Friday 26 August 2016

தாயை இழந்த சிறுமியின் உணர்வு என்னவாக இருக்கும்...?

தாயை இழந்த சிறுமியின் உணர்வு என்னவாக இருக்கும்...?
தன்னை பெற்ற தாயை நினைத்து அழுவதா?
தந்தையின் நிலையை
நினைத்து கதறுவதா?
இந்த நாட்டிலா பிறந்தோம்
என வருந்துவதா?
இந்த மிருகங்களுடனா
வாழ்ந்தோம் என வருந்துவதா?
இறந்த தாயின் பூத உடலும்
தவிக்கும் தந்தையின்
இயலாமையும்
கலங்கி நிற்கும்
பச்சிளம் தளிரின்
பேதலிப்பும் காவிக்கூட்டத்தையும்
சாதி வெறியர்களையும்
மனித தன்மையற்ற மிருகங்களையும்
அழிக்காமல் விடாது
இந்த நாடும் நாட்டு மக்களும்
நாசமாகட்டும்
கலங்காத மனிதனும்
கண்ணிர் வடிக்கும்
கனத்த கல்நெஞ்சும்
கரையுதே
கருணை இல்லா தேசத்தில்
ஏன் பிறந்தேன் என
மனசு பதருதே
அய்யோ
பூகம்பம் வரட்டும்
பாவிகளின்
தேசம் அழியட்டும்


ஜனநாயக ஆட்சி ஜனங்களுக்கு இல்லையா?
ஒடிசா மாநில பழங்குடியை சேர்ந்த இறந்து போன பெண்ணுக்கு அரசு 'பிண ஊர்தி' ( Mortuary Van ) மறுக்கப்பட்டதால், தனது 12 வயது மகளுடன் இறந்துவிட்ட மனைவியின் பிணத்தை 12 கிலோமீட்டர் தனது தோளில் சுமந்து சென்று மாயனத்தில் இறுதி காரியம் செய்த ஒரு இந்திய#குடிமகனின் அவலக்காட்சிதான் இது.
மனித உரிமை ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் ஆட்கள் எல்லாம் இப்போ எந்த பொந்தில் இருந்கின்றார்கள் என்று தெரியவில்லை ..
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு குரல் கொடுக்க மட்டும்தான் அரசா?
#ஜனநாயக ஆட்சி??? #ஜனங்களுக்கு இல்லையா???

No comments:

Post a Comment