம்.
4. இமெயில் கடிதங்கள் மூலம் ஒற்றிக் கொண்டு வருதல். வைரஸ் புரோகிராமினை நீக்குவது என்பது நேரத்தையும் நம் உழைப்பையும் அதிகமான அளவில் எடுத்துக் கொள்ளும் செயலாகும்.

இப்போது புது வித‌மான‌ வைர‌ஸ் வ‌ருகிற‌தாம் . அது என்ன‌

இமெயில் ( மின் அஞ்ச‌ல் )மூல‌ம் வ‌ருகிற‌தாம் .

உங்க‌ளுக்கு ப‌வ‌ர் பாய்ண்ட் ப்ரெச‌ன்டேச‌ன் ஃபைல் எதாவ‌து உங்க‌ளுக்கு மெயில் வந்தால் உட‌னே அந்த‌ மெயிலை எந்த‌ கார‌ண‌த்துக்கும் உட்ப‌டாம‌ல் திறக்காமல் உட‌னே அழித்து விடுங்க‌ள் .

அந்த‌ மெயிலில் என்ன‌ ச‌ப்ஜெக‌ட் என்றால்

'Life is beautiful.'
If you open this file, a message will appear on your screen saying:
'It is too late now, your life is no longer beautiful.'

இந்த‌ வைர‌ஸ் வ‌ந்தால் உங்க‌ள் க‌ண‌னியில் உள்ள‌ முக்கிய‌ ஃபைல்க‌ளை அழித்து விடும் .

அப்புற‌ம் உங்க‌ள் மெயில் ஐடி பாஸ்வேர்ட் அழிந்து விடும் . ஆக‌வே க‌வ‌ன‌மாக‌ இருங்க‌ள் .

இந்த புதிய வைர‌ஸ் க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளாக‌ உலா வ‌ருகிற‌தாம் .

இந்த‌ த‌க‌வ‌லை மைக்ரோசாப்ட் ம‌ற்றும் நார்த்த‌ன் ஆன்டி வைர‌ஸ் நிறுவ‌ன‌மும் தெரிவித்துள்ள‌ன‌ .

ஆக‌வே உங்க‌ள் க‌ம்யூட்ட‌ருக்கு த‌க்க‌ ஆன்டி வைர‌ஸ் ப்ரொகிராமிட்டு பாதுகாத்துக் கொள்ளுங்க‌ள் .

Saturday, 19 October 2013

ஆன்ட்றாய்ட் தொலைபேசிகளில் தமிழ் எழுதுவது படிப்பது எப்படி ?

இன்றைய காலகட்டத்தில் ஆன்ட்ராய்ட் தொலைபேசிகளை பயன்படுத்தும் தமிழ் பேசுபவர்களாகிய நாம்   ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற பிரச்சினை தமிழில் எழுதுவது, படிப்பது தான். இனி அந்த பிரச்சினை உங்களுக்கு வேண்டாம்.  உங்களுக்கு ஆன்ட்றாய்ட் தொலைபேசிகளில் தமிழ் எழுதுவது படிப்பது பற்றி நான் இன்றைய பதிவில் சொல்லி தர போகிறேன்.

ஆண்ட்ராய்டில் தமிழில் எழுதுவதற்கு :

ஆன்ட்ராய்ட்டில் தமிழில் எழுதுவதற்கு பல்வேறு அப்ளிகேசன்கள் இருக்கின்றன. அவற்றில் சில. 

நான் பயன்படுத்துவது எழுத்தாணி, அதனையே உங்களுக்கும் சொல்லி தருகிறேன். நீங்கள் Play Store சென்று எழுத்தாணி என்னும் அப்ளிகேஷனை தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். இந்த அப்ளிகேஷனை நிறுவிய பிறகு, ஆண்ட்ராய்டில் Settings > Language & Input பகுதிக்கு சென்று, அங்கே Keyboard & Input Methods என்ற இடத்தில் (Ezhuthani) இந்த அப்ளிகேஷனை டிக் செய்ய வேண்டும்.அதன் பின்னர் நீங்கள் எழுத துவங்கும் முன்பு திரையின் மேலே Swipe செய்து Choose Input Method என்று இருப்பதை Tap செய்யுங்கள்.அதன் பின்னர் நீங்கள் நிறுவிய அப்ளிகேஷனை Tap செய்யுங்கள். அவ்வளவு தான் இனி தமிழில் உங்களால் எழுத முடியும்.


ஆண்ட்ராய்டில் தமிழில் படிப்பதற்கு :


ஆண்ட்ராய்ட் ஐஸ்க்ரீம் சான்ட்விச் (Android 4.0 IceCream Sandwich) பதிப்பிலிருந்து தமிழ் எழுத்துக்களை மொபைலில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமலேயே எம்மால் படிக்க முடியும். அதற்கு முந்தைய பதிப்பான Gingerbread 2.3.6-ஆக இருந்தால், ஒரு சிறிய மாற்றத்தினை மட்டும் செய்தால் போதும். 

அதாவது Browser  Setting பகுதியில் Language என்ற இடத்தில் "Auto-Detect" என்று மாற்றினால் Browser ல் மட்டும் தமிழ் தளங்களை படிக்கலாம்.


எந்த ஒரு ஆண்ட்ராய்ட் பதிப்பாக இருந்தாலும் சரி Opera Mini உலாவியில் தமிழ் எழுத்துக்களை உங்களால் படிக்கமுடியும் அதற்கு நான் கீழே சொல்ல போகும் மாற்றங்களை மட்டும் நீங்கள் செய்தால் போதும்.


Opera Mini உலாவிக்கு சென்று அங்கே மேலுள்ள Address Bar இல் opera:config என டைப் செய்து Go என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து வருகின்ற பக்கத்தில்  Use bitmap fonts complex scripts என்னுமிடத்தில் No என்று இருப்பதை Yes என மாற்றம் செய்யுங்கள்.


Yes என மாற்றம் செய்த பின்னர் கீழுள்ள Save என்ற பட்டாணி அழுத்தி Save செய்து கொள்ளுங்கள்.

இனி உங்களது தொலைபேசிகளில் தமிழ் தளங்களை பார்வையிட முடியும். (கீழுள்ள படத்தினை கவனிக்க..)பதிவு பயனுள்ளது என நீங்கள் கருதினால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அந்தரங்க காட்சிகளை அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் எவ்வாறான தோற்றத்திலும் இருக்கலாம்!.. எச்சரிக்கை !

இன்றைய நவீன காலகட்டத்தில் பெண்களின் அந்தரங்க காட்சிகளை திருட்டுத்தனமாக படம் பிடித்து, அதை ஆபாச இணையதளங்களுக்கு விற்று பணம் சம்பாதிக்கும் இழிய கூட்டம்  பெருகிவருகிறது.இதற்காக அவர்கள் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கமெராக்களை பலவடிவங்களில் பயன்படுத்துகிறார்கள்.


விடுதிகள், லாட்ஜ்கள், புடைவை கடைகளின் பிட் ஒன் அறைகள் என பல இடங்களில் இவ்வாறான திருட்டு வீடியோக்கள் பிடிக்கப்படுகின்றன.

அவ்வாறான இடங்களில் இதுபோன்ற நவீன தொழிநுட்ப வசதிகளை கொண்ட பொருட்களை கண்டால் பெண்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்...

Picture 01

Picture 02

Picture 03

Picture 04

Picture 05

Picture 06

Picture 07

Picture 08

Picture 09

Picture 11

Picture 12

Picture 13

Picture 14

அழகான தோற்றத்திலும், நடனத்திலும் காணப்படும் வெள்ளைமயில்

பொதுவாக மயில்கள் அழகாகவும், காண்பவர்களின் கண்களைக் கவர்ந்தும் காணப்படும். இவற்றில் ஆண்மயில்கள் தன்னுடைய ஆடம்பரமான தோகையை விரித்து ஆடுவதைக் காணும் பொழுது அவற்றின் அழகு மேலும் அதிகமாகின்றன.
ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. தோகையில் வரிசையாகக் கண் வடிவங்கள் உள்ளன.
பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும், பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. நீண்ட தோகை பெண் மயில்களுக்குக் கிடையாது.
இவற்றையும் கடந்து வெள்ளைமயில் காணப்படுகின்றன. இவற்றைக் கண்டால் நல்ல அதிஷ்டம் என்பது பெரியோர்களின் கருத்து. அவ்வாறு காணப்படும் அதிஷ்டத்தினைத் தரும் வெள்ளைமயிலின் படத்தினைப் படத்தில் காணலாம்.