நீங்கள் உங்கள் கணினி, அல்லது மடிக்கணினியில் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துபவரானால் இந்த எளிதான குறிப்பை தெரிந்துவைத்திருந்தால் பலநேரங்களில் உதவியாக இருக்கும்.
அதாவது விண்டோஸ் இயங்குதளத்தை அப்டேட் செய்யாமலே ஷட்டவுன் செய்வது எப்படி என்பதைத்தான். ஒரிஜினல் விண்டோஸ் இயங்குதளங்கள் குறிப்பிட்ட தினங்களுக்கு ஒருமுறை தானாகவே அல்லது உங்கள் கட்டளைக்கு ஏற்ப தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்ளும். இது சிறப்பான முறைதான் என்றாலும், நீங்கள் அவசரமாக வெளியில் செல்லவேண்டிய சூழலிலும் இப்பொழுது இன்ஸ்டால் செய்யவா? அல்லது பிறகா? என உங்களை தொந்தரவு செய்யும். நீங்கள் பிறகு என்ற தெரிவினை பயன்படுத்தினாலும் விடாது. சரியாக நீங்கள் கணினியை நிறுத்த முயலும்பொழுது தானாகவே அப்டேட் செய்ய ஆரம்பித்துவிடும்.
இதை தடுப்பதற்கான எளிய வழிமுறையை தான் இங்கே விளக்கியுள்ளோம்.
படி 1 : முதலில் கணினியில் மற்ற அனைத்து அப்ளிகேசன்களையும் மூடிவிட்டு. முகப்பிற்கு வரவும். பின்னர் ஷட்டவுன் பொத்தானை அழுத்தவேண்டாம்.
படி 2 : அதற்கு பதிலாக Alt + F4 என்று அழுத்தவும். இப்பொழுது ஒரு விண்டோ தோன்றும்.
படி 3 : அதில் முதல் தெரிவே இன்ஸ்டால் & ஷட்டவுன் என இருக்கும். அதை விட்டுவிடவும். சற்றே கீழே சென்றால் 'ஷட்டவுன்' மட்டும் இருக்கும். இப்பொழுது இதை தெரிவு செய்யவும்.
படி 4 : உங்களுடைய விண்டோஸ் இயங்குதளமானது இப்பொழுது அப்டேட் செய்யாமலே ஷட்டவுன் ஆகிவிடும்.
No comments:
Post a Comment