Sunday 26 October 2014

விண்டோஸ் 10 புதிய வசதிகள் &Technical Preview DOWNLOAD

விண்டோஸ் 10 புதிய வசதிகள் &Technical Preview DOWNLOAD

undefined
ஒரு வழியாக, மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் அடுத்த விண்டோஸ் இயக்க முறைமையை அளித்து, நம்மை திடீர் மகிழ்ச்சியில் தள்ளியுள்ளது. பல மாதங்களாகவே, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாற்றாக, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றைத் தர வேண்டிய கட்டாயத்திற்கு மைக்ரோசாப்ட் தள்ளப்பட்டது. என்னதான், சின்ன சின்ன மாற்றங்களைத் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் அறிவித்தாலும், மக்கள் முழுமையாக அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.


எனவே, தாங்கள் தொடர்ந்து விரும்பும் சில வசதிகளுடன், நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் புதிய விண்டோஸ் சிஸ்டம் கிடைக்கும் என எதிர்பார்த்தனர். மைக்ரோசாப்ட் நிறுவனமும் "Windows Threshold" என்ற குறியீட்டுப் பெயரில், வாடிக்கையாளர்களின் அனைத்து எதிர்ப்பார்ப்புகளையும் உள்ளடக்கிய புதிய விண்டோஸ் சிஸ்டத்தினை வடிவமைப்பதில் இறங்கியது.

இது குறித்து பல புதிய தகவல்கள் கசிந்தன. அனைவரும் இது விண்டோஸ் 9 அல்லது வேறு ஒரு பெயரில் (WindowsTH ("Windows Threshold"), Windows X, Windows One) என வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், சென்ற மாத இறுதியில், மைக்ரோசாப்ட் தன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ''விண்டோஸ் 10'' என்ற பெயருடன் வெளியிட்டது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு, அங்கு தரப்படும் வை பி இணைப்பைப் பயன்படுத்தத் தேவையான பாஸ்வேர்ட் “Windows2015” என அறிவிக்கப்பட்டது. அதனால், அனைவரும், வர இருக்கும் விண்டோஸ் சிஸ்டம் பெயர் விண்டோஸ் 2015 எனவே எண்ணி இருந்தனர். ஆனால், ''விண்டோஸ் 10'' என எதிர்பாராத பெயர் அறிவிக்கப்பட்டது.

இதில், விண்டோஸ் 7 மற்றும் 8 சிஸ்டங்களில் உள்ள, வாடிக்கையாளர்களால் சிறந்தது என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்து வசதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த அறிமுக விழா, இதுவரை, கடந்த 20 ஆண்டுகளில், விண்டோஸ் அறிமுகப்படுத்தப்பட்ட விழாக்களுக்கு மாறான முறையில் இருந்தது. இந்த விழாவில் நமக்குக் கிடைத்த புதிய தகவல்களை இங்கு பார்க்கலாம்.

ஏன் விண்டோஸ் 10?

இந்த புதிய வெளியீட்டிற்கு, இயற்கையான தொடர் எண்ணாக 9 தான் இருந்திருக்க வேண்டும். இதனை வடிவமைத்த குழுவின் தலைவரான டெர்ரி மையர்சன் பேசுகையில், இது கடந்த கால விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களின் தொடர்ச்சி அல்ல. முற்றிலும், முற்றிலும், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். எனவே தான், 

தொடர் எண்ணாக இல்லாமல் விண்டோஸ் 10 என இது பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று அறிவித்தார். இது பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் மட்டுமின்றி, இணையத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய அனைத்து சாதனங்களிலும் (வீட்டு பொருட்கள் உட்பட), பெர்சனல் கம்ப்யூட்டர், டேப்ளட் பி.சி., எக்ஸ் பாக்ஸ், க்ளவ்ட் இயக்க சாதனங்கள் என அனைத்திலும் இயங்கக் கூடியதாக இருக்கும். எனவே தான், முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களிலிருந்து வேறுபட்டதாக இதற்கு விண்டோஸ் 10 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஒரே மேடையும் வேறுபாடான அனுபவமும்

வெவ்வேறு தன்மையுள்ள, இயக்கம் கொண்ட அனைத்து சாதனங்களிலும் விண்டோஸ் 10 இயங்கினாலும், பயனாளர்களைப் பொறுத்த வரை வேறுபட்ட அனுபவத்தினையே இந்த சிஸ்டம் தரும். மொபைல் போன், டேப்ளட் பி.சி.க்கள் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கென வெவ்வேறு இடைமுகங்களை (Interfaces) இந்த சிஸ்டத்திற்கென, தனி குழு வடிவமைத்து வருகிறது. ஒரே ஸ்டோர் தரும் ஒரே கட்டமைப்பு இயக்கமாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் தங்கள் சாதனங்களுக்கேற்ப அனுபவத்தினைப் பெறுவார்கள். இதுவரை மைக்ரோசாப்ட் தந்ததில் இதுவே, அனைத்தையும் அரவணைத்து இயங்கும் சிஸ்டமாக இருக்கும்.

நிறுவனங்களின் எதிர்பார்ப்பு

விண்டோஸ் 10 மூலம், தன் நிறுவன வாடிக்கையாளர்களை, குறிப்பாக பெரிய அளவில் தங்கள் நிறுவன நிர்வாக நடவடிக்கைகளில் விண்டோஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மைக்ரோசாப்ட் நிறைவேற்றியுள்ளது. விண்டோஸ் 8 மூலம் பலத்த ஏமாற்றத்தைச் சந்தித்தவர்கள் இந்த நிறுவனங்கள் தான். இது
undefined
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அதிர்ச்சியையும், இழப்பையும் கொடுத்தது. எனவே தான், விண்டோஸ் 10 மூலம் இவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் மைக்ரோசாப்ட் அதிக முயற்சிகளை எடுத்து, புதிய சிஸ்டத்தினை வடிவமைத்துள்ளது. இந்த பெரிய நிறுவனங்களுக்கான தேவைகளை நான்கு பிரிவுகளில் நிறைவேற்றியுள்ளது.

தங்கள் கம்ப்யூட்டர்களின் இயக்க முறைமையினை மேம்படுத்துகையில், நிறுவனங்கள், புதிய முறைமை தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு, நன்றாகப் பழகிய ஒன்றாகவே இருக்க வேண்டும்; ஏற்கனவே இயங்கிய முறைமைக்கு எந்த விதத்திலும் இணைவாக, இசைவாக இல்லாமல் இருக்கக் கூடாது. புதிய முறைமையினால், கூடுதல் திறன் கிடைக்க வேண்டும். உற்பத்தி திறன் அதிகரிக்க வேண்டும். மேலும், நிர்வாகத்தில் புதியதாக உருவாகி வரும் திறன்களை வளர்ப்பதாக இருக்க வேண்டும். மொபைல் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பி.சி.க்கள் வழியாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதில், புதிய சிஸ்டம் துணையாக இருக்க வேண்டும். புதிய சாதனங்களோடு, பழைய சர்வர்கள் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்களுடனும் இது இணைவாகச் செயல்பட வேண்டும்.

விண் 7 மற்றும் 8 மேம்பாடு

இந்த புதிய விண்டோஸ் 10 சிஸ்டம், விண்டோஸ் 7 மற்றும் 8 பயன்படுத்துவோர் எளிதாக அப்கிரேட் செய்திடும் வகையில் தரப்படுகிறது. இந்த இரண்டு சிஸ்டம் பயன்படுத்துவோர் என்ன என்ன எதிர்பார்க்கின்றனரோ, அவை அனைத்தையும் தருவதில் விண்டோஸ் 10 முயற்சி செய்துள்ளது. விண்டோஸ் 7 பயன்படுத்துவோர், ஸ்டார்ட் மெனு, டாஸ்க்பார் மற்றும் டெஸ்க்டாப் வசதிகளைப் பெறுவார்கள். விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்கள், அது தொடு உணர் திரையாகவோ, அது இல்லாமலோ இருந்தாலும், ஸ்டார்ட் ஸ்கிரீன் பெறுவார்கள். டச் இண்டர்பேஸ் மேம்படுத்தப்பட்டு, வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிதாக்கப்படும். விண்டோஸ் 10ல், உலகளாவிய தேடலை இணையம் வழி மேற்கொள்ள தேடல் கட்டம் தரப்படுகிறது.

வழக்கமாக புதிய சிஸ்டங்கள் உருவாக்கப்படுகையில் பில்ட் எண் (Build number) ஒன்று அதற்கு வழங்கப்படும். விண் 10 சிஸ்டம் காட்டப்படுகையில் அது 9841 ஆக இருந்தது. முழுமையாக வெளிவரும்போது இதுவாக இருக்கலாம்; அல்லது வேறாக இருக்கலாம்.

சில சிறிய புதிய வசதிகள்

அப்ளிகேஷன்களை அப்படியே தள்ளி வைத்திட Snap என்னும் டூல் தரப்பட்டது. இது மேம்படுத்தப்பட்டு, Snap Assist UI என்ற பெயரில், அப்ளிகேஷன்களை அடுத்த திரைக்குத் தள்ளிவைக்கும் எளிய வேலையை மேற்கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ளது. கட்டளைப் புள்ளி (command prompt) வழியேயும், நாம் இதுவரை பரவலாகப் பயன்படுத்தும் ஷிப்ட் கட்டளைகள் மற்றும் CTRL + C போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

கைவிடப்படும் டூல்கள்

Charms டூல் நீக்கப்பட்டு, அதன் இடத்தில் புதிய யூசர் இண்டர்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. இதே போல Switcher டூல் இல்லாமல் போனாலும், விண் 8ல், இடது புறத்திலிருந்து ஸ்வைப் செய்கையில், ALT + TAB க்கான செயல்பாட்டினைப் பெறலாம்.

புதிய டூல்

விண்டோஸ் 8ல், மெட்ரோ மற்றும் வழக்கமான டெஸ்க்டாப் இடைமுகத்திற்கும் நம்மால் எளிதாக மாற்றிக் கொள்ள முடிந்தது. இதனை Continuum என்ற டூல் மூலம், அனைத்து வகை சாதனங்களிலும் இந்த மாற்றத்தினை எளிதாக மேற்கொள்ளும் வகையில் மைக்ரோசாப்ட் தந்துள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப்

ஒரே நேரத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப்பினை அமைத்து இயக்க, விண்டோஸ் 10 சிஸ்டம் வழி தருகிறது. ஒவ்வொரு டெஸ்க்டாப்பிலும், நமக்குத் தேவைப்படும் பல அப்ளிகேஷன் புரோகிராம்களை, ஒரே நேரத்தில் இயக்கலாம். இதனால் வேலை விரைவில் முடியும்.

விண்டோஸ் 10 சிஸ்டத்தின் தொழில் நுட்ப முன் சோதனைக்கான பதிப்பினை மைக்ரோசாப்ட் பொதுமக்களுக்காக வெளியிட்டுள்ளது. இதனைhttp://preview.windows.comஎன்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். பெற்று, இன்ஸ்டால் செய்து, பயன்படுத்திப் பார்க்கலாம். பன்னாடுகளில் இருந்து கிடைக்கும், பின்னூட்டங்களின் அடிப்படையில், விண்டோஸ் 10 இயக்க முறைமை சீர் செய்யப்பட்டு, பொதுமக்களுக்குக் கிடைக்கும்.

அநேகமாக, அடுத்த ஆண்டின் நடுவில், இது பொதுமக்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விண்டோஸ் 8 பயன்படுத்துவோருக்கு, விண்டோஸ் 10 இலவசமாகக் கிடைக்குமா என்பதற்கான விடையை, மைக்ரோசாப்ட் நிறுவன நிர்வாகிகள் எவரும் கூறவில்லை. ஆனால், விண்டோஸ் வாடிக்கையாளர்கள் இதனை எதிர்பார்க்கின்றனர். ஆப்பிள் நிறுவனம் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இலவசமாகத் தந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதே போல, விண்டோஸ் 10 க்கான விலை குறித்தும், இன்னும் எந்த அறிவிப்பும் வரவில்லை.




DOWNLOAD LINK                     Language -  English            File Type : ISO


Key -  NKJFK-GPHP7-G8C3J-P6JXR-HQRJR


32 BIT    CLICK HERE                                    64 BIT    CLICK HERE

No comments:

Post a Comment