
இதன் உடல் பகுதி உரோமம் இல்லாமல் வளவளப்பாக காணப்படுகிறது. நாயின் முகத்தோற்றமும், பன்றியின் உடலமைப்புமாக, காண்போரை மிரள வைக்கிறது இவ் விநோத உருவம்.
2 அடி நீளம் கொண்ட இதன் வயிற்றுப்பகுதி மிகவும் பருத்து காணப்படுகிறது. இது இதுவரை அடையாளம் காணப்படாத புதிய வகை விலங்கினமா, அல்லது மரபியல் குறைபாடு காரணமாக விகார தோற்றம் பெற்ற உயிரியா என்பது தொடர்பான ஆராட்சிகள் நடைபெற்றுவருவதாக தெரியவருகிறது.
மேலும் இவ் விலங்கின் உடல் அடையாளங்காணப்படுவதற்கு முன்னர் அப் பிரதேசத்தில் பல ஆடுகள் இரத்தம் குடிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளதாக அறியவருகிறது.
இப் பயங்கர விலங்குக்கு உள்ளூர் மக்கள் ”பேய்நாய்” என பெயர் கூறி அடையாளப்படுத்துகின்றனர்.



பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்