Monday 31 December 2012

மோட்டார் சைக்கிள்ளாக மாறிய பெண்கள்! (படங்கள்)

மனித உடலை விதவிதமான கோணத்தில் வளைத்து மோட்டார் சைக்கிள் போன்று வடிவமைத்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த ட்ரைனா என்ற பெண்.
இதற்காக பல பெண்களை இவர் பயன்படுத்துகின்றார். மோட்டார் சைக்கிள் போன்ற உருவத்துடன் மட்டுமின்றி அந்த “மோட்டார் சைக்கிளில்”சீறிப் பாய்வதைப் போன்றும் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கிறார் ட்ரைனா.
மோட்டார் சைக்கிளின் வடிவத்திற்கேற்ப பல வர்ணங்கள் உடலில் பூசப்படுகின்றன.
ஒரு தடவையில் 5-6 நிமிடங்கள் தொடர்ச்சியாக உடலைவளைத்து போஸ் கொடுப்பதுடன் முழுப்படப்பிடிக்கும் சுமார் 18 மணித்தியாலங்கள் வரை நேரம் எடுக்கும் என தெரிவிக்கிறார்.
அமெரிக்காவில் நடைபெறவுள்ள பல மோட்டார் வாகன கண்காட்சிகளில் தனது மோட்டார் சைக்கிள்களையும் காட்சிப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக ட்ரைனா மேரி தெரிவித்துள்ளார்.






பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment