Saturday, 13 April 2013

ஒரு கிலோமீட்டரை விட உயரமாக சவுதியில் அமைக்கப் படவுள்ள கிங்டம் டவர்

ஒரு கிலோமீட்டரை விட உயரமாக சவுதியில் அமைக்கப் படவுள்ள கிங்டம் டவர்

உலகின் மிகப்பெரிய கட்டடமான DUBAI  உள்ள பூர்ஜ் கலிஃபா ஐ விட உயரமாக அதாவது சுமார் 1 கிலோமீட்டருக்கும் அதிகமான (1401 மீற்றர்) உயரமுடைய ஒரு கட்டடத்தை சவுதி அரேபியாவில் அமைக்க லண்டனைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது.
கிங்டம் டவர் எனப் பெயரிடப் பட்டுள்ள இச்செயற்திட்டத்தை மேற்கொள்வதற்கு 780 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப் பட்டுள்ளது.

இக்கட்டடத்தின் பணி நிறைவடைந்தால் கிங்டம் டவர் மேற்கு ஐரோப்பாவிலுள்ள மிக உயரமான கட்டடத்தை விட 4 மடங்கு பெரிதாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது. சவுதி அரேபியாவின் ஜெத்தாஹ் நகரில் அமையவுள்ள இக்கட்டடத்தை இலண்டனைத் தளமாகக் கொண்ட மாசே (Mace) எனும் கட்டுமான நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது. இந்நிறுவனமே லண்டனில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய இராட்டினமான லண்டன் ஐ (London Eye) உட்பட பல முக்கியமான கட்டுமானங்களை செய்திருந்தது.

எதிர்வரும் 2018 இற்குள் முடிவடையவுள்ள இச்செயற்திட்டம் 500 000 சதுர மீற்றர் பரப்பளவு நிலப்பரப்பில் அமைக்கப் படவுள்ளது. தற்போது உலகின் மிகப் பெரிய கட்டடமான டுபாயில் உள்ள பூர்ஜ் கலிஃபா ஐ விட 172 மீற்றர் அதிக உயரத்தில் அமைக்கப் படவுள்ள கிங்டம் டவர் உச்சியில் இருந்து பார்க்கும் போது செங்கடலின் (Red Sea) அடுத்த கரை வரை தெரியும் எனவும் தெரிவிக்கப் படுகின்றது. தற்போது கிங்டம் டவரினை எப்படி அமைக்கவுள்ளார்கள் என்ற திட்டம் மிகவும் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளது.

உங்கள் கருத்து இங்கே

No comments:

Post a Comment