Monday, 27 October 2014

உங்கள் கணிணி மிக மெதுவாகச் செயல்படுகிறதா ??? இதை செய்து பாருங்கள் !!

computerமிக மெதுவாகச் செயல்படும் கணிணி உங்களை வெறுப்பேற்றுகிறதா? கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணிணியை விரைவாகச் செயல்பட வைக்க முடியும். 1. உங்கள் கணிணியைச் சுத்தம் செய்யுங்கள்: உங்கள் கணிணியின் டெஸ்க்டாப் அடைசலாக இல்லாமல் இருந்தாலே உங்கள் கணிணி விரைவாகச் செயல்படத் தொடங்கும். அதேபோல், உங்கள் சி வட்டியக்கி (ட்ரைவ்) முழுக்க கோப்புகளை அடைத்து வைக்காமல் நிறைய வெற்றிடம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். குறைந்தது 25 சதவீத இடமாவது காலியாக இருந்தால்தான் கணிணியின் வேகம் அதிகரிக்கும்.
அ. இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யுமுன் உண்மையிலேயே அது தேவையான கோப்புதானா என்று பார்த்துக்கொண்டு பதிவிறக்கம் செய்யுங்கள். அக்கோப்பின் பயன்பாடு முடிந்தபின் அதை அழித்துவிடுங்கள்.
ஆ. உங்களுக்குப் பயன்படாத மென்பொருட்களைத் தேவையில்லாமல் சேமித்து வைக்கவேண்டாம்.
இ. புகைப்படங்கள், பவர்பாயிண்ட்கள், திரைப்படங்கள், பாடல்கள் இவற்றைத் தனியாக ‘சி டி’ ‘டிவிடி’க்களில் பதிந்து வைத்துக்கொண்டால், ‘ஹார்ட் டிஸ்க்’ இடமும் மிச்சமாகும். உங்கள் கணிணி பாதிப்படைந்தாலும், இவை பத்திரமாகவே இருக்கவும் உதவும்.
ஈ. ‘ஸ்டார்ட்’ ஐச் சொடுக்கவும். ‘ரன்’ என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் ‘%Temp%’ என்று தட்டச்சு செய்து ‘Enter’ ஐத் தட்டவும். தற்காலிகமாகத் தேவைப்பட்ட, சேமிக்கப்பட்ட கோப்புகள் உள்ள Folder திறக்கப்படும். அதில் உள்ள கோப்புகளை எல்லாம் முழுமையாக அழித்துவிடவும்.
உ. தேவைப்படாத கோப்புகளை அழிக்கையில் ‘Shift Key’ஐப் பிடித்துக்கொண்டு அழிப்பதன் மூலம், Recyecle Binல் கோப்புகள் சேராமல் நேராக அழிக்கப் படும். அடிக்கடி உங்கள் Recycle Binஐக் காலி செய்வது அவசியம். ஏனினெல் அழிக்கப்பட்ட கோப்புகள் Recycle Binஇல் இருக்குமானால் உங்கள் சி டிரைவின் இடத்தை அது எடுத்துக்கொள்ளுவதாகவே ஆகிறது.
2. உங்கள் கணிணித் திரையில் ‘WallPaper’ பயன்படுத்தாதீர்கள். அது கணிணிச் செயல்பாட்டின் வேகத்தைக் குறைக்கக் கூடியது.
3. கூடியவரை ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறப்பது, பல மென்பொருட்களைப் பயன்படுத்துவது வேகத்தைக் குறைக்கும். தேவையென்றால் ஒழிய, பல கோப்புகளைத் திறந்து வைக்கவேண்டாம். அப்படி ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறக்க நேர்ந்தால், அப்பொழுது பயன்படுத்தும் கோப்பைத்தவிர மற்றவற்றைச் சிறிதாக்கி (Minimize) வைக்கவும்.
4. கணிணியில் பாடல் கேட்டுக்கொண்டே வேலை செய்வது உங்களுக்குச் சுகம்தான். ஆனால் உங்கள் ‘RAM’ இன் சக்தி கண்டிப்பாகக் குறைந்துவிடும். முடிந்தால் இதைத் தவிர்க்கலாம்.
5. உங்கள் கணிணியில் ‘விண்டோஸ்’ ஒவ்வொரு முறை துவக்கப்படுகையிலும், அத்தனை எழுத்துருக்களையும்(Fonts) லோட் செய்கிறது. இதனாலும், தாமதம் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, நீங்கள் பயன்படுத்தாத எழுத்துருக்களை கணிணியில் இருந்து நீக்கி விடலாம். அதற்கு, உங்கள் C:\Windows சென்று Fonts ஃபோல்டரைத்திறந்து, தேவைப்படாத எழுத்துருக்களை அழித்துவிடுங்கள். (எ.கா. Windings). உங்கள் கணிணி பயன்படுத்தும் எழுத்துருக்கள் சிவப்பு நிறத்தில் A என்ற எழுதப்பட்டிருக்கும். அவற்றை அழித்து விடக்கூடாது. கவனம்.
6. பொதுவாக கணிணியில் கோப்புகள் பதியப்படும்பொழுது துண்டாக்கப் பட்டுப் பதியப்பட்டிருக்கலாம் (Fragmentation). இதன் காரணமாக நீங்கள் ஒவ்வொரு முறை அந்தக் கோப்பைத் திறக்கும்பொழுதும் கணிணி அந்த முழுக் கோப்பின் துண்டுகளைத்தேடித் தேடி இணைத்துத் தருகிறது. இதனால் நீங்கள் கோப்பைத் திறக்கத் தாமதமாகிறது. இப்பிரச்னை,நீங்கள் குறைந்தது மாதம் ஒருமுறையாவது உங்கள் கணிணியை Defragmentation செய்வதன் மூலம் தீர்ந்துவிடும். எப்பொழுதெல்லாம் உங்கள் கணிணியில் ஏராளமான கோப்புகள் குவிந்து விடுகின்றனவோ, உங்கள் கணிணி வட்டியக்கியில் (டிஸ்க் ட்ரைவ்) உள்ள காலியிடம் 15 சதவீதத்திற்கு கீழ் வந்துவிடுகையிலோ, நீங்கள் உங்கள் கணிணியில் புதிய நிரல்கள் அல்லது ‘விண்டோஸ்’ மென்பொருளின் சமீப வெளியீடு எதையாவது நிறுவுகையிலோ நீங்கள் Defragmentation செய்வது மிகவும் அவசியம்.
7. CCleaner என்ற நிரலானது உங்கள் கணிணியில் உள்ள தற்காலிகக்கோப்புகள், தேவையற்ற கோப்புகளை நீக்கவும், உங்கள் ‘Registry’ யில் உள்ள பிரச்னைகளைச் சரிசெய்யவும் உதவுகிறது.
8. XP Boot Logo ஒவ்வொரு முறையும் உங்கள் கணிணியை இயக்குகையில் நிறுவப்படாதவாறு முடக்கம் செய்யுங்கள்.
9. தேவையற்ற பயன்படாத Portகளை முடக்கிவையுங்கள்
10. உங்கள் Hard Disk ஐ, பிரித்து ‘சி’ ‘டி’, ‘இ’ எனத்தனித்தனியாக வைப்பது உங்கள் கணிணியில் செயல்பாடு வேகமடைய உதவும்.
11. அடிக்கடி உங்கள் கணிணியின் தட்டச்சுப் பலகை, கணிணி எலி, கணிணியில் உள்ள விசிறி முதலியவற்றைச் சுத்தம் செய்யுங்கள்.
12. உங்கள் கணிணியில் நச்சுநிரல்களை கண்டறிவதற்கான/அழிப்பதற்கான நிரல்களை அடிக்கடி பயன்படுத்துங்கள். பல நேரங்களில் நச்சு நிரல்கள், கணிணியில் செயல்படும் திறனைக் குறைக்கின்றன.
13. சமீபத்தில் பார்க்கப்பட்ட கோப்புகள் என்ற பயன்பாட்டை நீங்கள் உபயோகப்படுத்துவதில்லை எனில், அதை நிரந்தரமாக முடக்கி வைக்கலாம். இது உங்கள் கணிணியின் வேகத்தைக் குறைக்கும் ஒரு செயல்பாடு. அதை முடக்குவதன்மூலம் உங்கள் கணிணியின் வேகம் அதிகரிக்கிறது.
14. உங்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் வேறு இடத்தில் சேமித்தபின் உங்கள் கணிணியை ‘Reformat’ செய்யுங்கள். உங்கள் கணிணியின் வேகத்தை அதிகப்படுத்தக் கூடிய எளிய வழி இது.
15. இணையத்தில் தேவையற்ற விளம்பரங்கள் வந்து உங்கள் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க ‘AdBlocker’ பொருத்துங்கள்.
16. இது எல்லாவற்றையும் விட மிகவும் எளிய வழி……ஒரு புதிய நவீனமான கணிணியை வாங்கி விடுங்கள்.

லேப்டாப்பில் Volume மிகக் குறைவாக உள்ளதா?

நமக்கு லேப்டாப்ல படம் பார்க்கற பழக்கம் இருக்கும்.. ஆனா படம் பார்க்கறப்போ சவுண்ட் ரொம்பக் கம்மியா கேக்கறதா ஃபீல் ஆவோம் இல்லைங்களா.. அதுவும் கொஞ்சம் இறைச்சலான இடங்கள்ல பார்தோம்னா படத்துல என்ன பேசறாங்கன்னே கேக்காது.. அதனால பெரும்பாலானவங்க ஹெட்போனோ அல்லது ஸ்பீக்கர்ஸோதான் கனைக்ட் பண்ணியிருப்போம்..
                                             
நான் “KMPlayer” அப்படிங்கற பிளேயர் யூஸ் பண்றேங்க.. இதுல படம் பார்த்தோம்னா அந்த பிரச்சினையே இல்ல.. நல்லா சவுண்ட் வருது.. நிறைய வசதிகள் கொடுத்துருக்காங்க.. பெரும்பாலானவங்களுக்கு சப்டைட்டில் யூஸ் பண்ணி படம் பார்க்கற பழக்கம் இருக்கும்.. இந்த பிளேயர்ல சப்டைட்டிலை நாமே எடிட் பண்ற மாதிரி வசதிகள் எல்லாம் கொடுத்திருக்காங்க..
உதாரணத்துக்கு சொல்லனும்னா சில படங்கள்ல டயலாக் டெலிவரிக்கும் சப்டைட்டில் டிஸ்பிளே ஆகறதுக்கும் வேரியேசன் இருக்கும் இல்லையா.. அந்த மாதிரி ஆகறப்போ நம்மளே அதை சரி செய்யமுடியும் இதுல இருக்கற ஆப்சன் வைச்சு.. இன்னொரு ஆப்சன்.. நாம ஒரு சப்டைட்டில் டவுன்லோட் பண்ணி இருப்போம்.. ஆனா பிளேயர்ல அந்த சப்டைட்டிலைக் காமிக்காது.. இந்தப் பிளேயர்ல நாம டவுன்லோட் பண்ணியிருக்கற சப்டைட்டிலை பிளேயர்ல இருந்தே புரெளஸ் ஆப்சன் மூலமா கண்டுபிடிச்சு ரன் பண்ண வைக்க முடியும்.. ஒரே நேரத்துல ஒன்னுக்கு மேற்பட்ட சப்டைட்டில் லோட் பண்ணி படம் பார்க்க முடியும்.. இந்த மாதிரி நிறைய ஆப்சன்ஸ் இருக்கு..
சப்டைட்டில் டிஸ்பிளே ஆகாத பட்சத்துல நான் இன்னொரு டிரிக்ஸ் யூஸ் பண்றேங்க.. நம்ம படத்தோட டைட்டில் “Flightplan[2005][Eng]” இப்படி இருக்கு சிஸ்டத்துல.. நாம டவுன்லோட் பண்ணியிருக்கற சப்டைட்டிலோட தலைப்பு “Flightplan[2005]” இப்படின்னு இருக்கு.. இப்போ படத்தை ரன் பண்ணினா சப்டைட்டிலைக் காமிக்காது.. ஆப்சன்ஸ் எல்லாம் கரெக்டா ஆன் ஆயிருக்கு.. ஆனா ஏன் காமிக்கலைன்னு நாம குழம்புவோம்.. இதுக்கு காரணம் படத்தோட டைட்டிலும்.. சப்டைட்டிலோட டைட்டிலும் வேற வேறயா இருக்கு.. இப்போ நாம சப்டைட்டிலையும் “Flightplan[2005][Eng]” அப்படின்னு ரீநேம் பண்ணீட்டோம்னா படம் சூப்பரா சப்டைட்டிலோட ரன் ஆகும்..
KMPlayer டவுன்லோட் பண்ண இங்கே கிளிக் பண்ணுங்க..

வேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு 6.19

வேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு 6.19

undefined
3 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிடப்பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்கமும் செய்யபட்டுள்ளது. தற்போது அது சரியாக வேலை செய்யவில்லை, நிறைய சகோதரர்கள் கேட்டுக்கொண்டதற்குக்காக இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு 6.19ஐ இந்த பதிப்பில் கிராக் செய்து முழு பதிப்பாக ஆக்கலாம்.


நாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விடஇன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் வழியாக தரவிறக்கம் செய்யும்போது 5 மடங்கு வேகமாக தரவிறக்கம் நடைப்பெறுகிறது. இது ஒரு கட்டண மென்பொருள். இதன் சந்தை மதிப்பு $25 ஆகும்.

(ziddu link) ல் தரவிறக்கம் செய்யும்போது எப்போதும் Download with ziddu accelerator and get recommended offers என்று இருக்கும் பாக்ஸ்சில் உள்ள டிக்கை நீக்கிவிட்டு டவுன்லோட் செய்யவும். தேவை இல்லாத pop up களை தவிர்க்கலாம்.

கண்டிப்பாக நெட்டை டிஸ்கனக்ட் செய்துவிட்டுதான் கிராக் செய்ய வேண்டும்.


கிழே உள்ள ஏதாவது ஒரு லிங்கில் கிளிக் செய்து IDM ஜ தரவிறக்கி இன்ஸ்டால் செய்துக்கொள்ளவும்.

idm வெப் சைட் லிங்க் ட்ரையல் வர்சன்

idm ziddu link

கிழே ஏதாவது ஒரு லிங்கில் சென்று கிராக் டவுன்லோட் செய்து Copy செய்து வைத்துக்கொள்ளவும்.

கிராக் media fire link                                     கிராக் ziddu link

முதலில் C கோலனில் Program File ஐ ஓபன் பண்ணவும்.



அடுத்து Internet Download Manager ஓபன் செய்து, அதில் முதலில் Copy செய்து வைத்துஇருந்த கிராக் ஜ இந்த இடத்தில் Paste பண்ணவும்.



Copy and Replach கொடுக்கவும்.


இன்னும் ஒரு வேலை இறுக்கு. கிழே 32 bit, 64 bit இரண்டுக்கும் தனிதனியாக RegKay கொடுத்து இருக்கிறேன். உங்கள் கணிணிக்கு தேவையானதை டவுன்லோட் செய்து கொள்ளவும்.

RegKey 64 bit media fire link                                   RegKey 64 bit ziddu link

RegKey 32 bit media fire link                                   RegKey 32 bit ziddu link


இப்போது டவுன்லோட் செய்த RegKeyயை டபுள் கிளிக் செய்து ஓபன் செய்தால் வரும் விண்டோவிற்கு yas கொடுக்கவும். அடுத்து உங்கள் IDM Successfully added என்று வந்துவிடும் OK கொடுங்கள். அவ்வளவுதான்

டிஸ்கி - 

ஏற்கனவே உங்கள் கணினியில் இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பழைய பதிப்பு இருந்தால் அதை அன்இன்ஸ்டால் செய்து விட்டு கணினியை ரிஸ்டார்ட் செய்து விட்டுதான் இதை இன்ஸ்டால் செய்ய வேண்டும். 

கண்டிப்பாக நெட்டை டிஸ்கனக்ட் செய்துவிட்டுதான் கிராக் செய்ய வேண்டும்.

ஹார்ட் ட்ரைவ்கள் நீண்ட நாள் உழைக்க

ஹார்ட் ட்ரைவ்கள் நீண்ட நாள் உழைக்க

undefined
நாம் எல்லாரும் நம்முடைய கம்ப்யூட்டர்கள் பல ஆண்டுகள் எந்தப் பிரச்னையும் இன்றி, சரியாகச் செயல்படும் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இதன் ஆயுட்காலத்தினை பல ஆண்டுகள் நீட்டித்து வைப்பது நம் கரங்களில் தான் இருக்கிறது. இதில் முக்கியமாக நாம் காண வேண்டியது, நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கினைத்தான். இது கெட்டுப் போய் நின்றுவிட்டால், அதில் உள்ள பைல்கள் மட்டுமின்றி, ஹார்ட் டிஸ்க்கினையே இழக்க வேண்டி வரும்.


ஒரு ஹார்ட் டிஸ்க்கின் வாழ் நாள் குறைந்திடப் பல காரணங்கள் உள்ளன. இவற்றில் நாம் எதனை நம் அளவில் தவிர்க்கலாம் அல்லது சரி செய்திடலாம் என இங்கு பார்க்கலாம்.

நாமாக ஏற்படுத்தும் சேதம்: 


undefined

ஹார்ட் டிஸ்க் ஒன்றை முற்றிலுமாகப் பயனற்றுப் போகச் செய்வது அதில் நாமாக ஏற்படுத்தும் சேதம் தான். நாமாக எப்படி சேதம் ஏற்படுத்த முடியும். ஹார்ட் டிஸ்க் தான், மிகப் பத்திரமாக ஒரு மூடப்பட்ட, உறுதியான அலுமினியம் டப்பாவில் அடைக்கப்பட்டு உள்ளதே. காற்று கூடப் போகமுடியாதபடி அல்லவா இருக்கிறது என்ற கேள்வி உங்கள் மனதில் வரலாம். நாம் எண்ணுவதெல்லாம் சரிதான். ஆனால், ஹார்ட் டிஸ்க்கில் தான், அதன் செயல்பாட்டின் போது, நகரும் பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. இந்த நகரும் பகுதிகள் எல்லாம், மிகவும் சிறிய தவறான அசைவில் கூட கெட்டுப் போகும் வாய்ப்பு கொண்டவை. ஹார்ட் ட்ரைவ் செயலாற்றுகையில், வேகமாகச் சுழலும். அப்போது ஏற்படும் சிறிய அதிர்ச்சி கூட அதற்குப் பிரச்னையைத் தரும். சுழலாத போதும் அதிர்ச்சி தரும் வகையில் அதன் மீது தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடாது. அப்படியானல், அதனை எப்படி பாதுகாக்கலாம்?

கம்ப்யூட்டரில் ஹார்ட் டிஸ்க் ஒன்றை இன்ஸ்டால் செய்த பின்னர், அதனை கம்ப்யூட்டரிலிருந்து எடுக்கக் கூடாது. அப்படி எடுப்பதாக இருந்தால், அதனை இன்னொரு கம்ப்யூட்டர் கேபினில் மாற்றி இணைப்பதற்காகத்தான் இருக்க வேண்டும். இதனை மிக மெதுவாகவும், விரைவாகவும், அதற்கேற்ற உபகரணங்களைக் கொண்டும் மேற்கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் செயல்பாட்டில் இருக்கையில், அதனை அசைத்துப் பார்ப்பது கூடாது. வெளியே எடுப்பதாக இருந்து, எடுத்துவிட்டால், அதனைப் பத்திரமான ஓர் இட த்தில் வைத்துப் பாதுகாப்பாக வைத்திட வேண்டும்.

ஹார்ட் ட்ரைவ்களைப் பொறுத்தவரை, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் உள்ளவை தான், ஆபத்தினை விளைவிக்கும் சூழ்நிலைகளை அதிகம் எதிர் கொள்பவை ஆகும். இதற்காக, லேப்டாப் இயங்குகையில், அடுக்கி வைக்கப்பட்ட முட்டைகளின் மீது நடப்பது போல நடக்க வேண்டாம். ஆனாலும், சற்று கூடுதலான எச்சரிக்கையுடன் அதனைக் கையாள வேண்டும். டேபிளின் மீதோ, அல்லது சுவர் மீதோ, இது மோதினால், பிரச்னை ஏற்பட்டு, அதில் பதியப்பட்டுள்ள டேட்டாவுக்குச் சேதம் ஏற்படலாம். அவை கரப்ட் ஆகலாம்.

அதிக வெப்பம்:
ஹார்ட் டிஸ்க்குகளின் பெரிய எதிரி, அவை சந்திக்கும் அளவிற்கு அதிகமான வெப்பம் தான். ஹார்ட் ட்ரைவ்கள் அனைத்துமே, ஒரு குறிப்பிட்ட அளவு வரையே உஷ்ணத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பவை ஆகும். இது அவற்றைத் தயாரிக்கும் நிறுவனம் மற்றும் வகையைப் பொறுத்ததாகும். ஒவ்வொரு ஹார்ட் டிஸ்க்கும் எந்த அளவில் உஷ்ணத்தைத் தாங்கும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோ, அந்த அளவிற்குள்ளாகவே, அது சந்திக்கும் உஷ்ணநிலை இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வகையில், பாதுகாப்பான சூழ்நிலையை அதற்குத் தர வேண்டும். இந்த பாதுகாப்பான சூழ்நிலை என்பது, கம்ப்யூட்டர் ஷெல் வழியாக, காற்றானது நன்றாகச் சென்று வர வேண்டும். உள்ளே செல்வதும், வெளியேறுவதும் சரியாக இருக்க வேண்டும். இதற்கென அமைக்கப்பட்ட விசிறிகள் சரியான வேகத்தில் எப்போதும் சுழல வேண்டும்.

நாம் அமர்ந்திருக்கும் அறை, நாம் பணியாற்றத் தேவையான சரியான வெப்ப சூழ்நிலையைத் தந்து கொண்டிருக்கலாம். ஆனால், அதே சூழ்நிலை கம்ப்யூட்டர் மற்றும், அதன் உள்ளே இருக்கும் சாதனங்களுக்கும் கிடைக்கிறது என்று எண்ணக் கூடாது.
இதனை உறுதி செய்திட, அவ்வப்போது கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் ஆகியவற்றைக் கழற்றி, அதன் உள்ளே சென்று தங்கியிருக்கும் தூசியை நீக்க வேண்டும். பொருத்தப்பட்டுள்ள சிறிய மின் விசிறிகளின் சுழலும் தகடுகளில் தங்கியிருக்கும் தூசியை நீக்க வேண்டும். அவற்றின் சுழலும் வேகம் சரியாக இருப்பதனை உறுதி செய்திட வேண்டும். லேப்டாப் கம்ப்யூட்டர்களில், குறைவான தூசி செல்வதையும், அதிகமான காற்று சென்று வருவதையும் உறுதி செய்திட வேண்டும்.

சிதறியபடி பதியப்படும் பைல்கள்:
பைல்களைச் சிதறியபடி ஹார்ட் டிஸ்க்கில் பதிவது நேரடியாக ஹார்ட் டிஸ்க்கினைப் பாதிக்காது. இருப்பினும், பைல் ஒன்று, பல துண்டுகளாக, பல இடங்களில் சேவ் செய்யப்பட்டிருந்தால், அதனைத் தேடும்போதும், படிக்கும் போதும், மேலும் எழுதும்போதும், ஹார்ட் டிஸ்க் தேவைக்கு அதிகமாகச் சுழன்று அதில் உள்ள டேட்டாவினைப் படிக்கவும் எழுதவும் முயற்சிக்கும்.

இதனால், ஹார்ட் டிஸ்க்கின் செயல்திறன் கூடுதலாகி, அதன் வாழ்நாள் குறையும் அபாயம் ஏற்படுகிறது. பைல் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக எழுதப்பட்டிருந்தால், இந்த பிரச்னை ஏற்படாது. இந்த பாதிப்பு உடனடியாகத் தெரியாது. ஆனால், பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்.

undefined
இதனை எப்படித் தீர்க்கலாம்? இதற்கான வழி defragmentation தான். இது NTFS 
வகை ட்ரைவ்களில் பெரிய பிரச்னையே அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்னால் பயன்படுத்தப்பட்டு வந்த FAT32 ட்ரைவ்களில் தீர்வு காண வேண்டிய பிரச்னையாகும். இத்தகைய ட்ரைவ்களை இன்னும் பயன்படுத்துவோர், கட்டாயம் அவர்களின் ஹார்ட் டிஸ்க்குகளை defragment செய்திட வேண்டும். இதற்கு இணையத்தில் நிறைய டூல்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால், அதற்காக, அடிக்கடி defragment செய்திடுவதும் தவறு.

டிபிராக் செய்வதனால், கம்ப்யூட்டரின் செயல்பாடு கூடுதல் வேகத்தில் இருக்கும். பைல்களைக் கண்டறிவதும், அவற்றைக் கையாள்வதும் வேகமாக நடக்கும். மேலும், பெற இயலாத பைல்களைத் தேடிக் கண்டறிவதும் எளிதான செயலாக மாறும்.
அடிக்கடி இயக்குவதும் நிறுத்துவதும்

ஹார்ட் ட்ரைவினைப் பொறுத்தவரை அதனை பூட் செய்வதும், ஷட் டவுண் செய்வதுமே அதற்கு அதிக சிரமம் தரும் செயலாகும். அடிக்கடி அதனைச் சுழலவிடுவதும், சுழல்வதைத் திடீரென நிறுத்துவதும், ஹார்ட் டிஸ்க்கினை விரைவில் கெட்டுப் போக வைத்திடும்.

இதில் நமக்குச் சிக்கலான ஒரு சூழல் ஏற்படுகிறது. எந்நேரமும் ஹார்ட் டிஸ்க்கினை இயக்கத்தில் வைத்திருக்க முடியாது. அதற்காக, அதனை அடிக்கடி இயக்குவதும் நிறுத்துவதும் அதற்குக் கேடு விளைவிக்கும். இரண்டிற்கும் இடையேயான பாதுகாப்பான கோடு எதுவாக இருக்கும்? இப்போது கம்ப்யூட்டரை standby அல்லது hibernation என இரு நிலைகளில் வைக்கும் வசதி உள்ளது.

குறைந்த நேரம் நீங்கள் கம்ப்யூட்டரை விட்டுச் செல்வதாக இருந்தால், இந்த இரு நிலைகளில் ஒன்றில் வைத்துவிட்டுச் செல்லலாம். அதிக நேரம் எனில், கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்திவிட்டுச் செல்வதே நல்லது. அதாவது ஹார்ட் டிஸ்க்கினை முழுமையாக நிறுத்துவது இங்கு விரும்பத்தக்கது.

மின்சக்தியில் ஏற்றத் தாழ்வு: 

மின்சாரம் நமக்கு எப்போதும் ஒரே சீராகக் கிடைப்பதில்லை. அதன் பயன்பாட்டு சக்தியில் ஏற்றத் தாழ்வு ஏற்படும். இது மிகக் குறைவான நானோ செகண்ட் அளவில் ஏற்பட்டாலும், டிஜிட்டல் சாதனங்களில் பிரச்னையை ஏற்படுத்தும். 

கம்ப்யூட்டருக்குச் செல்லும், மின்சார ஓட்டத்தில் இந்த ஏற்றத் தாழ்வு இருந்தால், அது நிச்சயம் ஹார்ட் டிஸ்க்கினைப் பாதிக்கும். இதனை ஆங்கிலத்தில் surges என்று சொல்வார்கள். இதிலி ருந்து ஹார்ட் டிஸ்க்கினை எப்படிப் பாதுகாக்கலாம்? சர்ஜ் ப்ரடக்டர் (surge protector) என்னும் பாதுகாப்பு சாதனம் இதற்கென வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. இவை, மின்சக்தி ஓட்டத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை உடனுடக்குடன் கண்டறிந்து, அவற்றை இந்த சாதனங்களுக்குக் கடத்தாமல் திருப்பி விடும் வேலையை மேற்கொள்கின்றனர். நம் கம்ப்யூட்டரையும், ஹார்ட் டிஸ்க்கினையும் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால், இது போன்ற ஒரு சர்ஜ் புரடக்டரை வாங்கி இணைப்பது நல்லது.

மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு வழிகளைப் பின்பற்றிய பின்னரும், உங்கள் கம்ப்யூட்டர் அல்லது ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போகும் வாய்ப்புகள் ஏற்படும். இருப்பினும் இந்த தகவல்களைத் தெரிந்து கொண்டு, அவற்றிடம் இருந்து கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது.

Aiseesoft BluRay பிளையர் இலவசமாக

Aiseesoft BluRay பிளையர் இலவசமாக

எனது வலைதளம் பல தடவை பார்வையிட பட்டுள்ளது அனைவருக்கும் மிக்க நன்றி. தற்போது இணையத்தில் BluRay, Full HD 1080p வீடியோக்கள் நிறைய கிடைக்கிறது. அந்த வீடியோக்களை அதன் தரம் குறையாமல் பார்க்க இந்த Aiseesoft ப்ளு ரே பிளையர் உதவுகிறது. இது ஒரு கட்டண மென்பொருள் $39 மதிப்புள்ளது. இதனை இலவசமாக பெற கீழே நான் சொல்லியுள்ள படி செயல் படுத்தவும்.

கிழே உள்ள ziddu லிங்கில் தரவிறக்கும்போது  Download with ziddu accelerator and get recommended offers என்று இருக்கும் பாக்ஸ்சில் உள்ள டிக்கை நீக்கிவிட்டு டவுன்லோட் செய்யவும். தேவை இல்லாத pop up களை தவிர்க்கவும்.

முதலில் Aiseesoft BluRay பிளையர் தரவிறக்கி இன்ஸ்டால் செய்யவும்.

                                                        Aiseesoft Blu Ray Player 


அடுத்து                 கிராக் டவுன்லோட் செய்ய கிளிக் செய்யவும்

undefined


முதலில் டவுன்லோட் செய்த கிராக்கை winrar உதவியுடன் extract செய்த பிறகு (Framework.dll ) கோப்பி செய்து கொள்ளவும். அடுத்து C கோலன் ஓபன் செய்து அதில் உள்ள(அடுத்தடுத்து) Program Files - aiseesoft studio - aiseesoft Blu ray player - Framework.dll என்பதில் பேஸ்ட் செய்தால் போதும். இப்போது Aiseesoft BluRay பிளேயர் முழு பதிப்பாகி விடும்.


டிஸ்கி -

நெட்டை டிஷ்கனக்ட் செய்து விட்டுத்தான் ஆக்டிவ் செய்ய வேண்டும்.

இந்த பதிவு அனைவருக்கும் சென்றடைய Face Book, Google + ல் சேர் செய்யவும். பிடித்து இருந்தால் மறக்காமல் கருத்துக்களையும் ஓட்டையும் பதிவு செய்யவும்.

Sunday, 26 October 2014

விண்டோஸ் 10 புதிய வசதிகள் &Technical Preview DOWNLOAD

விண்டோஸ் 10 புதிய வசதிகள் &Technical Preview DOWNLOAD

undefined
ஒரு வழியாக, மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் அடுத்த விண்டோஸ் இயக்க முறைமையை அளித்து, நம்மை திடீர் மகிழ்ச்சியில் தள்ளியுள்ளது. பல மாதங்களாகவே, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாற்றாக, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றைத் தர வேண்டிய கட்டாயத்திற்கு மைக்ரோசாப்ட் தள்ளப்பட்டது. என்னதான், சின்ன சின்ன மாற்றங்களைத் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் அறிவித்தாலும், மக்கள் முழுமையாக அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.


எனவே, தாங்கள் தொடர்ந்து விரும்பும் சில வசதிகளுடன், நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் புதிய விண்டோஸ் சிஸ்டம் கிடைக்கும் என எதிர்பார்த்தனர். மைக்ரோசாப்ட் நிறுவனமும் "Windows Threshold" என்ற குறியீட்டுப் பெயரில், வாடிக்கையாளர்களின் அனைத்து எதிர்ப்பார்ப்புகளையும் உள்ளடக்கிய புதிய விண்டோஸ் சிஸ்டத்தினை வடிவமைப்பதில் இறங்கியது.

இது குறித்து பல புதிய தகவல்கள் கசிந்தன. அனைவரும் இது விண்டோஸ் 9 அல்லது வேறு ஒரு பெயரில் (WindowsTH ("Windows Threshold"), Windows X, Windows One) என வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், சென்ற மாத இறுதியில், மைக்ரோசாப்ட் தன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ''விண்டோஸ் 10'' என்ற பெயருடன் வெளியிட்டது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு, அங்கு தரப்படும் வை பி இணைப்பைப் பயன்படுத்தத் தேவையான பாஸ்வேர்ட் “Windows2015” என அறிவிக்கப்பட்டது. அதனால், அனைவரும், வர இருக்கும் விண்டோஸ் சிஸ்டம் பெயர் விண்டோஸ் 2015 எனவே எண்ணி இருந்தனர். ஆனால், ''விண்டோஸ் 10'' என எதிர்பாராத பெயர் அறிவிக்கப்பட்டது.

இதில், விண்டோஸ் 7 மற்றும் 8 சிஸ்டங்களில் உள்ள, வாடிக்கையாளர்களால் சிறந்தது என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்து வசதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த அறிமுக விழா, இதுவரை, கடந்த 20 ஆண்டுகளில், விண்டோஸ் அறிமுகப்படுத்தப்பட்ட விழாக்களுக்கு மாறான முறையில் இருந்தது. இந்த விழாவில் நமக்குக் கிடைத்த புதிய தகவல்களை இங்கு பார்க்கலாம்.

ஏன் விண்டோஸ் 10?

இந்த புதிய வெளியீட்டிற்கு, இயற்கையான தொடர் எண்ணாக 9 தான் இருந்திருக்க வேண்டும். இதனை வடிவமைத்த குழுவின் தலைவரான டெர்ரி மையர்சன் பேசுகையில், இது கடந்த கால விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களின் தொடர்ச்சி அல்ல. முற்றிலும், முற்றிலும், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். எனவே தான், 

தொடர் எண்ணாக இல்லாமல் விண்டோஸ் 10 என இது பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று அறிவித்தார். இது பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் மட்டுமின்றி, இணையத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய அனைத்து சாதனங்களிலும் (வீட்டு பொருட்கள் உட்பட), பெர்சனல் கம்ப்யூட்டர், டேப்ளட் பி.சி., எக்ஸ் பாக்ஸ், க்ளவ்ட் இயக்க சாதனங்கள் என அனைத்திலும் இயங்கக் கூடியதாக இருக்கும். எனவே தான், முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களிலிருந்து வேறுபட்டதாக இதற்கு விண்டோஸ் 10 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஒரே மேடையும் வேறுபாடான அனுபவமும்

வெவ்வேறு தன்மையுள்ள, இயக்கம் கொண்ட அனைத்து சாதனங்களிலும் விண்டோஸ் 10 இயங்கினாலும், பயனாளர்களைப் பொறுத்த வரை வேறுபட்ட அனுபவத்தினையே இந்த சிஸ்டம் தரும். மொபைல் போன், டேப்ளட் பி.சி.க்கள் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கென வெவ்வேறு இடைமுகங்களை (Interfaces) இந்த சிஸ்டத்திற்கென, தனி குழு வடிவமைத்து வருகிறது. ஒரே ஸ்டோர் தரும் ஒரே கட்டமைப்பு இயக்கமாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் தங்கள் சாதனங்களுக்கேற்ப அனுபவத்தினைப் பெறுவார்கள். இதுவரை மைக்ரோசாப்ட் தந்ததில் இதுவே, அனைத்தையும் அரவணைத்து இயங்கும் சிஸ்டமாக இருக்கும்.

நிறுவனங்களின் எதிர்பார்ப்பு

விண்டோஸ் 10 மூலம், தன் நிறுவன வாடிக்கையாளர்களை, குறிப்பாக பெரிய அளவில் தங்கள் நிறுவன நிர்வாக நடவடிக்கைகளில் விண்டோஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மைக்ரோசாப்ட் நிறைவேற்றியுள்ளது. விண்டோஸ் 8 மூலம் பலத்த ஏமாற்றத்தைச் சந்தித்தவர்கள் இந்த நிறுவனங்கள் தான். இது
undefined
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அதிர்ச்சியையும், இழப்பையும் கொடுத்தது. எனவே தான், விண்டோஸ் 10 மூலம் இவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் மைக்ரோசாப்ட் அதிக முயற்சிகளை எடுத்து, புதிய சிஸ்டத்தினை வடிவமைத்துள்ளது. இந்த பெரிய நிறுவனங்களுக்கான தேவைகளை நான்கு பிரிவுகளில் நிறைவேற்றியுள்ளது.

தங்கள் கம்ப்யூட்டர்களின் இயக்க முறைமையினை மேம்படுத்துகையில், நிறுவனங்கள், புதிய முறைமை தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு, நன்றாகப் பழகிய ஒன்றாகவே இருக்க வேண்டும்; ஏற்கனவே இயங்கிய முறைமைக்கு எந்த விதத்திலும் இணைவாக, இசைவாக இல்லாமல் இருக்கக் கூடாது. புதிய முறைமையினால், கூடுதல் திறன் கிடைக்க வேண்டும். உற்பத்தி திறன் அதிகரிக்க வேண்டும். மேலும், நிர்வாகத்தில் புதியதாக உருவாகி வரும் திறன்களை வளர்ப்பதாக இருக்க வேண்டும். மொபைல் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பி.சி.க்கள் வழியாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதில், புதிய சிஸ்டம் துணையாக இருக்க வேண்டும். புதிய சாதனங்களோடு, பழைய சர்வர்கள் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்களுடனும் இது இணைவாகச் செயல்பட வேண்டும்.

விண் 7 மற்றும் 8 மேம்பாடு

இந்த புதிய விண்டோஸ் 10 சிஸ்டம், விண்டோஸ் 7 மற்றும் 8 பயன்படுத்துவோர் எளிதாக அப்கிரேட் செய்திடும் வகையில் தரப்படுகிறது. இந்த இரண்டு சிஸ்டம் பயன்படுத்துவோர் என்ன என்ன எதிர்பார்க்கின்றனரோ, அவை அனைத்தையும் தருவதில் விண்டோஸ் 10 முயற்சி செய்துள்ளது. விண்டோஸ் 7 பயன்படுத்துவோர், ஸ்டார்ட் மெனு, டாஸ்க்பார் மற்றும் டெஸ்க்டாப் வசதிகளைப் பெறுவார்கள். விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்கள், அது தொடு உணர் திரையாகவோ, அது இல்லாமலோ இருந்தாலும், ஸ்டார்ட் ஸ்கிரீன் பெறுவார்கள். டச் இண்டர்பேஸ் மேம்படுத்தப்பட்டு, வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிதாக்கப்படும். விண்டோஸ் 10ல், உலகளாவிய தேடலை இணையம் வழி மேற்கொள்ள தேடல் கட்டம் தரப்படுகிறது.

வழக்கமாக புதிய சிஸ்டங்கள் உருவாக்கப்படுகையில் பில்ட் எண் (Build number) ஒன்று அதற்கு வழங்கப்படும். விண் 10 சிஸ்டம் காட்டப்படுகையில் அது 9841 ஆக இருந்தது. முழுமையாக வெளிவரும்போது இதுவாக இருக்கலாம்; அல்லது வேறாக இருக்கலாம்.

சில சிறிய புதிய வசதிகள்

அப்ளிகேஷன்களை அப்படியே தள்ளி வைத்திட Snap என்னும் டூல் தரப்பட்டது. இது மேம்படுத்தப்பட்டு, Snap Assist UI என்ற பெயரில், அப்ளிகேஷன்களை அடுத்த திரைக்குத் தள்ளிவைக்கும் எளிய வேலையை மேற்கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ளது. கட்டளைப் புள்ளி (command prompt) வழியேயும், நாம் இதுவரை பரவலாகப் பயன்படுத்தும் ஷிப்ட் கட்டளைகள் மற்றும் CTRL + C போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

கைவிடப்படும் டூல்கள்

Charms டூல் நீக்கப்பட்டு, அதன் இடத்தில் புதிய யூசர் இண்டர்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. இதே போல Switcher டூல் இல்லாமல் போனாலும், விண் 8ல், இடது புறத்திலிருந்து ஸ்வைப் செய்கையில், ALT + TAB க்கான செயல்பாட்டினைப் பெறலாம்.

புதிய டூல்

விண்டோஸ் 8ல், மெட்ரோ மற்றும் வழக்கமான டெஸ்க்டாப் இடைமுகத்திற்கும் நம்மால் எளிதாக மாற்றிக் கொள்ள முடிந்தது. இதனை Continuum என்ற டூல் மூலம், அனைத்து வகை சாதனங்களிலும் இந்த மாற்றத்தினை எளிதாக மேற்கொள்ளும் வகையில் மைக்ரோசாப்ட் தந்துள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப்

ஒரே நேரத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப்பினை அமைத்து இயக்க, விண்டோஸ் 10 சிஸ்டம் வழி தருகிறது. ஒவ்வொரு டெஸ்க்டாப்பிலும், நமக்குத் தேவைப்படும் பல அப்ளிகேஷன் புரோகிராம்களை, ஒரே நேரத்தில் இயக்கலாம். இதனால் வேலை விரைவில் முடியும்.

விண்டோஸ் 10 சிஸ்டத்தின் தொழில் நுட்ப முன் சோதனைக்கான பதிப்பினை மைக்ரோசாப்ட் பொதுமக்களுக்காக வெளியிட்டுள்ளது. இதனைhttp://preview.windows.comஎன்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். பெற்று, இன்ஸ்டால் செய்து, பயன்படுத்திப் பார்க்கலாம். பன்னாடுகளில் இருந்து கிடைக்கும், பின்னூட்டங்களின் அடிப்படையில், விண்டோஸ் 10 இயக்க முறைமை சீர் செய்யப்பட்டு, பொதுமக்களுக்குக் கிடைக்கும்.

அநேகமாக, அடுத்த ஆண்டின் நடுவில், இது பொதுமக்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விண்டோஸ் 8 பயன்படுத்துவோருக்கு, விண்டோஸ் 10 இலவசமாகக் கிடைக்குமா என்பதற்கான விடையை, மைக்ரோசாப்ட் நிறுவன நிர்வாகிகள் எவரும் கூறவில்லை. ஆனால், விண்டோஸ் வாடிக்கையாளர்கள் இதனை எதிர்பார்க்கின்றனர். ஆப்பிள் நிறுவனம் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இலவசமாகத் தந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதே போல, விண்டோஸ் 10 க்கான விலை குறித்தும், இன்னும் எந்த அறிவிப்பும் வரவில்லை.




DOWNLOAD LINK                     Language -  English            File Type : ISO


Key -  NKJFK-GPHP7-G8C3J-P6JXR-HQRJR


32 BIT    CLICK HERE                                    64 BIT    CLICK HERE

சாதாரண வீடியோக்களை 3D வீடியோவாக மாற்றும் மென்பொருள் இலவசமாக

சாதாரண வீடியோக்களை 3D வீடியோவாக மாற்றும் மென்பொருள் இலவசமாக

vadakaraithariq.blogspot.com

நம்மிடம் இருக்கும் வீடியோக்களை ஒரு பார்மட்டில் இருந்து வேறு வகையான பார்மட்டுக்கு மாற்றுவதற்கு ஏராளமான மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் இந்த மென்பொருளை கொண்டு நம்மிடம் உள்ள சாதாரண இரு பரிமாண(2D) படங்களையும், வீடியோக்களையும் மிக எளிதாக முப்பரிமாண(3D) வீடியோக்களாக மாற்றலாம்.

இந்த மென்பொருள் மிக எளிதான முறையில் வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்றி தருகிறது. 3D மட்டும் அல்லாமல் எல்லாவிதமான
vadakaraithariq.blogspot.com
Add caption
வீடியோ, ஆடியோ, போட்டோக்களையும் நமக்கு தேவையான பார்மடுக்கு மாற்றிக்கொள்ளலாம். வீடியோ எடிட்டிங் வசதியும் உள்ளது.

இந்த மென்பொருள் இயங்குவதற்கு ஏற்புடைய சாதனம் நமக்கு தேவை. உதாரணாமக 3D தொலைக்காட்சி, LG முப்பரிமாண தொலைபேசி, NDS போன்ற சாதனங்களிலேயே 3D தன்மையை பார்வையிட முடியும். 3D முப்பரிமாண கணணி மானிட்டர் திரையினை கொண்டவர்கள் எளிதாக youtube ல் தரவேற்றி பார்வையிட்டுக் கொள்ளலாம்.

இது ஒரு கட்டண மென்பொருள், இதன் சந்தை மதிப்பு $30 ஆகும். இந்த மென்பொருள் டவுன்லோட் செய்ய



                                                     இங்கே கிளிக் செய்யவும்

இதனை இலவசமாக கிழே உள்ள ஈமெயில், சீரியல் எண் கொடுத்து பயன்படுத்தி கொள்ளவும்.



Email:         patrickmorvan7542@hotmail.com         Serial:JUSSHE6PUV4LU368PEKT2844LBC8ABU5TAQH3MA5NR48V2TKPNSSCEFG898M5KNS

இந்த மென்பொருளை பற்றி அறிந்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

டிஸ்கி -

   

   நெட்டை டிஷ்கனக்ட் செய்து விட்டுத்தான் ஆக்டிவ் செய்ய வேண்டும்.

 இந்த பதிவு அனைவருக்கும் சென்றடைய FaceBook, Google + ல் சேர் செய்யவும். பிடித்து இருந்தால் மறக்காமல் கருத்துக்களையும் ஓட்டையும் பதிவு செய்யவும்.