Monday 19 August 2013

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள் (Photoshop)

போட்டோஷாப்பில் உள்ள அடிப்படை பாடங்களை பற்றி நாம் தெரிந்துகொண்டால் அதில் நாம் புகுந்து விளையாடலாம். சில அடிப்படை பாடங்களை இங்கு பதிவிட விரும்புகின்றேன். போட்டோ ஸ்டுடியோ வைக்கும் அளவுக்கு நாம் அதிகமாக கற்க வேண்டியதில்லை.இப்போது கற்க போகும் பாடங்களின் அடிப்படைகளை தெரிந்துகொள்வது மூலம் நாம் நமது சின்ன சின்ன தேவைகளையே பூர்த்தி செய்து கொள்ளலாம். போட்டோஷாப்பில் எனக்கு தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். அதுபோல் போட்டோஷாப் அடிப்படை பாடங்களில் வரும் வலைப்பூவின் உதிரிப்பூக்களில் போட்டோஷாப்பை பற்றி குறிப்புகளை குறிப்பிடுகின்றேன். இந்த பதிவு போட்டோஷாப் பற்றி ஏதும் தெரியாத புதியவர்களுக்காக பதிவிட்டுள்ளேன். சரி பாடத்திற்கு போவோம். அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் முதலில் போட்டோஷாப் -6, அடுத்து போட்டோஷாப்-7, போட் டோஷாப்-8 (cs-1), போட்டோ ஷாப் -9 (cs-2), போட் டோஷாப் -10 (cs-3) , இறுதியாக போட் டோ ஷாப்-11 (cs-4) வெளியிட்டுள்ளார்கள். பெரும்பாலும் நம்மிடம் போட் டோஷாப் பதிவு 7 லிருந்து பதிவு 9 வரை இருக்கலாம். பதிவு அதிகமாக செல்ல செல்ல வசதிகள் கூடிக்கொண்டு செல்லும். நமது தேவைக்கு போட் டோஷாப் 7 ,8,9 இதில் ஏதாவது ஒன்று இருந்தால் போதுமானது. முதலில் உங்களது போட்டோஷாப் திறந்துகொள்ளுங்கள். அடுத்து அதில் உள்ள File - Open - கிளிக் செய்யுங்கள். நீங்கள் மாற்ற விரும்பும் புகைப்படம் உள்ள Drive - Folder - ஐ திறந்து கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த மாதிரி ஓப்பன் ஆகும்.alt

நீங்கள் புகைப்பட போல்டர் திறக்கும் சமயம் உங்களுக்கு புகைப்படங்கள் List ஆக தெரிய ஆரம்பிக்கும். நமக்கு தேவையான புகைப்படத்தை புகைப்பட எண் வைத்து தேட வேண்டும். அதை தவிர்க்க இதில் உள்ள View மெனு கிளிக் செய்து அதில் Thumbnail கிளிக் செய்தால் உங்களுக்கு புகைப்படம் தெளிவாகவும் தேர்வு செய்ய சுலபமான தாகவும் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான புகைப்படம் தேர்வு செய்யவும்.alt
இப்போது நீங்கள் இடப்புறம் பார்த்தால் உங்களுக்கு இந்த டூல்கள் பாக்ஸ் கிடைக்கும். இதில் பல டூல்கள் பல உபயோகத்திற்கு உள்ளது. நாம் முதலில் முதலில் உள்ள மார்க் டூலை செலக்ட் செய்வோம். நீங்கள் உங்கள் கர்சரை இந்த டூலின் அருகே கொண்டு சென்றால் உங்களுக்கு இந்த காலம் ஓப்பன் ஆகும்.alt
இதில் முதலில் உள்ள Rectangular Marquee Tool செலக்ட் செயயவும். அதை நீங்கள தேர்வு செய்த படத்தின் தேவையான இடத்தில் மவுஸால் தேர்வு செய்யவும். உங்களுக்கு இந்த மாதிரி கிடைக்கும்.
இப்போது நீங்கள் Edit சென்று Copy யை தேர்வு செய்யவும். மறந்தும் Cut தேர்வு செய்ய வேண்டாம். அடுத்து நீங்கள் மீண்டும் File சென்று அதில் New தேர்வு செய்யவும். உங்களுக்கு இந்த காலம் ஓப்பன் ஆகும்
இதில் மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டாம். அதை அப்படியே ஓகே கொடுங்கள். (நாம் நல்ல பயிற்சி பெற்றதும் மாற்றங்களை செய்வது பற்றி சொல்லி தருகின்றேன் . அப்போழுது நாம் மாற்றங்கள் செய்யலாம்).உங்களுக்கு ஒரு வெள்ளை நிற காலம் ஓப்பன் ஆகும். மீண்டும் நீங்கள் Edit சென்று அதில் உள்ள Paste கிளிக் செய்யவும். உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த படம் மட்டும் காபி ஆகும்.
இதை தனியே Save கொடுத்து சேமித்து வைக்கவும். இது போல் Eliplitical Marque Tool செலக்ட் செய்யவும்.
நான் இந்த படத்தில் (இது கங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் கோபுரம் ) கோபுரம் மட்டும் தேர்வு செய்துள்ளேன். ஏற்கனவே நாம் Rectangler Marquee Tool -ல் செய்தவாறு காபி - பேஸ்ட் செய்யவும். உங்களுக்கு இந்த மாதிரியாக படம் கிடைக்கும்.
இதில் உள்ள மற்ற இரண்டு டூல்கள் நமக்கு தேவை படாது. எனவே அதை விட்டு விடுவோம். போட்டோஷாப் பற்றிய அடுத்த பாடம் அடுத்த கிழமை பதிவிடுகின்றேன். நீங்கள் போட்டோஷாப்பில் பயிற்சி நன்கு எடுக்கவே இந்த இடைவெளிவிடுகின்றேன். இந்த டூலால் என்னவெல்லாம் செய்யலாம் என அடுத்த பதிவில் பதிவிடுகின்றேன். இது புதியவர்களுக்காக பதிவிட்டுள்ளேன். போட்டோஷாப் அடிப்படை பாடங்கள் -2 சென்ற வாரம் Marquee tool பார்த்தோம். மார்க்குயு டூலை செல்க்ட் செய்யவும். அடுத்து அதை ரைட்கிளிக் செய்யவும்.
உங்களுக்கு மேற்கண்ட வாறு சாரளம் ஓப்பன் ஆகும். இதில் முதலில் உள்ளது Deselect. ஆதாவது நாம் தேர்ந்தேடுத்த Marquee Tool தேவையில்லை என்றால் இதை செலக்ட் செய்யவும். நாம் தேர்ந்தேடுத்தது மறைந்து விடும். அடுத்து உள்ள Select Inverse. நாம் தேர்ந்தேடுக்கும் பாகத்தை தவிர மற்ற இடங்கள் செலக்ட் ஆகும். உதாரணத்திற்கு கீழே உள்ள புகைப்படத்தில் உள்ள படத்தில் கண்ணை மட்டும் Rectangle Marquee Tool ஆல் செலக்ட் செய்துள்ளேன்.
அடுத்து அதில் வைத்து ரைட்கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ் கண்டவாறு சரளம் ஓப்பன் ஆகும். இதில் உள்ள Select Inverse தேர்வு செய்யவும். இப்போது உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த பாகத்தை மட்டுமில்லாது படத்தை சுற்றியும் உங்களுக்கு சிறுசிறு கட்டம் மினுமினுத்தவாறு ஓடும். இப்போது மீண்டும் எடிட் சென்று காப்பி செய்து பைல் சென்று புதிய தாக நீயு பைல் ஓப்பன் செய்யவும்.அளவுகளை மாற்றாமல் ஓகே கொடுத்து எடிட் சென்று பேஸ்ட் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்டவாறு படம் தோன்றும்.
(பிரபலமான நடிகைகளின் கண்களை மட்டும் மறைத்துப்பார்திருப்பீர்கள். அதை இவ்வாறு தான் செய்வார்கள்.) அடுத்து Feather பாடம். Feather என்றால் இறகு என்று பொருள்ஆகும். இறகை பார்த்திருப்பீர்கள். அது நடுவில் நிறங்கள் அடர்த்தியாகவும் ஓரம் செல்ல செல்ல நிறம் மங்கியதுபோல் காணப்படும். அதுபோல் போட்டோவிலும் இந்த மாற்றம் கொண்டுவர இந்த Feathering Tool பயன்படுகிறது. முதலில் படத்தை தேர்வு செய்யுங்கள். முன்பு கூறியபடி Rectangle Marquee Tool-தேர்வு செய்து மவுஸால் ரைட் கிளிக் செய்யவும். வரும் சாளரத்தில் Feather கிளிக் செய்யவும். உங்களுக்கு Feather Selection உடன் ஒரு சாளரம் ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் விரும்பும் Redius Pixel அளவை தேர்வு செய்யவும். இந்த அளவு அதிகமாக அதிகமாக உங்களுக்கு படத்தின் Feather அளவில் வித்தியசம் வருவதை காண்பிர்கள். நான் இங்கு சூரியனின் படம் தேர்வு செய்து
அதில் பிக்ஸல் ரேடியஸ் அளவு 80 வைத்துள்ளேன். படத்தை பாருங்கள்.
நாம் 80 பிக்ஸலில் தேர்வு செய்தபடம் கீழே.
அதுபோல் குறைந்த அளவு பிக்ஸல் ரேடியஸ்
அளவு 20 வைத்து படம் தேர்வு செய்துள்ளேன்.
வித்தியாசத்தை பாருங்கள். மேற்கண்ட பாடங்களில் நீங்கள் நல்ல பயிற்சி எடுத்தால் தான் அடுதது இதன் மூலம் நடத்தப்படுகின்ற பாடங்களுக்கு உங்களுக்கு உதவியாக இருக்கும். இதன்பயன்களையும் பின்னர்பார்க்கலாம். பதிவின் நீளம் கருதி இத்துடன் பாடம் முடித்துக்கொள்கின்றேன்.நன்றாக பயிற்சி எடுங்கள். அடுத்து அதில் வைத்து ரைட்கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ் கண்டவாறு சரளம் ஓப்பன் ஆகும். இதில் உள்ள Select Inverse தேர்வு செய்யவும். இப்போது உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த பாகத்தை மட்டுமில்லாது படத்தை சுற்றியும் உங்களுக்கு சிறுசிறு கட்டம் மினுமினுத்தவாறு ஓடும். இப்போது மீண்டும் எடிட் சென்று காப்பி செய்து பைல் சென்று புதிய தாக நீயு பைல் ஓப்பன் செய்யவும்.அளவுகளை மாற்றாமல் ஓகே கொடுத்து எடிட் சென்று பேஸ்ட் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்டவாறு படம் தோன்றும்.
(பிரபலமான நடிகைகளின் கண்களை மட்டும் மறைத்துப்பார்திருப்பீர்கள். அதை இவ்வாறு தான் செய்வார்கள்.) அடுத்து Feather பாடம். Feather என்றால் இறகு என்று பொருள்ஆகும். இறகை பார்த்திருப்பீர்கள். அது நடுவில் நிறங்கள் அடர்த்தியாகவும் ஓரம் செல்ல செல்ல நிறம் மங்கியதுபோல் காணப்படும். அதுபோல் போட்டோவிலும் இந்த மாற்றம் கொண்டுவர இந்த Feathering Tool பயன்படுகிறது. முதலில் படத்தை தேர்வு செய்யுங்கள். முன்பு கூறியபடி Rectangle Marquee Tool-தேர்வு செய்து மவுஸால் ரைட் கிளிக் செய்யவும். வரும் சாளரத்தில் Feather கிளிக் செய்யவும். உங்களுக்கு Feather Selection உடன் ஒரு சாளரம் ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் விரும்பும் Redius Pixel அளவை தேர்வு செய்யவும். இந்த அளவு அதிகமாக அதிகமாக உங்களுக்கு படத்தின் Feather அளவில் வித்தியசம் வருவதை காண்பிர்கள். நான் இங்கு சூரியனின் படம் தேர்வு செய்து
அதில் பிக்ஸல் ரேடியஸ் அளவு 80 வைத்துள்ளேன். படத்தை பாருங்கள்.
நாம் 80 பிக்ஸலில் தேர்வு செய்தபடம் கீழே.
அதுபோல் குறைந்த அளவு பிக்ஸல் ரேடியஸ்
அளவு 20 வைத்து படம் தேர்வு செய்துள்ளேன்.
வித்தியாசத்தை பாருங்கள். போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3 சென்ற வார பதிவுகளில் Morquee Tools பற்றி பார்த்தோம். இப்போது இந்த மார்க்யு டூலை தேர்வுசெய்து மேலும் பல வசதிகளை பெறுவது பற்றி பார்ப்போம். இப்போது நீங்கள் உங்கள் போட்டோஷாப்பில் பார்த்தீர்களே யானல் உங்களுக்கு File,Edit,Image பாருக்கு கீழ் இருப்பதுதான் Options Bar. இதில் செலக் ஷன் டூல்கள் 4 இருக்கும். அந்த டூல்கள் தான் இவை:-
இதில் முதலில் இருப்பது New Selection. சென்ற பதிவில் இதை பார்த்தோம். சதுரமாகவோ - செவ்வகமாக வோ படம் இருந்தால் தேர்வு செய்துவிடுகின்றோம். ஆனால் அதுவோ செவ்வகம் நெடுக்கு வசத்திலும் – படுக்கை வசத்திலும் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தால் என்ன செய்வீர்கள். அதற்குதான் இந்த இரண்டாவதாக உள்ளAdd to Selection Tool உதவுகிறது. இப் போது இந்த படத்தைபாருங்கள்.
இந்த படத்தில் நமக்கு கோபுரமும் பிரகாரம் மட்டும் வேண்டும்.ஆனால் New Selection Tool-ல் தேர்வு செய்யும் போது மொத்தமாக தேர்வாகும். ஆனால் Add Selection Tool-ல் பயன்படுத்துவது பார்ப்போம். முதலில் New Selection மூலம் கோபுரம் மட்டும் தேர்வு செய்யுங்கள்.
அடுத்து Add Selection Tool மூலம் பிரகாரம் மட்டும் தேர்வு செய்யுங்கள். படத்தை பாருங்கள்
இப்போது சென்ற பாடத்தில் சொன்னவாறு காப்பி -பேஸ்ட் செய்யுங்கள். உங்களுக்கு இந்த மாதிரி படம் வரும்.
இப்போது இந்த படத்தில் பார்த்தீர்களே யானல் இதில் ஒரு பெண்மணி கோயிலுக்கு செல்கின்றார்.அவர் நமக்கு வேண்டாம். எப்படி அவரை நீக்குவது? அதற்கு இந்த Subtract Selection Tool உதவும். முன்பு சொன்னவாறு படம் தேர்வு செய்து இந்த டூல் மூலம் அந்த பெண்மணியை மட்டும் தேர்வு செய்யவும். இப்போது இந்த பெண்மணி மட்டும் தேர்வாகும். படத்தை பாருங்கள். இப்போது இந்த படத்தில் பார்த்தீர்களே யானல் இதில் ஒரு பெண்மணி கோயிலுக்கு செல்கின்றார்.அவர் நமக்கு வேண்டாம். எப்படி அவரை நீக்குவது? அதற்கு இந்த Subtract Selection Tool உதவும். முன்பு சொன்னவாறு படம் தேர்வு செய்து இந்த டூல் மூலம் அந்த பெண்மணியை மட்டும் தேர்வு செய்யவும். இப்போது இந்த பெண்மணி மட்டும் தேர்வாகும். படத்தை பாருங்கள்.
முன்பு கூறியபடி தேர்வுசெய்து கட்-காப்பி-பேஸ்ட் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு அந்த பெண்மணி நீங்கலாக படம் தேர்வாகும். படத்தை பாருங்கள்.
வரும் பாடங்களில் வெண்மைநிறத்தை பேட்ச் ஓர்க் மூலம் நிரப்புவதை பின்னர் பார்க்கலாம். கடைசியாக உள்ளது Intersect with Selection. படத்தில் உள்ள கிணறை மட்டும் தேர்வு செய்ய இந்த டூலால் முடியும். படத்தை பாருங்கள்.
இப்போது கிணறை தேர்வு செய்து கட்- காப்பி-பேஸ்ட் செய்தால் உங்களுக்கு இவ்வாறு படம் கிடைக்கும்.
இதுவரை நாம் Rectangle Marquee Tool பார்த்தோம். அதுபோல் Eliptical Marquee Tool லும் நாம் படங்களை தேர்வு செய்யலாம்
இதிலும் மேற்படி நாம் Selection Tool ஆல் தேர்வு செய்ததை பாருங்கள்.
இதுபோல் புகைப்படங்களை நீங்கள் தேர்வு செய்து விதம்விதமாக கட் செய்து பார்க்கலாம். ஆனால் நீங்கள் புகைப்படங்களை மாறுதல் செய்யும் முன் மறக்காமல் டூப்ளிகேட் எடுத்துவைதது செய்யவும். போட்டோஷாப் பற்றி மூம்மூர்த்திகள் உள்ளது போல் போட்டோவில் மொத்தம் மூன்று கலர்களே உள்ளன. அவை RGB எனப்படும் RED,GREEN,BLUE என்பனவே அவை. இவை ஒவ்வோன்றும் 256 shadow கொண்டு உள்ளது. அவைகள் மூன்றும் சேரும்போது நமக்கு 256x256x 256 என மொத்தம் 16777216 நிறங்கள் கிடைக்கும். போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-4 போட்டோஷாப்பில் ஒருபடம் நாம் மாறுதல்செய்வதற்கு முன் அதை பிரதி DUBLICATE எடுத்துவைக்க சொல்லியிருந்தேன். நண்பர் ஒருவர் DUPLICATE எப்படி எடுப்பது என கேட்டிருந்தார். அதனால் DUPLICATE எப்படி எடுப்பது என முதலில் பார்ப்போம். உங்களுக்கு தேவையான படத்தை முதலில் திறந்துகொள்ளுங்கள். நான் இந்த பிரம்மா படத்தை தேர்வு செய்து திறந்துள்ளேன்
இப்போது மேல் புறம் பார்த்தால் உங்களுக்கு FILE,EDIT,IMMAGE,LAYER,SELECT... என வரிசையாக இருப்பதில் IMMAGE –ஐ தேர்வு செய்யுங்கள்.உங்களுக்கு வரிசையாக கீழ்கண்டவாறு சாரளம் ஓப்பன் ஆகும்.
அதில் Dublicate என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு படத்தின் மீது கீழ்கண்டவாறு ஒரு விண்டோ திறக்கும்
அதில் உங்களுடைய புகைப்படத்தின் பெயரோ – அல்லது புகைப்பட எண்ணோ தோன்றும். அல்லது நீங்கள் விரும்பும் பெயரையும் அதில் தட்டச்சு செய்யலாம். அடுத்து OK கொடுங்கள்.உங்களுக்கு இந்த மாதிரி படம் இரண்டு தோன்றும்.alt இதில் ஒன்று நிஜம். மற்றது அதன் நிழல். நீங்கள் நிஜத்தை மூடிவைத்துவிட்டு காப்பி யில்( நிஜத்தின் நிழலில்) என்னவேண்டுமானாலும் செய்யலாம். மாற்றங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் அதை சேமியுங்கள். பிடிக்கவில்லையென்றால் அதை கான்செல்(cancel) செய்துவிட்டு முன்பு கூறியபடி மீண்டும் ஒரு படத்தை பிரதி(Dublicate) எடுத்துக்கொள்ளுங்கள். பிரதி எடுப்பதில் நன்கு பயிற்சிபெற நான்கு –ஐந்துமுறை முயற்சிசெய்து பாருங்கள். சரியாக வரும். இனி பாடத்திற்கு வருவோம். சென்ற பதிவுகளில் மார்க்யூ டூல் பற்றி பார்த்தோம். அதில் உள்ள பிற வசதிகளையும் இப்போது பார்ப்போம். இதில் முன்வகுப்புகளில் Deselect,Select Inverse, Feather... பற்றி பார்த்தோம். இதில் அடுத்துஉள்ளது Save Selection..இதன் உபயோகம் நமக்கு இப்போது தேவைபடாது . அதனால் அதை பின்பு பார்ப்போம். அடுத்து உள்ளது Make Work Path. இதை தேர்வு செய்யுங்கள். நீங்கள் மார்க்யூ டூலால் தேர்வுசெய்த பகுதியில் கர்சரைவைத்து கிளிக் செய்தால் வரும் பகுதியில் Make Work Path செலக்ட்செய்யவும்.alt இதில் உங்களுக்கு கீழ்கண்ட வாறு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் டாலரன்ஸ் 5 என வைத்து ஓகே கொடுக்கவும்.
நான் கீழ்கண்ட படத்தில் அதை தேர்வு செய்துள்ளேன். இது படத்தை சுற்றி ஒரு கேர்டு போட்டவாறு நமக்கு படம் கிடைக்கும். கும்பலாக உள்ள நபர்களின் படங்களில் நமக்கு தேவையானவரை மட்டும் வட்டம் போட்டு, கட்டம் கட்டி காண்பிக்க இது பயன்படுகிறது. பிரபல மானவர்களின் கும்பலாக உள்ள புகைப்படத்தில் அவரைமட்டும் காண்பிக்க வட்டம் - கட்டம் கட்டி யுள்ளதை பார்த்திரு்ப்பீர்கள். அதை இதன் மூலம் செய்யலாம். alt அடுத்து நாம் பார்ப்பது லேயர் வழி காப்பி. சரி லேயர் என்றால் என்ன? போட்டோஷாப்பின் உயிர் நாடியே லேயர் எனலாம். அதுபற்றி பின்னர்வரும் பாடங்களில் விரிவாக பார்க்கலாம். சரி லேயர் எப்படி வரவழைப்பது? மிகவும் சுலபம். உங்கள்கீ-போர்டில் F7 கீயை ஒரு முறை அழுத்துங்கள் . உங்களுக்குக்கான லேயர்ஒன்று திறந்திருப்பதை பார்க்கலாம்.
சரி பாடத்திற்கு வருவோம். மார்க்யூ டூலால் தேர்வு செய்து வரும் விண்டோவில் அடுத்து வருவது layer via copy . இதை கிளிக் செய்தவுடன்
நீங்கள் தேர்வு செய்த படம் ஆனது லேயரில் சென்று அமர்ந்துகொள்ளும். படத்தை பாருங்கள்
அடுத்து உள்ளது New Layer. ,இதை கிளிக் செய்தால் உங்களுக்கு புதிய லேயர் ஒன்று உருவாகும்.
அதில் உள்ள New Layer கிளிக் செய்யவும்.
உங்களுக்கு புதிய விண்டோ திறக்கும் . அதில் மாற்றம் ஏதும் செய்யாமல் ஓகெ கொடுக்கவும். புதிய லேயர் ஒன்று உருவாகியுள்ளதை பார்ப்பீர்கள்.
லேயர்பற்றிய பாடத்தில் இதைபற்றி விரிவாக பார்க்கலாம். அதுபோல் அடுத்த பாடத்தில் Free Transform பற்றி பார்க்கலாம். போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-5 இன்று Free Transform பற்றி பார்ப்போம். போட்டோஷாப் டூல்களில் முக்கியமான டூல்களில் இதுவும் ஒன்று. இருப்பதை பெரியதாகவும் - பெரியதை சிறியதாகவும் இதன் மூலம் எளிதில் மாற்றலாம். அது போல் ஒரிடத்தில்இருந்து மற்ற இடத்திற்கு எளிதில் மாற்றவும் இந்த டூல் நமக்கு உதவும். முதலில் இதில் உள்ள வசதிகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம். முதலில் ஒருபடத்தை தேர்வு செய்து அதை நகல் எடுத்து - ஒரிஜினலை வைத்துவிட்டு நகலை ஒப்பன் செய்யவும். பின் அதை மார்க்யூ டூலால் தேர்வு செய்யவும் நான் தஞ்சை பெரிய கோயிலை தேர்வு செய்துள்ளேன். அதில் உள்ள சிவசிவ என்கிற பெயர்பலகையை மட்டும் மார்க்யூ டூலால் தேர்வு செய்துள்ளேன்.
பின் அதில் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்தேன்
உங்களுக்கு இந்த மாதிரியான விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உள்ள Free Transform கிளிக் செய்யுங்கள். இப்போது ஏற்கனவே நீங்கள் தேர்வு செய்த சிவசிவ என்கிற பெயர் பலகையை சுற்றி சிறுசிறு கட்டங்களும்-அதன் நான்கு மூலைகளில் சிறிய சதுரமும்- அதிலுள்ள இரண்டு சதுரங்களின் இடையே ஒரு சதுரமும் ஆக மொத்தம் உங்களுக்கு 8 சதுரங்கள் காட்சியளிக்கும். செய்து பாருங்கள். 8 சதுரங்கள் உங்களுக்கு வருகின்றதா? 8 சதுரங்கள் உங்களுக்கு வந்தால் நீங்கள் சரியானபடி பின்தொடர்ந்து வருகிறீர்கள் என கூறலாம். இனி அந்த சதுரங்களில் ஏதாவது ஒன்றை மவுஸால் பிடித்து இழுங்கள். படம் பெரிதாகின்றதா? அதுபோல் அனைத்து சதுரங்களையும் ஒரே மாதிரி இழுங்கள்.
உங்களுக்கு சிவசிவ பெயர்பலகை எவ்வளவு பெரியதாக மாறிவருகிறது என பாருங்கள். அடுத்து வலப்புறம் கீழ் மூலையில் உள்ள சதுரத்தை அப்படியே இடப்புறம் உள்ள சதுரத்தின் மூலையை தாண்டி எடுத்துச்செல்லுங்கள். படமானது ஏற்கனவே உள்ளதிலிருந்து பிரிந்து இடப்புறம் இடம்மாறி வருவதை அறியலாம்.
இதைப்போலவே படத்தை கீழே இருந்து மேல் நோக்கியும்
மேலிருந்து கீழாகவும் நகர்த்தி வைக்கலாம்
அடுத்து Free Transform டூலில் உள்ள மற்ற உப டூல்களை பார்ப்போம். மார்க்யூ டூலால் படத்தை தேர்வு செய்து பின் கர்சர் வைத்து கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் முதலாக உள்ளது Scale ஆகும். இதை நீங்கள் தேர்வு செய்ததும் உங்களுக்கு File,.Edit ,Image போன்ற கட்டளை டூல்கள் உள்ள Menu Bar கீழ் Option Bar பார்த்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தெரிய வரும்.
இதில் X - AXIS, Y-AXIS, W-WIDTH %, H-HIGHT % , இதில் மேலே உள்ள படத்தில் நந்தியை பாருங்கள். width % மாற்றியபின் கீழே உள்ள படத்தில் நந்தியை பாருங்கள். வித்தியாசத்தை உணர்வீர்கள..
அடுத்து கோணம்(Angle). இதில் உள்ள கோணத்தை மாற்றம் செய்வதின் மூலம் படத்தை நமக்கு தேவையான கோணத்தில் மாற்றிக்கொள்ளலாம். கோணங்களிலும் Horizontal Degree, Vertical Degree நமக்கு தேவையானதை அமைத்துக்கொள்ளலாம். சரியான அளவுகளில் படம் அமைக்க இந்த Scale உபயோகிக்கலாம். ஆனால் நமக்கு கண் பார்க்க -மவுஸால் தேர்வு செய்வதுதான் சுலபமாக இருக்கும். அதில் நாம் நிபுணராக மாற்றியபின் Scale அளவுபடி படத்தை அமைக்கலாம். Scale மூலம் படத்தை மாற்றாமல் மவுஸாலேயே படத்தை மாற்றுவது என அடுத்த பாடத்தில் பார்க்கலாம். போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 இன்று மாடலுக்காக மகாபலிபுரம் கடற்கரை கோயிலை எடுத்துள்ளேன்.இதில் முதலில் மார்க்யூ டூலால் செல்க்ட் செய்யவும். பின் மவுஸ் மூலம் ரைட் கிளிக் செய்யவும். அதில் Free Transform Tool செல்க்ட் செய்யுங்கள். Free Transform Tool -ல் நாம் அதனுடைய உப டூல்களை பயன்படுத்தாமல் படத்தை வேண்டிய பயன் பாட்டுகளுக்கு சுருக்கிக்கொள்ளலாம். இந்த படத்தில் Free Transform Tool மட்டும் பயன்படுத்தி படத்தின் மூலையில் உள்ள சதுரத்தில் கர்சரை தள்ள படமானது வலமிருந்து இடமாக சுருங்குவதை பாருங்கள்.
இந்தப்படத்தை பாருங்கள். இதில் நடுவில் உள்ள சதுரத்தில் கர்சரை வைத்து தள்ள படமானது வலப்புறம் இருந்து இடப்புறம் செல்வதைக்காணலாம்.
இதைப்போலவே படமானது கீழிருந்து மேல்நோக்கி செல்வதை பாருங்கள்.
இதைப்போலவே படங்களை மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் மாற்றலாம்.
இந்த டூல்களின்பயன்பாடுகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் போட்டோஷாப்பில் பணி புரிகையில் நமக்கு உபயோகப்படும். சரி பாடத்திற்கு வருவோம். நீங்கள் படத்தை தேர்வுசெய்து மார்க்யூ டூலால் செலக்ட் செய்தபின் உங்களுக்கு வழக்கபடி Transform Tool -ல் உள்ள அனைத்து டூல்களும் தெரியவரும் . அதில் சென்றவாரம் நாம் Scale Tool பற்றி பார்த்தோம். இனி அடுத்து உள்ள Rotate Tool பற்றி பார்ப்போம். இனி Scale Tool க்கு அடுத்துள்ள Rotate Tool செலக்ட் செய்யுங்கள்.
உங்களுக்கு முன்பு பார்த்தமாதிரி படத்தை சுற்றிலும் கோடுகளும் - சிறிய சதுரங்களும் கிடைக்கும். இப் போது கர்சரை அங்கு எடுததுச்சென்றால் கர்சரானது வளைந்த அம்புக்குறியுடன் தோன்றும். இனி நீங்கள் படத்தை உங்களுக்கு வேண்டிய அளவில் திருப்பிக் கொள்ளலாம்.(படமானது வண்டியின் ஸ்டேரிங் மாதிரி திருப்புவதை காணலாம்)
அடுத்து உள்ள Tool - Skew ஆகும். அதை யும் வழக்கபடி தேர்வுசெய்து கொள்ளுங்கள்.
Skew Tool ஆனது படங்களை விருப்பபடி சாய்துக் கொள்வதற்கு பயன் படுகின்றது. படத்தை பாருங்கள்.
இதில் மூலையில் உள்ள சதுரத்தை நீங்கள் கர்சரால் இழுக்கையில் கர்சரானது நீங்கள் படுக்கை வாட்டத்தில் இழுத்தால் படுக்கை வாட்டத்திலும் (Horizontal) ,உயர வாட்டத்தில் இழுத்தால் உயர வாட்டத்திலும் (Vertical) படம் நகரும். ஆனால் நீங்கள் இழுக்கும் சதுர மூலைமட்டுமே நகரும். மற்ற பக்கங்கள் நகராது.
இது படத்தை நான்கு மூலைகளிலும் இருந்து இழுத்து சிறப்பு தோற்றங்களை உருவாக்கலாம். கோட்டிற்கு வெளியில் செல்லும் போது படமானது விரிவாகவும் கோட்டிற்கு உள்செல்லும்போது படமானது சுருங்கியும் வரும்.
மூலையில் உள்ள சதுரத்தை நாம் கர்சரால் இழுக்க படமானது நம் இழுப்புக்கு ஏற்றவாறு வருவதை காணலாம்.
அடுத்து உள்ளது Prespective Tool. அதைப்பார்ப்போம்
இந்த டூலை பயன்படுத்தி படத்தின் மூலையில் உள்ள சதுரத்தை உள்புறம் இழுக்க படமானது நீங்கள் இழுக்கும் திசையில் சுருங்குவதை காணலாம். படமானது V-Shape -ல் உருவாவதை காணலாம்.
பக்கவாட்டில் படத்தை சுருக்கினால் வரும்படம் மேலே
மேல்புறம் படத்தை சுருக்கினால் வரும் படம் மேலே... போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-7
சென்ற பாடம் 6-ல் மார்க்யு டூல் பற்றி பார்த்து வந்தோம் . அதில் கடைசியாக Free Transform Tool பார்த்து அதில் உள்ள Scale,Rotate, Skew, Distort, Perspective வரை பார்த்துள்ளோம். இனி அதில் அடுத்துள்ள Wrap பயன்பாடு பற்றி பார்ப்போம்.மற்ற டூலை விட இதில் என்ன விசேஷம்என்கிறீர்களா? மற்ற டூல்கள் உங்களுக்கு படத்தை ஒரளவுக்குதான் மற்றதில் பொருத்த முடியும். ஆனால் இதில் எந்த வகை படமானாலும் அதை நம் விருப்பத்திற்கேற்றவாறு மாற்றிக்கொள்ள முடியும்.தனியாக ஒருபடத்தை நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கலாம்.மேலும் இதில் ஒரு படத்துடன் மற்றும்ஒரு படத்தை நாம் அழகாக இணைத்து விடலாம். இனி அதை எப்படி உபயோகிப்பது என பார்ப்போம்.
நீங்கள் ஒரு படத்தை தேர்வு செய்து அதில் மார்க்யு டூலால் செல்க்ட் செய்தபின் முறையே ப்ரி டிரான்ஸ் பார்ம் டூலால் தேர்வு செய்துவிட்டிர்கள் . அடுத்து அதில் உள்ள wrap டூலை தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த படத்தை சுற்றி 9 கட்டங்கள் வருவதை காண்பிர்கள். அந்த கட்டங்களின் மைய புள்ளிகளை இழுப்பதுமூலம் உருவங்கள் நமது விருப்பபடி மாறும். நான் இப்போது இரண்டு படங்களில் இந்த டூலை உபயோகிப்பதை பற்றி பார்க்கலாம். ஒரு டீ கப்பில் அழகான படத்தை எப்படி கொண்டு வருவது என பார்க்கலாம். முதலில் நான் டீ கப் தேர்வு செய்து கொண்டேன்.
அது போல் இதில் வரகூடிய படமாக மகாபலிபுரம் படத்தை தேர்வு செய்துகொண்டேன்.
இதை அப்படியே இந்த டீ-கப்பின் மீது பேஸ்ட் செய்து விடுங்கள். பின்னர் முன்னர் செய்தவாறு Free Transform Tool-Wrap தேர்வு செய்யுங்கள்.
உங்களுக்கு மேற்கண்டவாறு படம் கிடைக்கும். இதில் உள்ள சதுரங்களின் முனையை பிடித்து மவுஸால் இழுக்க படம் நீங்கள் விரும்பியவாறு நகரும். உயரம்-அகலம்-நீளம் என நீங்கள் விரும்பியவாறு இதை மாற்றி இழுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு வேண்டிய வடிவம் கிடைத்ததும் நீங்கள் இழுப்பதை விட்டுவிட்டு Enter தட்டுங்கள். உங்களுக்கு இந்த மாதிரி அழகான படம் கிடைக்கும் நிறைய முறை முயற்சி செய்து பாருங்கள். பழக பழகதான் படம் மெருகேரும். போட்டோஷாப் பாடம் -9 (Flip Horizontal Tool)
நீங்கள் மாற்ற வேண்டிய படத்தை தேர்வுசெய்து கொள்ளுங்கள்.அதை முறையே மார்க்யு டூலால் படம் முழுவதையும் தேர்வு செய்து அதை ப்ரி டிரான்ஸ்பார்ம் டூலால் தேர்வுசெய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட சாரளம் ஓப்பன் ஆகும். அதில் உள்ள Rotate 180 ஐ தேர்வு செய்யுங்கள். சென்ற பாடத்தில் கடைசியாக Free Transform Tool பார்த்தோம். அதில் உள்ள Scale,Rotate,Skew,Distort,Perspective,Wrap வரை பார்த்துள்ளோம். இனி அதில் அடுத்துள்ள பயன்பாடு பற்றி பார்க்கலாம்.
இப்போது நான் கீழ்கண்ட படத்தை எடுத்து கொண்டுள்ளேன்.
இப்போது இதில் Rotate 180 ஐ நான் தேர்வுசெய்ததும் உங்களுக்கு படம் ஆனது கீழ்கண்டவாறு மாறியிருக்கும்.
இந்த மாற்றத்தை நீங்கள் நிரந்தராக வைத்துக்கொள்ள விரும்பினால் நீங்கள் File மெனு சென்று Save கிளிக் செய்யுங்கள். அப்போது உங்களுக்கு கீழ் கண்ட எச்சரிக்கை செய்தி கிடைக்கும். இந்த மாற்றத்தை நீங்கள் நிரந்தராக வைத்துக்கொள்ள விரும்பினால் நீங்கள் File மெனு சென்று Save கிளிக் செய்யுங்கள். அப்போது உங்களுக்கு கீழ் கண்ட எச்சரிக்கை செய்தி கிடைக்கும்.
அதில் உள்ள Apply கிளிக் செய்யவும்.இந்த சமயத்தில் நீங்கள் தேர்வு செய்தபடம் நிரந்தரமாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.ஆனால் இதே படத்தை நீங்கள் Save As மூலம் தேர்வுசெய்தால் மாற்றத்திற்கு உள்ளான படம் தனிபடமாக மாறிவிடும்.இதே போல் படங்களை 90 டிகிரி கோணத்தில் கடிகாரச்சுற்றில் மாற்றலாம்.
அதைப்போல் படத்தை மாற்றுகடிகாரச்சுற்று Rotate 90 CCW தேர்வு செய்தால் படமானது கீழ்கண்டவாறு மாறிவிடும்.
நீங்கள் புகைப்படங்கள் எடுக்கையில் சில புகைப்படங்களை புகைப்பட கோணத்திற்கு ஏற்ப கேமராவை திருப்பி படம் எடுப்பீர்கள். அதை நீங்கள் பார்க்கையில் அனைத்துப்படங்களும் படுக்கை வாசத்தில் இருக்க நீங்கள் கேமராவை திருப்பி எடுத்த படம் மட்டும் திரும்பி இருக்கும். அந்த மாதிரியான புகைப்படங்களை நீங்கள் இந்த டூல் கொண்டு சுலபமாக மாற்றிக்கொள்ளலாம். இதைநாம் போல்டரிலேயே சுலபமாக மாற்றிக்கொள்ளலாம் என நீங்கள் சொல்வது கேட்கின்றது. போட்டோஷாப்பிலும் இந்த வசதி உள்ளது என தெரிவிக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். இனி அடுத்துள்ள Flip Horizontal பற்றி பார்க்கலாம். முன்பே சொன்னவாறு படத்தை தேர்வுசெய்து கொள்ளுங்கள். முறையே Free Transform Tool தேர்வு செய்து அதில் உள்ள Flip Horizontal தேர்வுசெய்யுங்கள்.
நான் கீழே உள்ள படத்தை தேர்வுசெய்து உள்ளேன்.
இப்போது இதில் நாம் Flip Horizontal தேர்வு செய்ய படம்மானது உங்களுக்கு இந்த மாதிரி மாறிவிடும்
இதைப்போல் நீங்கள் Flip Vertical Tool ஐ தேர்வு செய்தால் உங்களுக்கு படம் இந்தமாதிரி கிடைக்கும் நீங்கள் படத்தின் தேதியை வைத்து படம் மாறி உள்ளதை அறிந்துகொள்ளலாம். இனி இதை வைத்துசெய்த ஒரு சின்ன போட்டோஷாப் மாஜிக் படத்தை பாருங்கள். நீங்கள் படத்தின் தேதியை வைத்து படம் மாறி உள்ளதை அறிந்துகொள்ளலாம். இனி இதை வைத்துசெய்த ஒரு சின்ன போட்டோஷாப் மாஜிக் படத்தை பாருங்கள். alt இதை எப்படி செய்வது என பார்க்கலாம். முன்பு பார்த்தமாதிரி படத்தை தேர்வுசெய்யுங்கள்.alt இதை நாம் Flip Horizontal Tool மூலம் மாற்றியபின்alt உங்களுக்கு மேற்கண்டவாறு படம் கிடைக்கும். இனி உங்கள் கீ-போர்டில் உள்ள Enter தட்டுங்கள். இப்போது நீங்கள் போட்டோஷாப்பின் மேல் மெனுபாரில் உள்ள பைல்மெனுக்கு அடுத்துள்ள Edit கிளிக் செய்யுங்கள்.alt இப்போது அதில் உள்ள Copy கிளிக் செய்யுங்கள். இப்போது மீண்டும் பைல் மெனு செல்லுங்கள்alt அதில் உள்ள New கிளிக் செய்யுங்கள் . உங்களுக்கு கீழ்கண்டவாறு சாரளம் ஓப்பன் ஆகும்.alt இப்போது இதில் உள்ள Name என்கின்ற இடத்தில் நீங்கள் விரும்பும் பெயரை கொடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து உள்ள Width அளவை இரண்டால் பெருக்கி பின் OK. கொடுங்கள். இப்போது உங்களுக்கு வெள்ளை பின்நிறத்துடன் ஒரு கட்டம் தோன்றும். இப்போது மீண்டும் Edit சென்று அதில் உள்ள Paste கிளிக் செய்யவும். alt இப்போது நீங்கள் தேர்வு செய்த படம் வெள்ளை கட்டத்தில் பாதியில் வந்து இருக்கும்.இப்போது மீண்டும் முதலில் தேர்வு செய்த படத்தை கர்சர் மூலம் இழுத்துவந்து விடவும். இப்போது உங்களுக்கு இந்த மாதிரி படம் கிடைக்கும். alt இரண்டு மூன்று முறை முயற்சி செய்து பாருங்கள். படம் சரியாக வரும். போட்டோஷாப் பாடம்-10(Images)
இதுவரை நடத்தியுள்ள பாடம் வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என பார்க்கலாம். அதற்குள் இரண்டு -மூன்று டூல்கள் பற்றி ஒரு சின்ன முன்னோட்டம் பார்த்து கொள்ளலாம். ( வரிசையாக பாடங்களை பார்த்துவரும் சமயம் அந்த டூல்கள் பற்றி விரிவாக பார்த்துக்கொள்ளலாம்.) முதலில் Images பற்றி பார்க்கலாம். இதன் மூலம் போட்டோவை எப்படி டூப்ளிகேட் எடுப்பது,போட்டோ அளவு மாற்றுதல் மற்றும் போட்டோவின் ரெசுலேசன் மாற்றுதல் பற்றி பார்க்கலாம். முதலில் நீங்கள் போட்டோஷாப் திறந்து கொள்ளுங்கள். அடுத்து உங்கள் கணிணியில் உள்ள ஒரு புகைப்படத்தை திறந்து கொள்ளுங்கள். நான் இப்போது இந்த மயில் படத்தை திறந்து உள்ளேன்
அடுத்து நீங்கள் மெனுபார் பார்த்தீர்களே யானால் உங்களுக்கு மூன்றாவதாக image இருக்கும் . அதை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மூன்றாவது வரியில் உள்ள Dublicate கிளிக் செய்யவும்.
உங்களுக்கு இந்த மாதிரியான விண்டோ ஓப்பன் ஆகும். ஓகே கொடுக்கவும்
இப்போது நீங்கள் முதலில் திறந்த படத்தை (ஒரிஜினல்) கிளிக் செய்து மூடிவிடவும். அடுத்து இப்போது உங்களுக்கு நீங்கள் டூப்ளிகேட் காப்பி செய்த படம் மட்டும் இருக்கும். இதில் நீங்கள் என்னவேண்டும் ஆனாலும் செய்யலாம். சரி அது அப்படியே இருக்கட்டும். இப்போது இந்த போட்டாவின் அளவுகளை மாற்றுவது பற்றி பார்க்கலாம். நீங்கள் Image உள்ளImage Size அல்லது
கீ போர்ட்டில் Alt+Ctrl+I-தட்டச்சு செய்யவும். உங்களுக்கு நீங்கள் தேர்வுசெய்த படத்தின் நீளம்-அகலம் - மற்றும் ரெசுலேஷன் கிடைக்கும்.
இதில் உள்ள அகலம் (Width) காலத்தில் உள்ள அகலத்தை நீங்கள் மாற்ற நீளமானது அதற்கேன உள்ள Starndard அளவில் தானே மாறிவிடும். அதுபோல் படத்தை நீங்கள் அங்குலத்தில் செட் செய்தால் படம் அங்குலத்திலும் -சென்டிமீட்டர்-செட் செய்தால் சென்டிமீட்டரிலும் வரும்.இந்த அளவுகள் நீங்கள் மாற்றிய அகலத்திற்கு அடுத்த காலத்தில் பார்க்கலாம்.,இப்போது நான் கீழ்கண்ட படத்தில் அகலத்தை 6 அங்குலம்(Inch) என மாற்ற நீளமானது தானே 4.5 அங்குலம் மாறிவிட்டதை காண்பீர்கள்.
மாற்றிய அளவில் வந்துள்ள புகைப்படம் கீழே கொடுத்துள்ளேன்.
இனி Resolution பற்றி பார்க்கலாம் படத்தின் தரமானது ரெசுலேசனை அதிகமாகமாற்றினால் அழகாகவும்-குறைவாக மாற்றினால் தரம் குறைந்தும் காணப்படும். நாம் நமது புகைப்படத்தில் நார்மலாக 200-லிருந்து 300 வைத்துக்கொள்ளலாம். அதுபோல் பெரிய பேனர்கள் போடும் சமயம் 450 லிருந்து 600 ஆக மாற்றிக்கொள்ளலாம். உங்களது படங்கள் ஏதாவது பேனர் சைஸ் போடவேண்டும் என்றால் பேனர் அளவை பொருத்து 450 லிருந்து 600 பிக்ஸல் வரை அளவை மாற்றிபிரிண்ட் செய்ய கொடுக்கவும். இப்போது நான் இந்த புகைப்படத்தை 70 ரெசுலேஷனாக மாற்றி உள்ளேன்.
இதன் நீள அகலங்களை மாற்ற வில்லை ஆனால் ரெசுலேசனை மட்டும் மாற்றியுள்ளேன்
அதேபோல் ரெசுலேசனை அதிகமாக மாற்றி அதாவது 400 வைத்து படத்தை மாற்றிஉள்ளேன்
ரெசுலேசனை மாற்றியபின் வந்த படம் கீழே கொடுத்துள்ளேன்.
நீங்கள் இதுபோல் ஒரு படத்தை எடுத்துக்கொண்டு ரெசுலேசனை மாற்றி அருகருகே வைத்துக்கொண்டு பாருங்கள் . வித்தியாசத்தை உணர்வீர்கள். எல்லா வேலையும் முடிந்துவிட்டது. இப்போது இந்த படத்தை மூடிவிட உங்களுக்கு கீழ் கணட விண்டோ கிடைக்கும்.
இதில் நீங்கள் yes கிளிக் செய்தால் படமானது நீங்கள் விரும்பும் போல்டரில் சேவ் ஆகும். உங்கள் ஒரிஜினல் படம் அப்படியே இருக்கும். இதை போல் படம் எடுத்து மாற்றங்கள் நிறைய செய்து பாருங்கள்.
மேலே உள்ள படத்தை நான் ஏற்கனவே நடத்திய மார்க்யு டூல் கொண்டு படங்களை கீழ்கண்டவாறு கட் செய்துள்ளேன். அதுபோல் நீங்களும் முயற்சி செய்து பார்க்கவும். போட்டோஷாப்-11 Duplicate,Image Size,Canvas Size,File info
போட்டோஷாப்பில் இன்று Duplicate,Image Size,Canvas Size,File info மற்றும் Page Setup பற்றி பார்க்கலாம். அதில் நாம் மெனுபார் சென்று அங்கு Image -ல் Duplicate,Image Size,Canvas Size உபயோகிப்பதை பற்றி பார்த்தோம். ஆனால் அங்கு செல்லாமலே நாம் சுலபமாக மற்றும் ஓரு வழியில் மேற்கண்ட கட்டளைகளை செய்வதை இங்கு பார்க்கலாம். முதலில் ஒரு படத்தை தேர்வுசெய்து கொள்ளுங்கள்.நான் ஐஸ்வர்யா ராய் அவர்களின் படத்தை எடுத்துள்ளேன். அதில் படத்தின் மேல்புறம் உள்ள புளு பட்டையின் மேல் கர்சரை வைத்து கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் உள்ள Duplicate கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ஓகே கொடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோக்கள் இரண்டு தோன்றுவதை பாருங்கள்.
அடுத்துள்ளது Image Size தேர்வு செய்யுங்கள்.
உங்களுக்கு தேவையான அளவினை இங்கு தேர்ந்தேடுத்துக் கொள்ளுங்கள். ஓகே கொடுத்தால் நீங்கள் விரும்பிய அளவினை பெறலாம்.
அடுத்துள்ளது Canvas Size. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதனை தேர்வு செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் படத்தின் அளவினை Current Size-ல் பார்க்கலாம். New Size-ல்நமக்கு வேண்டிய அளவினை கொடுத்துப் பெறலாம்.இதில் Anchorபார்த்தால் அதில் ஓன்பது கட்டங்கள் இருக்கும்.சுற்றிலும் அம்புக்குறியும்நடுவில் வெண்மை நிறமும் இருக்கும்.உங்கள் கர்சரை எந்த அம்புக்குறியில் நீ்ங்கள் கிளிக் செய்கின்றீர்களோ அந்த இடம்வெள்ளை நிறத்தையும் அநத இடத்தை சுற்றி அம்புக்குறிஅமைவதையும்காணலாம். இப்போது உங்களுக்கு தேவையான அளவினை நீயு சைஸ்ஸில்நீள -அகலத்துடன் குறிப்பிடுங்கள். (உங்கள் படத்தினை ஓன்பது பாகங்களாக பிரித்து அதில் எந்த இடம் உங்களுக்கு வேண்டுமோ அந்த இடத்தைநீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்) நான் இந்த படத்தில் ஐஸ்வர்யாஅவர்களின் கண்களை தேர்வு செய்வதற்காக (ஐஸ் அவர்களின் ஐஸ்) அகலம் 5 அங்குலம் உயரம் 1.5 அங்குலமும் வைத்துள்ளேன். கீழேஉள்ள விண்டோவினை பாருங்கள்.
ஓகே கொடுங்கள். உங்களுக்கு கீழ் கண்ட விண்டொ தோன்றும். Proceed கொடுங்கள். கீழே தோன்றும் படத்தை பாருங்கள்.
ஓ.கே. கொடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டொ தோன்றும்.
இதைப்போல் உங்களுக்கு தேவையான இடத்தை தேர்வு செய்யுங்கள்.இந்த கட்டளையை நாம் Crop Tool மூலமும் செய்யலாம்.அதைபின் வரும் பாடங்களில் பார்க்கலாம். கடைசியாக உள்ளது Page Setup. அதை தேர்வு செய்யுங்கள்
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள் பேப்பரின் அளவினையும் போட்டோவானது நீளவாக்கிலா அல்லது அகலவாக்கினில் தேவையா என்பதையும் தேர்வு செய்யுங்கள்.
இதில் உள்ள பிரிண்டரை தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் பிரிண்டர் பெயரையும் அளவினை செட் செய்து ஓகே கொடுங்கள்.பிரிண்டர் இணைப்பு கொடுத்திருந்தால் உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்தபடம் ஆனது பிரிண்ட் ஆகும். இதே கட்டளையை நாம் மெனுபாரில் உள்ளபைல் மூலமும் நிறைவேற்றலாம். அதனையும் நாம் பின் வரும் பாடங்களில்பார்க்கலாம். போட்டோஷாப் பாடம்-12(Pen Tool)
டூல்கள் வரிசையில் 17 வதாக உள்ள டூல்தான் பென்டூல். பேனாவின் நிப் மாதிரி உங்களுக்கு இந்த டூல் தோன்றமளிக்கும். இதை செலக்ட் செய்துகொள்ளுங்கள்.
இப்போது மேல்புறம் உள்ள OptionBar –ல் பார்த்தீரகளேயானால் முதலில் பென்டூலும் அடுத்து கட்டத்தில் முதலில் ஒரு சதுரமும் இருக்கும் .அதை விட்டுவிடுங்கள். அடுத்த சதுரம் அருகே கர்சர் கொண்டு செல்லுங்கள். அடுத்த டூல் Paths என காண்பிக்கும்.
அதை கிளிக் செய்யுங்கள். இனி படத்தை எப்படி கட் செய்வது என பார்க்கலாம். உங்கள் கணிணியில் சேமித்துவைத்துள்ள ஒரு படத்தை திறந்து கொள்ளுங்கள்
நான் இந்த படத்தில் நடுவில் இருப்பவரைமட்டும் தனியே பிரித்துஎடுக்க போகின்றேன். அதை எப்படி என பார்க்கலாம். நீங்கள் பென் டூல் செலக்ட் செய்ததும் உங்கள் கர்சரை அந்த படத்தின் அருகே கொண்டு செல்லுங்கள். உங்கள் கர்சரானது பேனாவின் நிப்பாக மாறிவிடும். இப்போது பேனாவை படத்தின் கீழ் பகுதியில் கிளிக் செய்யவும். இப்போது படத்தில் ஒரு சின்ன சதுரம் உருவாகியிருப்பதை பாருங்கள்.அடுத்து கொஞ்சம் தள்ளி மற்றும் ஒரு கிளிக் செய்யுங்கள். இப்போது மற்றும் ஒரு சதுரம் உருவாகி இரண்டு சதுரங்களும் ஒரு சிறுகோட்டால் இணைவதை காணலாம்
மேலே உள்ள படத்தை பாருங்கள். நான் முழங்கைவரை கட் செய்துள்ளது தெரியும்.இங்கு ஒரு சின்ன ஆலோசனை. நாம் பேப்பரில் உள்ள ஒரு படத்தை கத்தரிக்கோலால் கட் செய்யும்போது என்ன செய்கின்றோம். வேகமாக கட்செய்யும் போது ஒரு அங்குலத்திற்கு படம் கட் டாகும். மெதுவாக கட் செய்யும் போது ஒவ்வொரு சென்டிமீட்டராக படம் கட்டாகும். மெதுவாக கட்செய்யும் படம் அழகாக இருக்கும். வேகமாக கட்செய்யும் படம் ஒரங்கள் தாறுமாறாக இருக்கும். அதுபொல்தான் இங்கும் நீங்கள் பென்டூலால் கட்செய்யும் போது இடைவெளி குறைவாக வைத்து புள்ளிகள் வைத்துச்செல்லவும். புள்ளிகளுக்கிடையே இடைவெளி அதிகமானால் படங்களின் ஓரத்தில் உங்களுக்கு பினிஷிங் இருக்காது. நான் நடுவில் இருக்கும் படத்தை கீழே இருந்து கட் செய்ய ஆரம்பித்து அவர் உருவத்தின் அவுட்லைன் முழுவதும் கட்செய்தபின் ஆரம்பித்த புள்ளியையும் முடித்த புள்ளியையும் இணையுங்கள். இப்போது நீங்கள் தேர்வுசெய்தபடம் அவுட்லைன் முழுவதும் தேர்வாகிவிட்டது. அடுத்து நீங்கள் கட்செய்த படத்தின்மீது கர்சரைவைத்து கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் நான்காவது லைன் பாருங்கள். Make Selection இருக்கின்றதா. அதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் உள்ள Feather Radius எதிரில் உள்ள கட்டத்தில் உங்களுக்கு தேவைக்கு ஏற்ப அளவினை கொடுங்கள். Feather பற்றி நான் ஏற்கனவே விளக்கங்கள் கொடுத்துள்ளேன். இங்கு நான் குறைந்த அள வே கொடுத்து்ள்ளேன். இப்போது ஓகே கொடுங்கள். இப்போது நீங்கள் தேர்வு செய்த படத்தை சுற்றி சீரியல் லைட் போட்டவாறு சிறு சிறு கோடுகள் சுற்றி வருவதை பார்க்கலாம். இதுவரை உங்களுக்கு சரியாக வந்தால் நீங்கள் பாடத்தை சரியாக பின் தொடர்ந்து வருகின்றீர்கள் என எடுத்துக்கொள்ளலாம். இப்போது பைல் மெனு சென்று நீயு கிளிக் செயயுங்கள். உங்களுக்கு அளவுகளுடன் ஒரு காலம் உண்டாகும். அதில் நீங்கள் நீளம் - அகலம் - ரெசுலேஷன் தேர்வு செய்யுங்கள். ரெசுலேஷன் ஒரே அளவாக இருந்தால்தான் படம் அழகாக இருக்கும். ஒகே கொடுங்கள். இப்போது உங்களுக்கு படங்கள் இல்லாமல் வெள்ளைநிற விண்டோ ஒப்பன் ஆகி இருக்கும். இனி நீங்கள் கட்செய்தபடத்திற்கு வாருங்கள். படத்தின் மீது கிளிக்செய்து மூவ்டூல் செலக்ட் செய்யுங்கள். இப்போது படத்தின் அருகே கர்சர் கொண்டு செல்லும்சமயம் கர்சரானது கத்திரி்க்கோலாக மாறுவதை காணலாம். இனி கர்சரை மெதுவாக நகர்த்துங்கள். நீங்கள் கட்செய்த படம்மட்டும் நகர்வதை காணலாம்.
நீங்கள் படத்தை நகர்த்திகொண்டுவந்து நீங்கள் புதிதாக திறந்த விண்டோவில் விட்டு விடவும். இப்போது பார்ததீரு்களேயானால் நீங்கள் கட்செய்தபடம் புதிய விண்டோவிலும் இருக்கும். பழைய படத்திலும் இருக்கும்.
படத்தை மூன்றுமுறை நகர்த்தி வைத்துள்ளேன். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இதேபோல் நாம் எந்தனை முறை வேண்டுமானாலும் வரிசையாக வைத்துக்கொள்ளலாம். போட்டோஷாப்-14 Pattern Images
இன்றைய பாடத்தில் Pattern image பற்றி பார்க்கலாம். Pattern image ஆனது ஒரு படத்தில் குறிப்பிட்ட இடத்தை – குறிப்பிட்ட நபரை தேர்வு செய்து அதை அதிக எண்ணி்க்கையில் சுலபமாக நிரப்ப நமக்கு உதவுகின்றது. அதற்கு நாம் மானையும் மயிலையும் எடுத்துக்கொள்ளலாம். முதலில் மான் படத்தை எடுத்துக் கொண்டுள்ளேன்.
இதன் image அளவு அகலத்தில் 6.667 மற்றும் உயரத்தில் 8.889 அங்குலத்தில் உள்ளது.
இதில் அதன் முகம் மட்டும் நான் தேர்வு செய்துள்ளேன்.
முன்பே பாடத்தில் சொன்னது போல் மார்க்யு டூலால் கட் செய்து கொள்ளுங்கள். பின்னர் Ctrl+N-ஐ அழுத்தி பின் Enter தட்டுங்கள். உங்களுக்கு புதிய விண்டோ ஓப்பன் ஆகியிருக்கும். அதில் கட் செய்த மானை பேஸ்ட் செய்யுங்கள்.
உங்களுக்கு மேற்கண்டவாறு படம் கிடைக்கும். இனி பழைய படத்தை முடி விடுங்கள். இப்போது ஸ்கீரினில் தலை மட்டும் உள்ள மான கிடைக்கும். அதன் இமேஜ் அளவை அகலம் 2 அங்குலம் உயரம் 3 அங்குலம் என மாற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்கு கீழ் கண்டவாறு படம் கிடைக்கும்.
இதை அப்படியே விட்டுவிட்டு இப்போது மேல்புறம் உள்ள Edit கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் உள்ள Define Pattern கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ஓகே கொடுங்கள். இப்போது நீங்கள் கொடுத்துள்ள Standard அளவின் படி புதிய விண்டோ ஓப்பன் செய்யுங்கள். நான் அகலத்தில் 10 அங்குலமும் உயரத்தில் 12 அங்குலமும் வைத்து புதிய விண்டோ ஓப்பன் செய்துள்ளேன். இனி நீங்கள் Shift + F5 அழுத்துங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Use எதிரில்உள்ள கட்டத்தில் Pattern தேர்வு செய்து பின் Custom Pattern எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு மேலே உள்ளவாறு ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் தேர்வு செய்த மானின் படம் முதலில் இருக்கும். அந்த படத்தை தேர்வு செய்து ஓ,கே. கொடுங்கள். கண் இமைக்கும் நொடியில் என்ன நடக்கின்றது என பாருங்கள்.
ஒரு மான் பாருங்கள் - 20 மானாக வந்து விட்டது. இதைப்போல் இந்த மயிலை பாருங்கள்.
மயிலின் அளவு கீழே கொடுத்துள்ளேன்.
இதில் மயிலின் முகம் மட்டும் கட் செய்துள்ளேன்.
வேண்டிய அளவிற்கு படத்தின் இமேஜை குறைத்துள்ளேன். படம் கீழே.
இதையும் Edit -Define Pattern -O.K. கொடுத்தேன். புதிய விண்டோ ஓப்பன் செய்தேன். அதில் மானை நிரப்பியவாறு மயிலையும் நிரப்பினேன். படத்தை பாருங்கள்.
மேற்கண்ட பாடங்களில் நீங்கள் நல்ல பயிற்சி எடுத்தால் தான் அடுதது இதன் மூலம் நடத்தப்படுகின்ற பாடங்களுக்கு உங்களுக்கு உதவியாக இருக்கும். இதன்பயன்களையும் பின்னர்பார்க்கலாம். பதிவின் நீளம் கருதி இத்துடன் பாடம் முடித்துக்கொள்கின்றேன்.நன்றாக பயிற்சி எடுங்கள். இப்போது சென்ற பாடத்தில் சொன்னவாறு காப்பி -பேஸ்ட் செய்யுங்கள். உங்களுக்கு இந்த மாதிரி படம் வரும்.
இப்போது இந்த படத்தில் பார்த்தீர்களே யானல் இதில் ஒரு பெண்மணி கோயிலுக்கு செல்கின்றார்.அவர் நமக்கு வேண்டாம். எப்படி அவரை நீக்குவது? அதற்கு இந்த Subtract Selection Tool உதவும். முன்பு சொன்னவாறு படம் தேர்வு செய்து இந்த டூல் மூலம் அந்த பெண்மணியை மட்டும் தேர்வு செய்யவும். இப்போது இந்த பெண்மணி மட்டும் தேர்வாகும். படத்தை பாருங்கள். இப்போது இந்த படத்தில் பார்த்தீர்களே யானல் இதில் ஒரு பெண்மணி கோயிலுக்கு செல்கின்றார்.அவர் நமக்கு வேண்டாம். எப்படி அவரை நீக்குவது? அதற்கு இந்த Subtract Selection Tool உதவும். முன்பு சொன்னவாறு படம் தேர்வு செய்து இந்த டூல் மூலம் அந்த பெண்மணியை மட்டும் தேர்வு செய்யவும். இப்போது இந்த பெண்மணி மட்டும் தேர்வாகும். படத்தை பாருங்கள்.
முன்பு கூறியபடி தேர்வுசெய்து கட்-காப்பி-பேஸ்ட் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு அந்த பெண்மணி நீங்கலாக படம் தேர்வாகும். படத்தை பாருங்கள்.
வரும் பாடங்களில் வெண்மைநிறத்தை பேட்ச் ஓர்க் மூலம் நிரப்புவதை பின்னர் பார்க்கலாம். கடைசியாக உள்ளது Intersect with Selection. படத்தில் உள்ள கிணறை மட்டும் தேர்வு செய்ய இந்த டூலால் முடியும். படத்தை பாருங்கள்.
இப்போது கிணறை தேர்வு செய்து கட்- காப்பி-பேஸ்ட் செய்தால் உங்களுக்கு இவ்வாறு படம் கிடைக்கும்.
இதுவரை நாம் Rectangle Marquee Tool பார்த்தோம். அதுபோல் Eliptical Marquee Tool லும் நாம் படங்களை தேர்வு செய்யலாம்
இதிலும் மேற்படி நாம் Selection Tool ஆல் தேர்வு செய்ததை பாருங்கள்.
இதுபோல் புகைப்படங்களை நீங்கள் தேர்வு செய்து விதம்விதமாக கட் செய்து பார்க்கலாம். ஆனால் நீங்கள் புகைப்படங்களை மாறுதல் செய்யும் முன் மறக்காமல் டூப்ளிகேட் எடுத்துவைதது செய்யவும். போட்டோஷாப் பற்றி மூம்மூர்த்திகள் உள்ளது போல் போட்டோவில் மொத்தம் மூன்று கலர்களே உள்ளன. அவை RGB எனப்படும் RED,GREEN,BLUE என்பனவே அவை. இவை ஒவ்வோன்றும் 256 shadow கொண்டு உள்ளது. அவைகள் மூன்றும் சேரும்போது நமக்கு 256x256x 256 என மொத்தம் 16777216 நிறங்கள் கிடைக்கும். போட்டோஷாப்-15 Magnetic Lasso Tool
போட்டாஷாப்பில் சென்ற பாடங்களில் Lasso Tool பற்றி பார்த்தோம். இன்று அதே Lasso Tool-ல் மூன்றாவதாக உள்ள Magnetic Lasso Tool பற்றி பார்க்கலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இதுவும் படத்தை தேர்வு செய்ய பயன்படுகின்றது.ஒரு படத்தில் உள்ள பல வளைவுகளை தேர்வு செய்வது சற்று சிரமம். அதற்கு நீங்கள் இந்த டூலை பயன்படுத்தலாம். பெயருக்கு ஏற்றார்போல் இந்த டூலை நீங்கள் படத்தின் அருகில் கொண்டு செல்லும் சமயம் படத்தின் ஓரத்தை இந்த டூலே தேர்வு செய்துகொண்டுவிடும். கீழே உள்ள இந்த பூவின் படத்தை பாருங்கள்.
இப்போது பூவின் ஓரம் கர்சரை கொண்டு செல்லும் சமயம் படத்தின் ஓரத்தில் அதுவே தேர்வு செய்வதை காணலாம்
இப்போது படத்தின் ஓரங்கள் முழுவதும் கர்சரை கிளிக் கொண்டு செல்ல படம் முழுவதும் தேர்வு செய்யலாம்
இப்போது கட் செய்தபின் வந்துள்ள படம் கீ்ழே:-
இதனை சுற்றி உள்ள் இடத்தை வண்ணம் கொண்டு நிரப்ப வந்துள்ள படம் கீழே:-
இந்த Magnetic Lasso Tool-ல் மற்றும் ஓரு வசதியும் உள்ளது. கீழே உள்ள Option Bar கவனியுங்கள்alt இதில் உள்ள Feather-ல் வேண்டிய பிக்ஸல்கள் தரலாம். இதில் உள்ள Width என்பது காந்த தன்மையின் அளவை குறிக்கும். இதை 10 என்று வைத்தால் Mouse-ன் கர்சர் உள்ள இடத்தில் இருந்து 10 pixel கள் இடைவெளி வரை உள்ள் படத்தின் Border-ஐ இந்த டூல் புரிந்து கொள்ளும்.படத்தில் பல வளைவுகள் இருந்தால் இந்த மதிப்பை குறைவாக வைத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக தலையின் முடியை தேர்வு செய்யும்சமயமும், விலங்குகளின் வாலை தேர்வு செய்யும் சமயமும் இது மிகவும் பயன்படும். இதில் கடைசியாக உள்ள Frequency என்பது நாம் இந்த டூல் கொண்டு வரையும்சமயம் தோன்றும் புள்ளிகளின் நெருக்கத்தைக் குறிக்கும்.இந்த புள்ளிகளை Fasteing Point என்று கூறலாம். இதில் உள்ள Edge Control என்பது உருவத்தில் உள்ள Contrast நிறத்தை இந்த டூல் அறியும். அதிக Contrast உள்ள இடங்களை அறிந்து கொள்ள இந்த எண்ணை அதிகமாக கொடுக்கவும். இந்த டூல் கொண்டு படத்தை வரைந்து முடித்துவிட்டபின் கர்சரின் டபுள் கிளிக் செய்தோ அல்லது என்டர்கீ யை அழுத்தி யோ முடிக்கலாம்.Magnetic Lasso Tool கொண்டு படத்தை தேர்வு செய்யும் சமயம் நாம் Lasso Tool க்கு மாற Alt Key அழுத்தி பின் கிளிக் செய்யலாம். மீண்டும் பழையபடி நமக்கு Magnetic Lasso Tool தேவைபட்டால் நாம் Alt Ket-ஐ விட்டு விட Magnetic Lasso Tool வந்துவிடும்.

No comments:

Post a Comment