Wednesday, 26 March 2014

எப்போதெல்லாம் ப்ளாஷ் பயன்படுத்த வேண்டும். எங்கு பயன்படுத்த கூடாது?

 • எப்போதெல்லாம் ப்ளாஷ் பயன்படுத்த வேண்டும்

 • - இருட்டு இருக்கும் போது தெளிவான படங்களைக் கொணர
 • - அதி/வேகத்தில் நகரும் பொருளை "உறைந்த" நிலையில் எடுக்க
 • - ஒளி இரைச்சல் அதிகம் வரும் என்று தோன்றினால் அதை தவிர்க்க
 • - போர்ட்ரைட் படங்கள் எடுக்க ( முகம் எல்லாப் பக்கமும் தெளிவாக வரவேண்டும் என்ற முனைப்பிருந்தால் ). முடிந்த வரை ஒளி சுவர்களில் பட்டு எதிரொளிப்பது நல்லது.
 • - விளம்பர படங்களின் (தேவையான ) போது.
 • - மேக்ரோ போட்டோ எடுக்கும் போது
 • - நல்ல வெயில் நேரங்களில் மனிதர்களை / பொருட்களை புகைப்படம் எடுக்கும் போது ஃபிளாஷ் உபயோகித்தல் நலம். இல்லாவிட்டால் நிழல் படிந்த இடங்கள் ( முக்கியமாய் மூக்கு மற்றும் கண்களுக்கு அடியில்) கருப்பாகவும் மற்ற இடங்கள் நல்ல வெளிச்சத்துடன் இருக்கும். ஃபிளாஷ் வேண்டாம் என்று கரும் பட்சத்தில் மூக்கின் கீழும் கண்களின் கீழும் நிழல் விழாமல் இருக்கும் வகையில் பார்த்து எடுக்க வேண்டும்.


எங்கு பயன்படுத்த கூடாது?

 • - தொட்டிலில் இருக்கும் குழந்தைகள்
 • - முகம் அறியா மூன்றாம் மனிதர்கள்
 • - பறவைக் கூடுகளில்
 • - முகத்துக்கு மிக அருகில்
 • - உங்கள் கற்பனைத் திறன் பாதிக்கப் படும் இடங்களில். உதாரணத்துக்கு மெழுகுவத்தியின் வெளிச்சத்தில் அருமையாகக் காணும் பொருள் ஃப்ளாஷ் போட்டால் தட்டையாகப் போய் நீங்கள் கற்பனை செய்த வகையில் வராது.
 • - சில வழிபாட்டுத் தலங்கள்.
 • - தொல்பொருள் பாதுகாப்பிடம்
 • - இரவின் ஒளியை புகைப்படத்தில் சேகரிக்க நினைக்கும் போதுஃப்ளாஷ் எப்படி வேலை செய்கிறது ?

செறிவூட்டப் பட்ட மின்சாரத்தை ( கிட்ட தட்ட பல ஆயிரம் வோல்ட் ) xenon Gas நிரப்பப் பட்ட டிஸ்சார்ஜ் ட்யூப் ( நியான் பல்ப் பாத்திருப்பீங்களே அது மாதிரி இருக்கும் ) ஒரு முனைக்கு செலுத்தப் படும். டிரிக்கர் ப்ளேட் அடுத்த முனை (பாஸிடிவ் / நெகடிவ் மின்சாரம் ). அதிக செறிவூட்டப் பட்ட எதிர்மின்சாரம் டிரிக்கர் ப்ளேட்டில் ஏற்றப் படும் போது ionisation என்ற முறையில் அணுக்களின் நகர்வு இரு புறமும் ஏற்படுகிறது. செறிவூட்டப் பட்ட மின்சாரம் விடுவிக்கப் படும் போது மோதும் அணுக்களின் மூலம் ஏற்படும் ஆற்றலினால் அதிக ஒளி உண்டாகிறது. ஏறக்குறைய குழல் விளக்குகள் எப்படி வேலை செய்கிறதோ அதே முறையில். ஆனால் இங்கே மிக அதிக அளவில் மின்சாரம் செலுத்தப் படுகிறது.

MANUAL-இல் படம் எடுப்பது எப்படி?

Manual என்று நான் இங்கு குறிப்பிடுவது, லென்ஸ் விட்டம் அல்லது ஷட்டர் வேகம் அல்லது இரண்டையுமே நாமே தீர்மானித்து படம் எடுக்கும் முறையை சொல்கிறேன்.
முதலில் ஆட்டோ மோடை விட்டு விட்டு Av,Tv,M ஆகிய மோட்களில் படம் பிடிப்பதால் என்ன பயன் என்று தெரிந்துக்கொள்வோம்.
ஆட்டோ மோடில் கேமரா தனக்கு ஏற்றார்போல் எல்லா அளவுகளையும் நிர்ணயித்துக்கொள்ளும் என்பதால் நமக்கு வேண்டியபடி படம் எடுக்க வேண்டும் என்றால் அது சரிப்பட்டு வராது.உதாரணத்திற்கு உங்கள் படத்தில் மிகக்குறைந்த DOF-உடன் (shallow Depth Of Field) உங்கள் கருப்பொருள் தனித்து நிற்பது போன்ற படம் வேண்டும் என்றால்,அதற்கு நீங்கள் உங்கள் லென்ஸின் அதிக பட்ச விட்ட அளவை உபயோகித்துக்கொள்ள விரும்புவீர்கள்.
Lesser f number = wider aperture = shallow DOF
குறைந்த f நம்பர் = அதிக லென்ஸ் விட்டம் = குறைவான குவிய ஆழம்
ஆனால் ஆட்டோ மோடில் படம் எடுத்தால் உங்கள் இஷ்டப்படி உங்களால் லென்ஸின் விட்டத்தை நிர்ணயித்துக்கொள்ள இயலாது!! இது போன்று, நீங்கள் படம் எடுக்கும்போது உங்களுக்கு முழு சுதந்திரம் வேண்டுமென்றால் நீங்கள் Av,Tv,M ஆகிய மோட்களில் படம் எடுக்க பழகிக்கொள்வது நல்லது.
இது கற்பதற்கும் சுலபம்தான்,கூடவே சுவாரஸ்யமான விஷயமும் கூட. சிலருக்கு Manual என்ற பெயரை கேட்டாலே சற்றே தலை சுற்ற ஆரம்பித்து விடும்! எதற்கு இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் ,ஒரே ஒரு பொத்தானை அழுத்தினால் முடிந்துவிடக்கூடிய விஷயத்திற்கு இவ்வளவு மெனக்கெடுவானேன் என்று விட்டு விடுவார்கள். இந்த பதிவை பார்த்து சற்றே நேரம் செலவழித்து முயன்று பாருங்களேன். சரிப்பட்டு வரவில்லை என்றால் திரும்பவும் ஆட்டோ மோடிற்கே சென்று விடலாம்.முயன்று பார்த்தால் தான் என்ன ?? இதை கற்றுக்கொண்டால் ஒரு விஷயத்தை புரிந்துக்கொண்டு செய்யும் திருப்தியாவது கிடைக்கும். 

சரி!! ஆரம்பிப்பதற்கு முன் நம்மிடம் தேவையான பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாமா? முதலில் வேண்டியது ஒரு கேமரா! அதில் Av,Tv,Manual ஆகிய மோட்களில் படம் எடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அதன் பின் உங்கள் கேமராவில் வெவ்வேறு அளவுகளை மாற்றிக்கொள்வது எப்படி என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்!! தெரியவில்லை என்றால் உங்கள் கேமராவின் செயல்குறிப்புப்புத்தகத்தை(operation manual) எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.அது இல்லையென்றால் இணையத்தில் தேடிப்பிடித்தாலும் சரிதான்.
அப்புறம் உங்களிடம் முக்காலி(ட்ரைபாட்) இருந்தால் ஷட்டர் வேகம் குறைவாக உள்ள படங்கள் எடுக்க வசதியாக இருக்கும். அது இல்லையேல் உங்கள் கேமராவை ஏதாவது தட்டையான மற்றும் கடினமான ஒரு பரப்பில் இருத்திக்கொள்ளுங்கள்.
நீங்கள் கேமராவை பொருத்தும் இடம் உங்கள் கருப்பொருளை படம் பிடிக்க வாட்டமாக இருக்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம் ஏற்பாடுகள் எல்லாம் ஆகிவிட்டதா??? சரி இப்போ Manual-இல் படம் எடுக்கலாம் வாங்க.
முதலில் நாம் எடுக்கப்போவது Av மோடில்! லென்ஸின் விட்டத்தை நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ள அதற்கேற்ப ஷட்டரின் வேகத்தை கேமராவே தீர்மானித்துக்கொள்ளும். முதலில் இந்த படப்பிடிப்புக்கு தேவையான கருப்பொருளை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அது என்ன தனியா தேர்ந்தெடுத்துக்கிட்டு?? ஏதோ கண்ணுல மாட்டுனத கப்புனு புடிக்க வேண்டியதுதானே அப்படின்னு கேக்கறீங்களா?? நம்மளோட இன்றைய பாடத்தின் பலனை சுலபமாக புரிந்துக்கொள்ள DOF நிறையவே மாறுபடும் கருப்பொருள் கிடைத்தால் நன்று.
அதாவது உங்கள் கருப்பொருளின் முன்னாலேயும் பின்னாலேயும் பொருட்கள் இருந்தால் ,லென்ஸ் விட்டத்தின் மாறுபாடுகளினால், அவற்றின் மேல் கேமராவின் ஃபோகஸ் எந்த அளவு மாறுபடுகிறது என்பதை புரிந்துக்கொள்ள வசதியாக இருக்கும். உதாரணத்திற்கு ஒரு மேஜையின் மேல் மூன்று பொருட்கள் இருப்பது போன்று தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அப்பொழுதுதான் அந்த பொருட்களில் நடுவில் உள்ள பொருள் மட்டும் தெளிவாக தெரிவது போல ஒரு படம் ,அந்த பொருட்கள் மூன்றுமே தெளிவாக உள்ளது போன்ற படம் என்று மாற்றி மாற்றி எடுத்து லென்ஸ் விட்டத்தின் மகத்துவத்தை பற்றி அறிந்துக்கொள்ளலாம்.
undefinedசரி! உங்கள் கருப்பொருளை முடிவு செய்துக்கொண்ட பின்,உங்கள் கேமராவை அதற்கேற்ப பொருத்திவிட்டு,கேமராவின் மோடை Av-கு மாற்றிக்கொள்ளுங்கள். பின்னர் உங்கள் லென்ஸின் விட்டத்தை முடிந்தவரை பெரிதான அளவிற்கு செட் செய்துக்கொள்ளுங்கள்.ஒவ்வொரு லென்ஸின் அதிகபட்ச விட்ட அளவு அந்தந்த லென்ஸின் மேலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். என்னுடைய கிட் லென்ஸில் அதிகபட்ச விட்ட அளவு f5.6. உங்கள் லென்ஸின் குறைந்தபட்ச எஃப் நம்பர் லென்ஸின் அதிகபட்ச விட்டத்தின் அளவுகோல் என்பதை மறக்க வேண்டாம். இப்பொழுது உங்கள் ஷட்டரை லேசாக அழுத்துங்கள்! உங்கள் கருப்பொருளின் மேல் ஃபோகஸ் செட் ஆகி விடும்.நீங்கள் வைத்திருக்கும் முன்று பொருட்களில் நடுவில் உள்ள பொருளின் மீது உங்கள் கேமராவின் ஃபோகஸ் செட் ஆகுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் காட்சியின் ஒளியமைப்புக்கு ஏற்றார்போல், உங்கள் கேமரா, ஷட்டரின் வேகத்தை தீர்மானித்துக்கொள்ளும்.

நீங்கள் வைல்டு லைப் போட்டோகிராபி எனப்படும் கானுயிர் புகைப்படக்கலையில் ஆர்வம் உள்ளவர் எனில்

நீங்கள் வைல்டு லைப் போட்டோகிராபி எனப்படும் கானுயிர் புகைப்படக்கலையில் ஆர்வம் உள்ளவர் எனில் மேற்கொண்டு படியுங்கள். காரணம் உங்களை ஒரு வரலாற்றில் இடம் பெறச் செய்யப்போகும் பதிவு இது.
போட்டோகிராபிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு உள்ள பெஸ்ட் போட்டோகிராபி தமிழ் இதழில் ஆசிரியர் என்.ஆர்.பழனிக்குமார் தற்போது வைல்டு லைப் போட்டோகிராபர் வளர்ச்சிக்கான ஒரு விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு உள்ளார்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான புகைப்படக்கலைஞர்கள் இருக்கின்றனர், ஆனால் அவர்களை அடையாளப்படுத்தவும், தூக்கிவிடவும், உற்சசாகப்படுத்தவும் ஆள் இல்லாத காரணத்தால் வட மாநிலத்தில் உள்ள வைல்டு லைப் போட்டோகிராபர்கள் அளவிற்கு நம்மவர்கள் புகழ் பெறவில்லை
இதனால் ஏற்படும் இழப்புகள் நிறையவே. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் பிரபலமான நிக்கான், கேனன் போன்ற நிறுவனங்கள் தனது தயாரிப்பு தொடர்பாக இலவசமான டெமோவை நடத்த வேண்டும் என்றாலோ, புகைப்படக்கருவிகளை இலவசமாக உபயோகித்து பார்க்கவேண்டும் என்றாலோ எங்கே வைல்டு லைப் போட்டோகிராபர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்றுதான் முதலில் பார்க்கிறார்கள்.
அதற்கும் காரணம் உண்டு வைல்டு லைப் போட்டோகிராபர்கள் அடிப்படையில் சுற்றுச்சூழல் மீது ஆர்வம் அதிகம் கொண்டு இருப்பார்கள், கேமிரா மற்றும் லென்சின் அனைத்து தொழில் நுட்பங்களையும் சோதனை செய்து பார்த்திருப்பார்கள். இது போன்ற காரணங்களால் வைல்டு லைப் போட்டோகிராபர்களை பெரிய கேமிரா நிறுவனங்கள் தேடவும், தேர்வு செய்யவும் முன்வருகின்றன.
தமிழகத்தில் அதிக வைல்டு லைப் போட்டோகிராபர்கள் இருந்தாலும் அவர்கள் சில இடங்களில் ஒரு குழுவாக இருக்கிறார்களே தவிர ஒரு அமைப்பாக இல்லை. ஆனால் வட மாநிலங்களில் ஒரு அமைப்பாகவே உள்ளனர். ஆகவே எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அமைப்பாக இருப்பதன் காரணமாக வட மாநிலங்களிலேயே வைல்டு லைப் போட்டோகிராபி தொடர்பான பயிற்சி பட்டறைகள் நடத்தப்படுகின்றன.
இதை முதலில் மாற்றவேண்டும் மற்ற எல்லா மாநிலங்களையும் விட தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான வைல்டு லைப் போட்டோகிராபர்கள் இருக்கின்றனர் என்பதை சொல்ல வேண்டும் என்பதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள முதல் முயற்சியே "கானுயிர் ஒளிப்படக் கலைஞர்கள்' என்ற புத்தகம்.
முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள நூறு வைல்டு லைப் போட்டோகிராபர்கள் பற்றி விரிவாக சொல்லும் புத்தகம் இது. பல வண்ணத்தில் தயராகிக் கொண்டு இருக்கும் இந்த புத்தகத்தில் போட்டோகிராபர் பற்றிய படமும், குறிப்பும்,அவர் எடுத்த சிறந்த படங்கள் மற்றும் அவர் பயன்படுத்தும் கேமிரா கருவிகள் பற்றிய குறிப்புகளும் இடம்பெறும்.
பல வண்ணத்தில் சர்வதேச தரத்தில் தயாரிக்கப்படும் இந்த புத்தகத்தில் நீங்கள் இடம் பெற வேண்டும் என்றால் நீங்கள் முழு நேர வைல்டு லைப் போட்டோகிராபராக இல்லாவிட்டாலும் பராவாயில்லை ஆனால் உங்களது பொழுது போக்கு மற்றும் ஆர்வம் வைல்டு லைப் போட்டோகிராபியாக இருக்கவேண்டும்.
நீங்கள் எடுத்தவைகளில் சிறந்ததாக கருதப்படும் வைல்டு லைப் புகைப்படங்கள் மற்றும் உங்களது படம் மற்றும் கேமிரா பற்றிய குறிப்புகள் மற்றும் இதற்கான கட்டணத்தை அனுப்பி வைக்க வேண்டும். இன்னும் குறைந்த அளவிலான போட்டோகிராபர்களே இந்த புத்தகத்தில் இப்போதைக்கு இடம் பெற வாய்ப்பு இருப்பதால் உடனே செயல்படவும்.
இந்த புத்தகம் சம்பந்தபட்ட போட்டோகிராபருக்கு அனுப்பிவைக்கப்படும், அத்துடன் முக்கியமாக பள்ளி, கல்லூரிகளுக்கும், கேமிரா தயாரிப்பு நிறுவனங்கள், கேமிரா விற்பனை நிறுவனங்கள், நூலகங்கள் மற்றும் புகைப்படம் தொடர்பான இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
இந்த புத்தகம் ஏப்ரல் 4ம்தேதி கோவை கொடீசியா அரங்கில் வெளியிட ஏற்படாகியுள்ளது. புத்தக வெளியீட்டை முன்னிட்டு ஒரு புகைப்பட கண்காட்சியும் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள புகைப்படக் கலைஞர்களின் படங்கள் இடம் பெறும். சிறந்த படங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகளும் வழங்கப்படுகிறது.
இது பற்றிய முழு விவரத்திற்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியவர் பெஸ்ட் போட்டோகிராபி ஆசிரியர் பழனிக்குமார்: 9842127033.

Monday, 24 March 2014

Avast Internet Security 7 - ஒரு வருட இலவச லைசன்ஸ் கீயுடன் தரவிறக்கம் செய்ய!


Avast Internet Security 7 புதிய வெர்சனில் கணினியின் வைரஸ், ஸ்பாம், ஸ்பைவேர் போன்ற அனைத்தையும் தேடி அழிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக அவாஸ்ட் தளம் அறிவித்துள்ளது. ரியல் டைம் ஸ்கேன் மிக சிறப்பாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கே ஒரு வருட வேலிடிட்டி கொண்ட லைசன்ஸ் torrent file ஆக இணைக்கப்பட்டுள்ளது. முதலில் லைசன்ஸ் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
http://www.kickasstorrents.com/avast-internet-security-7-licence-t6203135.html
Torrent file டவுன்லோட் செய்ய bit torrent software டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

பின்னர் Avast தளத்தில் Avast Internet Security 7 இல் trial version என்பதை click செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும். டவுன்லோட் முடிந்த பின் setup file இன்ஸ்டால் செய்யவும்.

1. Express install கிளிக் செய்யவும்.

2. பின்னர் கீழே உள்ள படத்தில் உள்ளது போல நீங்கள் ஏற்கனவே டவுன்லோட் செய்த license file இன் location தேர்ந்தெடுத்து next தரவும்.

3. முழுவதும் இன்ஸ்டால் செய்து முடித்த பின் கீழே படத்தில் உள்ளது போல restart கொடுத்து கம்ப்யூட்டரை restart செய்யவும்.
 


4. கம்ப்யூட்டர் restart ஆன பின் desktopஇல் avast internet security iconஐ கிளிக் செய்தால் கீழே படத்தில் உள்ளது போல window ஓபன் ஆகும். அதில் database update கிளிக் செய்து லேட்டஸ்ட் databaseக்கு update செய்யவும்.
முழுமையாக இன்ஸ்டால் முடிந்த பின் கம்ப்யூட்டரை virus scan செய்யவும்.
source: Activate Avast Internet Security 7 with License File or Activation Code

நேச்சுரல் போட்டோவுடன் பென்சிலில் வரைந்த போட்டோ

நேச்சுரல் போட்டோவுடன் பென்சிலில் வரைந்த போட்டோ அழகாக இணைக்கப்பட்டுள்ளது. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.Wednesday, 19 March 2014

போட்டோக்களை எடிட் செய்ய மிகச் சிறந்த மென்பொருள்

புகைப்படம் எடுப்பதே ஒரு கலை.. எடுத்த புகைப்படத்தை மேலும் சீர்படுத்தி அழகூட்டுவது என்பது அதில் ஒரு தனிக்கலை. தற்பொழுது புகைப்படக்கலையை விட சீரமைப்பதன்மூலம் நல்லதொரு புகைப்படத்தை எடுத்த திருப்தியை அடைந்துவிடுகிறார்கள். காரணம் புகைப்படங்களை மேன்படுத்த பெருகிவரும் மிகச்சிறிய அளவிலான photo editing software கள்தான். அதைப்போன்றதொரு மிகச்சிறப்பான மென்பொருள் Phoxo.
photo editing software - phoxo
போட்டோ எடிட் செய்ய பயன்படும் மென்பொருள்
போட்டோஷாப் மென்பொருளுக்கு மாற்றீடாக இம்மென்பொருளைப் பயன்படுத்தலாம். 

உங்களுடைய ஒளிப்படங்கள், புகைப்படங்கள், ஆண்ட்ராய்ட் கேமிராவின் மூலம் எடுத்த படங்கள் என எப்படங்களையும் இம்மென்பொருளைப் பயன்படுத்தி அழகுப்படுத்தலாம். பயன்படுத்துவதற்கு மிக எளிமையாக இருக்கும் இம்மென்பொருளின் அளவு வெறும் 4MB மட்டுமே. 

மேலதிக வசதிகள் தேவைப்பட்டால் நீங்கள் இணையத்தின் மூலம் கிடைக்கும் tools களை தரவிறக்கி இம்மென்பொருளில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Features of Phoxo photo editing software -மென்பொருளின் சிறப்புகள்:
1. Tiny - மிகச்சிறியது

அளவில் மிகச்சிறிய மென்பொருள் இது. 4 எம்.பி. மட்டுமே உள்ள இம்மென்பொருள் மெமரியில் குறைந்த அளவே (Very small usage memory)எடுத்துக்கொள்கிறது.  

2. Online Clip-Art - ஆன்லைன் கிளிப் ஆர்ட்

இணையத்தில் ஆயிரக்கணக்கான clip-art, frame, texture, stamp, brush style ஆகியவைகள் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.

3. Text Effect - டெக்ஸ் எஃபக்ட்

Shadow text, Gragient Text, Glass text, Scanline Text, Blur Text, Water ripple Text என்பன போன்ற எழுத்துக்களுக்கான எஃபக்ட்களைக் கொடுக்கலாம்.

4. Layer - லேயர்

எளிய முறையில் லேயர்களைப் பயன்படுத்தும் வசதி. drog and drop முறையில் ஒன்றிலிருந்து மற்றொரு இடத்தில் லேயர்களை மாற்றும் வசதி.

5. Brush Pen - பிரஸ் பென்

brush, pen, eraser போன்ற டூல்களைப் பயன்படுத்தி எளிதாக பெயிண்டிங் செய்யும் வசதி.

6. Free, Open Source - இலவசம்

முற்றிலும் இலவசம். திறமூல மென்பொருள் ஆகையால் யார்வேண்டுமானாலும் இலவசமாக பயன்படுத்தலாம்.

7. Fast- வேகம்

நோட்புக் கம்ப்யூட்டர்களில் கூட மிக வேகமாக இயங்ககூடியது. விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இயங்கக்கூடிய வகையில் வடிவமைப்பட்டிருக்கும் மிகச்சிறந்த மென்பொருள் இது. 

8. Easy to Use - பயன்படுத்த எளிதானது

பயன்படுத்த மிக எளிது. ஒவ்வொரு டூலையும் பயன்படுத்துவற்கு அதிலேயே குறிப்புகள் (help tips) உள்ளதால் கற்றுக்கொள்வது எளிது. 

மென்பொருளினுடைய தளத்தில் கற்றுக்கொள்வதற்கான மிகச்சிறந்த வழிமுறைகள் அடங்கிய டுடோரியல்கள் உள்ளன.

9. Creative and Effect - கிரியேட்டிவ் & எஃபக்ட்ஸ்...

ஐம்பதற்கும் அதிகமான எஃபக்ட்களை கொடுக்க முடியும். ஆயில் பெயிண்டிங், மொசைக், பென்சில் ஸ்கெட்ச், சாப்ட் எட்ஜ், ஸ்பிளாஸ், எம்போஸ் மேலதிக வசதிகள். 

10. Selection - தேர்ந்தெடுத்தல்

செலக்ஷன் டூலில் போட்டோஷாப் மென்பொருளில் உள்ளது போல marquee, lasso, magic wand tools உண்டு. இவைகள் படங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேர்ந்தெடுத்து வேலை செய்ய உதவும்.

11. Photo Enhancement - போட்டோ என்கேன்ஸ்மெண்ட்:

ரெட்-ஐ ரீமூவல் (red-eye removal, குளோ(glow), சேபியா(sepia) ஆகிய கருவிகள் ரீடச்சிங்(Retouching), கரெக்டிங்(Correcting), டிஜிட்டல் போட்டோவை இம்ப்ரூவ் செய்தல் (Digital Photos improve) ஆகியவை மேற்கொள்ளலாம். 

12. support multiple language - பலமொழிகள் ஆதரிப்பு: 

இம்மென்பொருள் இங்கிலீஸ், சைனீஸ், ஸ்பானிஸ், ஜெர்மன் உட்பட மொத்தம் பதினொரு மொழிகளை ஆதரிக்கிறது.

போட்டோ எடிட்டிங் மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய சுட்டி: Download Phoxo Photo Photo Editing Software

எளிய தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ள...
போட்டோஷாப் அடிப்படைத் தகவல்கள் தெரிந்துகொள்ள....
போட்டோஷாப்பில் டூல்களை பயன்படுத்தும் முறைகளை தெரிந்துகொள்ள...


கிளிக் செய்யவும்: http://rajkamalkamaldigitals.blogspot.com/

shortcut keys of windows 8 , விண்டோஸ் 8க்கான ஷார்ட்கட் keys

குறுக்குவிசைகள் எதற்கு என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.. ஆனாலும் மீண்டும் ஒருமுறை நான் சொல்லிவிடுகிறேன்.. நாம் பயன்படுத்தும் எந்தவொரு கணினித் தொடர்பான பயன்பாடுகளில் ஒவ்வொரு முறையும் நேரடியாக  மெனு சென்று நமக்குத் தேவையானதை தேடிப்பிடித்து அதை கிளிக் செய்தால் தான் நாம் விரும்பும் செயல் நடைபெறும். அவ்வாறில்லாமல், மௌசை(சுட்டெலி) பயன்படுத்தாமேலே keyboad - ஐ பயன்படுத்தி இரண்டு அல்லது மூன்று கீ களை ஒருசேர அழுத்துவதன் மூலம் நமக்குத் தேவையான பயன்பாடுகளை விரைவாக பெறலாம்.. இதற்கு தான் குறுக்குவிசைகள் பயன்படுகின்றன. 

புதிதாக வெளிவந்திருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான குறுக்குவிசைகளை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்.. உபயோகித்துப் பயன்பெறுங்கள் நண்பர்களே..!

Windows Key
Jump between Start Metro Desktop and Previous App
ESC
Return to Previous App
Windows Key + spacebar
Switch input language and keyboard layout
Windows Key + Y
Peek at the Desktop
Windows Key + O
Lock device orientation
Windows Key + V
Cycle through toasts
Windows Key + Shift + V
Cycle through toasts in reverse order
Windows Key + Enter
Launch Narrator
Windows Key + PgUp
Move Tiles to the Left
Windows Key + PgDown
Move Tiles to the Right
Windows Key + Shift + .
Move Metro App Split Screen Left
Windows Key + .
Move Metro App Split Screen Right
Winodws Key + S
Open App Search
Windows Key + F
Open File Search
Windows Key + C
Open Charms Bar
Windows Key + I
Open Charms Settings
Windows Key + K
Opens Connect Charm
Windows Key + H
Open Share Charm
Windows Key + Q
Open Search Pane
Windows Key + W
Open Search Settings
Windows Key + Z
Open App Bar
Arrow Keys
Select Metro Apps Left, Right, Up, Down
CTRL + Arrow Right
Move 1 Page Right on Metro UI Menu
CTRL + Arrow Left
Move 1 Page Left on Metro UI Menu
Arrow Key, ALT + Arrow Right
Move Metro App Right
Arrow Key, ALT + Arrow Left
Move Metro App Left
Arrow Key, ALT + Arrow Up
Move Metro App Up
Arrow Key, ALT + Arrow Down
Move Metro App Down
Windows Key + L
Lock Screen
Windows Key + E
Launch Windows Explorer on Classic Desktop
Windows Key + R
Launch Run Box on Classic Desktop
Windows Key + P
Projector Mode – Select Projector Output
Windows Key + U
Launch Ease of Access Center
Windows Key + T
Launch Classic Desktop with Arrow Key Icon Selection
Windows Key + X
Launch Windows Mobility Center on Classic Desktop
Windows Key + B
Launch Classic Desktop with Arrow Key Taskbar Icon Selection
Windows Key + M
Launch Classic Desktop with Arrow Key Desktop Icon Selection
Arrow Key, App Key
Display Unpin Option and Advanced Metro Icon Icons

தற்போது பிரபலமாகிக்கொண்டிருக்கும் விண்டோஸ் 8 க்கான குறுக்குவிசைகளைப் பயன்படுத்தி நீங்களும் உங்களது கணினி சம்பந்தமான வேலைகளை செய்யும்போது நேரத்தை மிச்சப்படுத்துங்கள்.

மறக்காமல் பின்னூட்டம் இடுங்கள்.. உங்களது பின்னூட்டமே எமது முன்னேற்றம்..!!