Thursday 19 September 2013

Event Photographers

புகைப்பட கலைஞர்களுக்கு புகைப்பட ரசனை உள்ளவர்களுக்கு வணக்கம் .
புகைப்படம் என்பது வெறும் ஒரு பேப்பரில் அச்சிடப்படும் படம் அல்ல. ஒரு நாட்டில் புரட்சியையே ஏற்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்த சாதனம்.
செழுமை, வறுமை, அழுகை, சிரிப்பு ...ஏன்? ஒருவருடைய மனநிலையைக்கூட வெளிப்படுத்தும் வல்லமை புகைப்படத்துக்கு உண்டு.
சாதாரண கண்கள் ஒரு காட்சியை கண்டால் அது நிகழ்வு. புகைப்படக்கலை நோக்கோடு பார்த்தல் அது கவிதை.
அதனால் தான் தொழில் முறை புகைப்பட கலைஞர்கள் எடுக்கும் ஒவ்வொரு படமும் கவித்துவம் நிறைந்ததாக இருக்கின்றன.
பொதுவாக புகைப்படம் எடுப்பவர்கள் பல்வேறு துறைகளில் இருப்பார்கள்.
உதாரணமாக விழாக்களுக்கு படம் எடுப்பவர்கள், சுற்றுச்சூழல் படம் எடுப்பவர்கள் , தனி நபர்களை படம் எடுப்பவர்கள், தொழிற்சாலைகளில் படம் எடுப்பவர்கள் என பல துறைகளில் இருப்பார்கள்.
இதில் மிகவும் சிறப்பாகவும் சமயோசித பண்புடனும் சுறுசுறுப்பாகவும் இருப்பவர்கள் விழாக்களுக்கு படம் எடுப்பவர்களே.

ஒளிப்படவியல்

                           ஒளிப்படவியல் (Photography) என்பது, ஒளிப்படத் தகடு அல்லது மின்னணு உணரி போன்ற ஒளியுணர் ஊடகத்தின் மீது ஒளியை விழச்செய்து படங்களைப் பதிவு செய்யும் வழிமுறையைக் குறிக்கும். ஒரு பொருளினால் தெறிக்கப்படும் அல்லது அதிலிருந்து வெளிவிடப்படும் ஒளி, உணர்திறன் கொண்ட வெள்ளி ஹாலைட்டை அடிப்படையாகக் கொண்ட வேதியியற் பூச்சின் மீது அல்லது ஒரு மின்னணு ஊடகத்தின்மீது ஒரு வில்லையினூடாகச் சென்று படும்போது, அப்பொருட் தோற்றம் குறித்த தகவல் வேதியியல் அல்லது மின்னணு முறையில் சேமிக்கப்படுகிறது. இது ஒளிப்படக் கருவியின் மூலம் நிகழ்த்தப்படுகிறது. ஒளிப்படவியல், வணிகம், பொழுதுபோக்கு போன்றவை உட்பட்ட பல துறைகளில் பயன்படுகின்றது. விளம்பரம், பதிப்புத்துறை, பத்திரிகைத் துறை போன்றவற்றில் இதற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. ஒளிப்படத்துறையை ஒரு கலை முயற்சியாகவும் பார்க்க முடியும்.

1834 இல் பிரான்சிய ஓவியரும் கண்டுபிடிப்பாளருமாகிய கேர்குளிஸ் புளோரன்ஸ் தன்னுடைய நாட்குறிப்பில் போட்டோகிராபி (photographie) என தன்னுடைய செயன்முறையினை விபரித்திருந்தார்.[1] சேர் யோன் கார்சல் 14 மார்ச்சு 1839 அன்று ஒளிப்படவியல் என அர்த்தம் கொடுக்கும் "photography" என்ற சொல்லினைப் பாவித்தார். ஆயினும் 25 பெப்ருவரி 1839 இல் செருமனிய செய்தித்தாள் யோகான் வென் மால்டர் ஏற்கெனவே அச்சொல்லினை பாவித்ததாகக் குறிப்பிட்டது

புகைப்படக்கலையில் உள்ள தவறான கருத்துக்கள்

புகைப்படக்கலையை கற்க எல்லோருக்கும் ஆசையிருந்தாலும் அதில் உள்ள சில கடினங்களாலும் அதைப்பற்றிய போதிய அறிவு இல்லாததாலும் அதை சிலர் புறக்கணிக்கின்றனர். அதோடு புகைப்படக்கலை பற்றிய சில தவறான கருத்துக்களும் உள்ளன. அப்படிப்பட்ட சில கருத்துக்கள்.
கருத்து-1 – சிறந்த புகைப்படம் எடுக்க பெறுமதிமிக்க கருவிகள் தேவை
இது முற்றாகப்பிழையாகும். நான் ஏற்கனவெ கூறியது போன்று நல்ல புகைப்படம் எடுக்க அதிவிலையுயர்ந்த கருவிகள் பெரிதாக தேவைப்படாது. நிறைய புகழ் பெற்ற புகைப்படக்கலைஞர்கள் தங்கள் சாதாரண கமராவிலேயே படம் பிடித்திருக்கிரார்கள். அதுவும் இன்றய காலகட்டத்தில் விலையுயர்ந்த கமராவிற்கும் சாதாரண கமராவிற்கும் பெரிதான வேறுபாடுகள் குறைவு, ஒரு சில தொழில் நுட்பங்களைத்தவிர.

கருத்து-2 – சிறந்த புகைப்படம் எடுக்க தொழில்முறை புகைப்படைக்கலைஞராலேயே முடியும்

இதுவும் தவறான கருத்தாகும். நீங்கள் கூட மிகச்சிறந்த படங்களை எடுக்க முடியும், அதுவும் பொழுதுபோக்கான புகைப்படங்களை எடுப்பதன் மூலம். தொழில்முறைக்கலைஞர் என்பது அதன் மூலம் வருமானம் பெறுபவர்களே ஒழிய இருவருக்கும் ஒரே குறிக்கோள்தான்,- சிறந்த புகைப்படத்தை எடுக்கவேண்டும்! அது நமது மனசுக்கு பிடிச்சிருக்க வேண்ட்டும். எனக்கு தெரிந்த சிறந்த புகைப்படக்கலைஞர்கள் சாதாரணமானவர்களே. எனது நண்பர்கள் உட்பட…..
கருத்து-3 – உங்கள் கமராவிற்கு எது சிறந்தது என்பது தெரியும்
முற்றாகப்பொய்….. எந்தவோரு டிஜிடல் உபகரணத்தையும் நம்பிவிடாதீர்கள். நம்ம எந்திரனப்போல, நமக்கே அது ஆப்பு வச்சுடும். எப்பவுமே மனிதர்கள் போல அது யோசிக்காது. நிறய கமராவில் தானியக்கநுட்பம் (auto settings) இருந்தும் அது எல்லா சமயத்திலும் சிறந்த முடிவைத்தராது. சந்தர்பத்துக்கு ஏற்றால்போல் நாம்தான் அதன் நுட்பங்களை மாற்றி manual mode இல் எடுக்கவேண்டும்.
கருத்து – 4 – புகைப்படக்கலை கற்பது கடினம்
நம்புங்கப்பா…. இதுவும் பொய். நானே(கொஞ்சம் தன்னடக்கம்) இதப்பத்தி எழுதும்போது இது எவ்ளோ சப்ப மாட்டர் என்று புரியுதா. உங்களுக்கு ஆர்வம் இருந்தா போதும். புகைப்படம் பற்றிய நுணுக்கமான அறிவு ஒன்றும் தேவையில்லை. எப்படி கமரா வேலை செய்ய்யுது, எப்படி shutter மூடித்தறக்குது, எப்படி படம் உள்ளே பதிவாகின்றது என்று எல்லாம் நீங்கள் யோசிக்கத்தேவையில்லை. உதாரணத்துக்கு…. வாகனம் ஓட்டுவதற்கு. எஞ்ஜின் எப்படி வேலை செய்யுது என்று தெரிய வேண்டுமா.
கருத்து – 5 – புகைப்படம் எடுக்க விதிமுறைகள் இல்லை
இது கொஞ்சம் பிழைதான்.. சில விதிமுறைகள் உண்டு.எந்த ஒரு செயலைச்செய்யவும் சரியான,பிழையான வழிமுறைகள் உண்டு அது புகைப்படக்கலைக்கும் பொருந்தும். நீங்கள் சில வரைமுறைகளுக்கு உட்பட்டும் அடுத்தவர்களை மதித்தும் நடக்கவேண்டும் அது உங்கள் கலைக்கு கொடுக்கும் மரியாதை. சில சமயம் உங்க உடலுக்கும் நல்லது !
அதனால மேற்குறுப்பிட்ட பிழையான கருதுக்களைல்லாம் மறந்துட்டு சந்தோசமா இத கற்க ஆரம்பியுங்க.

ஒளிப்படவியல் ஒரு அறிமுகம்

நம்மவர்களுக்கும் ஒளிப்படவியலில் (Photography) ஆர்வம் இருப்பதை உணர்ந்தேன். அதனால் மேற்கொண்டு அதுசம்பந்தமான பதிவுகள் இடலாம் என நினைத்துள்ளேன் உங்கள் ஆதரவும் பிற்குறிப்பும் அதற்கு உதவும்.
நிறய நண்பர்களின் வேண்டுகோளிற்கு இணங்க ஒளிப்படவியலைப்பற்றி ஒரு சின்ன அறுமுகம் எழுதலாம் என முடிவெடுத்துள்ளேன்.
வரலாறு
காட்சிப்படுத்துதல் என்பது மனிதகுலம் தோன்றிய காலம்தொடக்கம் காணப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரீகம் முதலே மனிதன் தனது நடவடிக்கைகளை ஓவியம், சிற்பம் மூலமாக நிலைநிறுத்தியிருக்கின்றான். அதன்பிறகு மன்னராட்சிக்காலத்தில் மன்னர்கள் தமது வெற்றிகளையும் தமது சாதனைகளையும் பதிவுசெய்ய முனைந்திருக்கின்றார்கள். அவைகளில் சில காலப்போக்கில் அழிந்துபோனாலும் இன்றும் சில பதிவுகள் நாம் காணக்கூடியதாக உள்ளது. இலத்திரனவியல் காலத்தில் மனிதன் அதனை ஒளிப்படம் மூலமாக பெற்றுக்கொண்டான். அதன் மூலம் இருவானதே ஒளிப்படக்கலை(photography). Photography என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து உருவானது. இதற்கு ஒளியினைப்பதிதல் என்று பொருட்படும். முதன் முதலாக ஒளிப்படத்தினை சீன தத்துவஞானி ‘மோ டீ’, கிரீக் கணிதமேதை அரிஸ்டோடில் மற்றும் இயுக்லிட்டால் 4ம் 5ம் நூற்றாண்டில் ஊசித்துளை கமராவால் எடுக்கப்பட்டது. ஆனாலும் முதலில் நிரந்தரமாகப்பதியும் ஒளிப்படம் 1826ம் ஆண்டு பிரான்ஸ் படைப்பாளியான ஜோசப் நைசிப்போர் நிப்ஸ் பிடிக்கப்பட்டது. மேலும் வர்ணப்புகைப்படம் 1970 இல் ஸ்கொட்லாந்து பெளதீகவியலாளரான ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்லால் கண்டுபிடிக்கப்பட்டது. நவீன கால எண்ணியல் ஒளிப்படக்கருவி 1969 களிலேயெ உருவாக்கப்பட்டது.
முன்னேற்றம்
இவ்வாறு வழர்ச்சியடைந்த ஒளிப்படவியல் இன்று எல்லோரது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிவிட்டது. இதற்குக்காரணம் டிஜிடல் தொழில்நுல்பத்தில் ஏற்பட்ட அசுர வழர்ச்சியும் கமராவின் தொழில்நுட்பம் மற்றும் இலகுவாகப்பவிக்கும்தன்மை, விலைகுறைவு, படங்களைப்பதியும் பழக்கம் மக்கள் மத்தியில் பெருகியமை, social media எனப்படும் சமூகஊடக இணையத்தளங்களிம் பாவனை அதிகரித்தது போன்ற காரணங்களை சொல்லலாம். ஒருகாலத்தில் புகைப்படம் (புகைப்படம் என்பதைப்பார்க்க ஒளிப்படம் என்பதே இந்த காலகட்டத்திற்கு பொருந்தும்) எடுக்க படப்பிடிப்பகம் (Studio) சென்றே எடுக்கவேண்டும், மேலும் திருமணம் போன்ற முக்கியமான நிகழ்வுகளிற்கே புகைப்படம் எடுக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் இன்று அது எல்லோராலும் அன்றாடமாகப்பாவிக்கப்படுகின்ற ஒரு பொருளாக மாறிவிட்டது.
ஒளிப்படத்தின் மகிமை
ஒளிப்படத்தினை மனிதன் ரசிப்பதற்கு நிறய காரணங்கள் இருந்தாலும், நிலைநிறுத்திப்பார்கின்ற வாய்பினை அது தருவதாலேயே அது மனிதனால் ரசிக்கப்படுகின்றது என நான் நினைக்கின்றேன். அதாவது உலகில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற காட்சிகளை மனிதனால் அப்படியே நிறுத்த முடியாது. பாய்ந்துவிழும் நீர்வீழ்ச்சிகள், பறந்துசெல்லும் பறைவைகள், வேகமாகச்செல்லும் வாகனம், அழகான குழந்தையின் சிரிப்பு என ஒரு சில கணத்தில் நம் முன்னே கடந்து செல்லும் காட்சிகளை நம்மால் அப்படியே நிறுத்திவைத்து ரசிக்கமுடியாது. கண்காளால் அதை செய்ய முடுயாது ஆனால் கமராவால் முடியும். யோசித்துப்பாருங்கள் அவசரமாக நகர்ந்துசெல்லும் மனிதர்கள் நிறைந்த சனத்திரளை படம்பிடித்து, அந்தக்கணப்பொழுதில் ஒவ்வொருத்தரினுடைய முகபாவங்கள், அசைவுகள், செயற்பாடுகளைப் பார்க்க எவ்வளவு நன்றாக இருக்கும். ஒரு ஒளிப்படம் நமக்கு பல கதைகள் சொல்லும், பழய நினைவகளைமீழச்செய்யும், முகத்தில் சந்தோசத்தை, மனதில் மகிழ்ச்சியை, பெருமிதத்தை, பாராட்டை, பிரிவினை இப்படி பலவற்றை நமக்குத்தரும். அதுவே ஒளிப்படக்கலையின் வெற்றிக்குக்காரணம். ஒவ்வொரு நிகழ்வையும் பதியுங்கள் சில காலம் கழித்துப்பாருங்கள் உங்களுக்குள் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி உண்டாக்கும். அதற்கு இந்தகால கட்டத்தில் நிறய வசதிகளும் வாய்ப்புக்களும் உள்ளன. எதையுமே தவறவிடாதீர்கள். ஒரு அழகான காட்சியையோ இல்லை நல்ல தருணத்தையோ வெறுமனே ரசித்துவிட்டு போகாதீர்கள். அதனைப்பதிவு செய்யுங்கள் அடுத்தவரிடம் பிகிர்ந்துகொள்ளுங்கள். மற்றவரிடமும் அதே சந்தோசத்தை கொண்டுசெல்லுங்கள். என்னைப்பொறுத்தவரை நல்ல காட்சியைக்கண்டு படமெடுக்காமல் செல்பவன் சுயநலவாதி என்றே சொல்வேன்.
சிறந்த புகைப்படங்களைப்பார்து ரசிக்கக்கற்றுக்கொள்ளுங்கள். அந்த புகைப்படங்கள் அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்க அவரிகள் என்ன யுக்திகளைக்கையாண்டிருக்கிறார்கள் என்று அராட்சி செய்துபாருங்கள். சிறந்த படம் எடுக்க நாமும் என்ன செய்யலாம் என்று எண்ணுங்கள்.
இவ்வாறு சில புகைப்படங்களைப்பதியும் இணையத்தளங்கள் நிறய உள்ளன.
வெறுமனே உங்கள் படங்களையும் உங்கள் நண்பர்களது படங்களையும் மாறி மாறி எடுப்பதுவல்ல ஒளிப்படக்கலை. இங்கு நிறய உள்ளது. அதனைப்பகிர்வதற்கு முன்னய காலகட்டத்தைவிட நமக்கு சந்தர்ப்பம் உள்ளது. அதனை எவ்வாறு செய்யலாம், என்ன நுட்பங்கள் பயன்படுத்தலாம் என்பதினை நான் உங்களுக்கு எனது பதிவுகள் மூலம் தருவேன். ஒளிப்படக்கலையின் ஒவ்வ்வொரு சிறப்பையும் பெற என்னோடு சேர்ந்து பயணியுங்கள்.

Saturday 14 September 2013

யானையின் கொடூர பிடியில் சிக்கி உயிர் தப்பிய மனிதன் (திகில் படங்கள்)

இந்­தி­யாவின் பெங்­க­ளூரி­லுள்ள காடொன்றில் யானையின் கோரப் பிடியில் சிக்­கிய நபர் ஒருவர் மயி­ரி­ழையில் உயிர்­பி­ழைத்த அரிய சம்­ப­வ­மொன்­றினை புகைப்­ப­ட­வி­ய­லாளர் ஒருவர் முழு­மை­ய­மாக படம்­ பி­டித்­துள்ளார்.
 
விஜய கர்நாடகா பத்திரிகையைச் சேர்ந்த புகைப்­ப­ட­வி­ய­லா­ளா­ரான கே.எஸ்.ஸ்ரீதர், பெங்­க­ளூருக்கு வெளி­யி­லுள்ள கிராமப் புறத்­தி­லுள்ள காடொன்­றுக்கு சென்று பட­மெ­டுக்கும் போதே மேற்­படி சம்­பவம் இடம்­பெற்­றுள்ளது.
 
காட்­டிற்குள் அற்­பு­த­மான படங்­களை எடுக்கும் எண்­ணத்தில் யானைகள் இருக் கும் அபா­ய­க­ர­மான எல்­லைக்குள் உள்ளூர் வாசி­களும் ஸ்ரீதரும் நுழைந்­தனர்.  
 
இதன்­போது அங்கு வந்த யானை சேகரை துரத்­தி­யது. அவரும் உயிரைக் காப்­பாற்­றிக்­ கொள்ள உத­விகள் எது­மின்றி ஓடினார்.  ஆனால் திரும்பிப் பார்த்­த­போது தன்­னுடன் வந்த மணி­ரா­ஜுவை பெண் யானை­யொன்றின் பிடியில் சிக்­கி­யி­ருப்­பதை கண்ட பீதி­யீட்டும் சம்­ப­வத்தை மீட்­டினார் புகைப்­ப­ட­வி­ய­லாளர் ஸ்ரீதர்.
 
இந்த சம்­பவம் குறித்து அவர் மேலும் கூறு­கையில், “நான் உள்ளூர் கிரா­ம­வாசி ஒரு­வ­ருடன் நட்­பாக இருந்தேன். அவரே என்னை காட்­டுக்குள் அவ­ரது மோட்­டார் சைக்­கிளில் ஏற்றிச் சென்றார். காலை 10.30 மணி­ய­ளவில் ஹஸ்கர் ஆற்­றினை அடைந்தோம். அங்கு ஏற்­க­னவே பலர் குழு­மி­யி­ருந்­தனர்.
 
காட்­டிற்குள் சென்­றதும் அங்கு யானைகள் மரத்தின் பின்னால் இருப்­பதை நான் அறிந்­து­ கொண்டேன். அத்­துடன் அனை­வ­ரை யும் கைய­டக்கத் தொலை­பே­சி­க­ளையும் நிறுத்தக் கேட்­டுக்­ கொண்டேன். ஏனெனில் யானைகள் சிறிய சத்­தங்­க­ளையும் உண­வ­ரல்­லன. மேலும் 30 அடி தூரத்தில் 12ற்கும் அதி­க­மான யானை­க­ளையும் கண்டேன்.
 
இந்­நி­லையில் கைய­டக்கத் தொலை­பே­சியின் ஓசை கேட்க அங்கு பேணப்­பட்ட அமைந்து சீர்­கு­லைந்­து ­விட்­டது. ஆனால் தொடர்ந்தும் நான் பட­மெ­டுத்­துக்­ கொண்டே இருந்தேன், இதன்­போது சத்­த­த்­தினால் விரை­வாக யானைகள் நாங்கள் இருந்த திசையை நோக்கி நகர்ந்தை என்னால் அவ­தா­னிக்க முடிந்­தது.
 
அப்­போது நான், ஆபத்தை எதிர்­கொண்டு பட­மெ­டுப்­பதா? அல்­லது ஓடு­வதா? என இரண்டு மன­நி­லையில் இருந்தேன். பின்னர் சில படங்­களை வரி­சை­யாக எடுத்­த­வாறு பட­மெ­டுப்­பதை நிறுத்­தினேன். அது­வ­ரையில் எந்தப் பிரச்­சி­னையும் இல்லை. ஆனால் மணி­ராஜு என்­பவர் யானை­யிடம் மாட்­டிக்­ கொண்டார்.
 
அவர் ஓடிக் களைப்­ப­டைந்து யானையின் தும்­பிக்கை பிடியில் அகப்­பட்­டுக்­ கொண்டார். அத்­துடன் மணி­ரா­ஜுவின் கதை முடிந்­தது என நினைத்தேன். பள்­ள­மொன்றில் இறங்­கிய யானை சற்று நிலை தடு­மாறியது. எப்­ப­டியோ யானை தனது தும்­பிக்­கையின் பிடியை தளர்த்த மணி­ராஜு கீழே வீழ்ந்தார்.
 
என் கண்­களை என்னால் நம்­ப­மு­டி­ய­வில்லை
 
அதன் பின்னர் வேறு சில­ருடன் இணைந்து நான் சத்­த­மிட்டேன். கிரா­ம­வா­சிகள் யானை மீது கற்­கனை வீசி பய­மு­றுத்த அது அங்­கி­ருந்து சற்றே நகர்ந்­தது.
 
அதன்பின் கிரா­ம­வா­சிகள் ஓடிச்­சென்று மணி­ரா­ஜுவின் உடலில் உயிர் இருக்­கி­றதா? என பார்த்­தனர்.
 
அவர் உணர்­வின்றி இருந்­தாலும் உயி­ருடன் இருந்தார். அவரை வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்­பினோம்” பின்னர் பட­மெ­டுப்­பதா? அல்­லது மணி­ரா­ஜுவின் உயிரைக் காப்­பாற்­று­வதா? என்­பதில் மணி­ரா­ஜுவைக் காப்­பாற்­றவே விரை­வாக தீர்­மா­னித்தேன்.
 
பின்னர் கிரா­ம­வா­சி­களின் உதவியுடன் யானையை விரட்டி மணிராஜு உயிருடன் மீட்கப்பட்டார்” என்றார்.
 
சுமார் 5 நிமிடங்களில் மணிராஜு மரணத்தின் விளிம்புக்குச் சென்று திரும்பிய இந்தச் சம்பவத்தை தனது கெமராவில் பதிவு செய்து கொண்டு வாழ்நாள் புகைப்படங்களுடன் திரும்பியுள்ளார் கே.எஸ்.ஸ்ரீதர்
 
 
 

புகைப்பட கலைஞர்களின் திறமை

நமது இந்திய புகைபட பிரியர்கள் அரிய காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள் அவை உங்கள் பார்வைக்கு இதோ..
இந்தியா முன்னேகிட்டு இருக்குது என்று நான் சொன்னதை இப்பவாவது நப்புறீங்களா? பாவம் ரொம்ப கடினமான வேலை செய்துவிட்டு அசந்து தூங்குறார்..தொந்தரவு செய்ய வேண்டாம்.. வாடகை அதிகம் கேட்டதர்காக இப்படியா லோட் ஏத்தரது? போட்டோ சரியா வந்ததா? விபத்துக்களை குறைக்க எல்லா லாரியையும் இப்படி தண்டவாலத்தில் ஓட விட்டா ரொம்ப நல்ல இருக்கும். அடுத்த உலக கோப்பை கால் பந்து நடக்க போற மைதானம் இதுதான். மரத்தை மட்டும் யாரும் வெட்டாம பார்த்துகோங்க எல்லோரும் டிக்கட் வாங்கியாசா? இது தான் "இரயிலும் ஒரு நாள் லாரியில் ஏறும் " என்ற புதுமொழி பைசார் நகர கோபுரத்தை சாய்த்தது இவர்தானா? --உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்-

மரணத்தை மிக மிக அருகில் பார்த்தவர்

இந்த படத்தை பாருங்க...
கண்டிவாலி(மும்பை) இரயில் நிலையத்தில் இவர் கூட்ட நெரிசலில் இரயிலில் ஏர முயன்றபோது, கால் தவறி ஓடும் ரயிலுக்கும்,நடைபாதைக்கும் இடையே விழுந்துவிட்டார்.
ஒன்றல்ல....
.
.
இரண்டல்ல....
.
.
பத்து இரயில் பெட்டி அவரை கடந்தது சொன்றதுள்ளது..
.
பிறகு
.
அவர்
.
நிலமை என்ன?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார்
சிறு காயம் இன்றி தப்பித்தாலும் அவரால் அவரால் சகஜ நிலைக்கு வரவே வெகு நேரம் ஆனதாம்..இருக்காத பின்ன மரணதின் விழிப்புக்கு சென்று வந்தவராயிற்றே !
இப்படி உயிரை பணயம் வைத்து பிரயாணம் செய்யதான் வேண்டுமா?
அவசரத்தாலும், ஆள் இல்லாதா லெவல் கிராசிங்கை கடக்கும் போதும், குறிப்பாக இந்த இரயில் நிலையத்தில் மட்டும் மாதம் 15 பேர் மரணமடைவதாக மும்பை பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உலகின் மிக சிக்கலான மேம்பாலம்

இன்றைய நவீன உலகில் பெரிகிவரும் வாகன நெரிசலை சமாலிக்க புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்க படும் பாலங்கள் எத்தனை சிக்களானவை என்பதை நீங்களே பாருங்கள்...........
இன்றைய நவீன ஜப்பானில் கட்டபட்ட மேம்பாலங்கள் பயணம் செய்பவர்களின் இதய துடிப்பபை அதிகரிக்காமல் இருந்தால் சரி.. Rt. 440 in New Jersey Arc de Triumph, Paris   ரஸ்யாவில் மூன்று தண்டவாளன்களி சந்திப்பு
 U. S. A
Golden Glades interchange in N. Miami Beach, சீனா ரஸ்யாவின் புதிய யோசனையின் .. நான்கு சாலைகள் சந்திக்கும் மிக பெரிய மேம்பாலத்தின் நடுவே "flying saucer" என்ற வர்த்தக மையம் இது இங்லாந்தில் உள்ள : Magic Mushroom Cricle: என்ற வழைவு    நீங்கள் இங்கு பயணம் செய்ய நேர்ந்தால் இந்த வரைபடம் உங்களுக்கு உதவியாக இருக்கும் .  எத்தனை மேம்பாலங்கள் வந்தாலும் போக்குவரத்து நெரிசல் மட்டும் குறைவதாக இல்லை சில மோசமானவை....   Moscow Sadovoye Koltzo (ring road)    

இந்தியா 100 வருடங்களுக்கு முன்பு (part 2)

சுதந்திர தினத்தை நாமெல்லாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்நேரத்தில் சற்றே பின்னோக்கி ..100 வருடங்களுக்கு முன்பு நமது இந்தியா ... உங்கள் பார்வைக்கு.......... இதோ....

இந்தியா 100 வருடங்களுக்கு முன்பு

நமது சிறிய வயது புகைப்படங்கள் அல்லது நமது நெருங்கிய உறவினர்களின் சிறு வயது புகைபடங்களை காண்பது ஒரு அலாதி இன்பம் , அது போல் நமது தாய் நாட்டில் பழைய புகைபடங்கள் உங்களுக்காக --- இதோ - -
Train in 1940 Ambulance - சென்னை -1940 மயிலாபூர்- சென்னை - 1939 சென்னை நூலகம் - 1913 ( படத்தில் உள்ளவர்கள் கல்லூரி மாணவர்கள்) மெரினா கடற்கறை - சென்னை- 1913 காய்கறி அங்காடி(கொத்தவால் சாவடி) - சென்னை- 1939 Bank of madras - சென்னை - 1935 Car Showroom - சென்னை - 1913 VT Station - மும்பை - 1894 பல்பொருள் அங்காடி - 1883 மும்பை - 1894 அந்தமான் -1917 Hooghly - கொல்கத்தா- 1939 Power plant - 1917 ஊட்டி- தமிழ்நாடு- 1905 A waiter A school boy மவுன் பேட்டன் பிரபு டில்லி விமான நிலையத்தில் வரவேற்க்கும் நேரு மற்றும் லியாக்கத் அலி - மார்ச் 25- 1947 ஆகஸ்ட் 15 -1947 . இந்தியா சுதந்திரம் பெற்று முதல் பிரதமராக நேரு பதவி பிரமானம் எடுத்தல்.. 1947- இந்தியா- பாக்கிஸ்தான் இரண்டாக பிரிக்கபட்ட போது அகதிகளுக்கான சிறப்பு இரயில் 1948- மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்ட செய்தி அறிந்து கொல்கத்தாவில் கூடியா கூட்டம். 1948- மகாத்மாவின் இறுதி ஊர்வளத்தை காண மக்கள் கூட்டம் -