இளையோர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் போதைப்பொருள் பழக்கம் குறித்து விழிப்புணர்வை தூண்டும் வண்ணம் லண்டனைச் சேர்ந்த புகைப்படக்காரர் Roman Sakovich என்பவர் சற்று வித்தியாசமாக எண்ணியுள்ளார்.
அதாவது போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் முன்னர் இருந்த முகத்தோற்றமும் பின் மாறுபட்ட முகத்தோற்றமும் எவ்வாறு காட்சியளிக்கும் என மாடல்களைக்கொண்டு புகைப்படங்கள் எடுத்துள்ளார். இதற்காக நுட்பமாக மேக்கப் போடப்பட்டு இருவேறு தோற்றங்களை பாதிபாதியாக காட்டியிருப்பது புகைப்படக்காரரின் தனித்திறமை என்றே கூறலாம்.
போதை பொருள் பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் எவ்வகையானது என இப்படங்கள் உணர்த்துவதாக அமைகிறது.
No comments:
Post a Comment