Thursday, 25 April 2013

உங்கள் கணினி இயங்கவில்லையா?

உங்கள் கணினி தொடங்குவதில் ஏதேனும் பிரச்னை உள்ளதா? Start பட்டனைத் திரும்ப திரும்ப அழுத்தியும் கணினியை உயிர்ப்பிக்க முடியவில்லையா? அப்படி எனில் இந்தப் பதிவு உங்களுக்குத்தான்.
கணினியை தொடக்கம் செய்ய முடியவில்லை எனில் கீழ்கண்ட சோதனைகளை செய்து பார்க்கலாம்.


மின்சார சோதனை:
(Power supply test)
உங்கள் கணினியில் இணைக்கப்பட்டுள்ள மின் ஒயர் மூலம் மின்சாரம் கணினிக்கு கிடைக்கிறதா என்பதை முதலில் சோதனை செய்துகொள்ளுங்கள்.
கணினி இணைக்கப்பட்டுள்ள power socket க்கு மின்சாரம் பாய்கிறதா என்பதை சோதித்தறியவும்.

மின்சாரம் சரியாக பாய்கிறது கணினியில் ஒரு பீப் சவுண்ட் மட்டும் கேட்கிறது. இதற்கு என்ன செய்யலாம்?

வெவ்வேறு Bios setting-ல் வெவ்வேறு முறைகளில் செயல்படும்படும் படி அமைத்திருப்பர். பொதுவாக ஒரு பிப் சவுண்ட் மட்டும் கேட்டால் உங்கள் Computer-ல் RAM -ல் பழுது இருக்க வாய்ப்பிருக்கிறது.

ஒரு நீண்ட பீப் சவுண்ட், இரண்டு குறுகிய பீப் சவுண்ட்ம் என மூன்று பீப் சவுண்ட் கேட்டால் உங்கள் Video Card -ல் பழுது இருக்கலாம்.

மேலும் சில முக்கியமான சோதனைகளை செய்து பாருங்கள்:

1. மின்சாரம் கணினிக்கு செல்கிறதா என சோதித்தறியுங்கள்.
2. Re-set, Power Button -கள் சரியாக பொருத்தப்பட்டுள்ளனவா என சோதியுங்கள்
3. Monitor Power Button போடப்பட்டுள்ளதா என சோதியுங்கள்
4. கணினித் திரையின் display settings ல் contrast, brightness, sharp போன்ற அமைப்புகள் சரிவரி இருக்கின்றனவா என சோதிக்கவும்.
இவையனைத்தையும் சரியாக இருக்கிறது. ஆனால் கணினி இயங்கவில்லை எனில் இந்த முறையை பின்பற்றிப் பாருங்கள்.

கணினியில் இணைக்கப்பட்டிருக்கும் அனைத்து சாதனங்களுக்கான வயர்களை கழற்றிவிட்டு, சோதனை செய்யலாம். அதாவது கணினியில் பின்புறம் இணைக்கப்பட்டுள்ள powercable, மற்றும் Monitor cable ஆகியவைற்றை மட்டும் விட்டுவிட்டு,மற்ற கேபிள்களை கழற்றி கணினியை இயக்கவிட்டுப் பார்க்கலாம்.

அப்போது கணினி இயங்கினால் கழற்றப்பட்ட மற்ற சாதனங்களில் ஏதோ பழுது இருக்கிறது என யூகிக்கலாம். கழற்றப்பட்ட மற்ற சாதனங்களை ஒவ்வொன்றாக இணைத்து சோதனை செய்யும்போது எதில் பிரச்னை இருக்கிறது என்பதை கண்டறியலாம். இவை அனைத்தும் சரியான நிலையில் இருக்கிறது. மேலும் என்ன செய்யலாம்?

இதுவரைக்கும் நாம் பார்த்தது கணினியில் வெளிப்புறச் சோதனைகள். இனிமேல் செய்ய இருப்பது உட்புறச் சோதனைகள்: இதைச் செய்யும்போது சற்று கவனம் தேவை.

RAM சோதனை:
(Ram test)
கணினியில் உள்ள வெளிப்புற மூடியை(CPU Cover) கழற்றி எடுங்கள். உள்ளிருக்கும் RAM - கழற்றி அதிலிருக்கும் உலோகப் பகுதியை சுத்தமான துணிகொண்டு துடைத்தெடுங்கள். மேலும் தூசிகள் நீக்கிவிட்டு இருந்த இடத்தில் RAM-ஐப் பொருத்துங்கள். மீண்டும் உங்கள் கணினியை இயக்கிப் பாருங்கள். இப்போது கணினி இயங்க ஆரம்பிக்கும். பெரும்பாலான HARDWARE பிரச்னை இதுவாகத்தான் இருக்கும் Ram அதிகளவு தூசிகள் அடைத்துக்கொண்டால் கணினி செயலற்றுப் போகும்.
Ram card
Ram
VGA Card சோதனை:
(VGA CARD TEST)
மேற்கூறிய RAM சோதனையில் கணினி சரிவர இயங்காவிட்டால் இந்த சோதனையைச் செய்து பார்க்கவும். தற்போதைய கணினிகள் உள்ளமைந்த VGA Card களுடன் வருவதால் அவற்றை சோதனைச் செய்ய முதலில் உங்கள் கணினியை Start செய்யுங்கள். Boot ஆகும்போது F2 அல்லது Del பட்டனை அழுத்தி Bios Settings க்குள் செல்லுங்கள். பிறகு VGA CARD -ஐ உயிர்ப்பூட்டுங்கள். பிறகு மானிட்டர் கேபிளை கழற்றி One port VGA -வில் செருகி கம்ப்யூட்டரை Restart செய்யுங்கள்.
VGA Card computer
VGA Card
இது ஓரளவிற்கு பலனளிக்கும். புது VGA கார்ட் வாங்கும்வரை இந்த முறையை செயல்படுத்திப் பார்க்கலாம். இந்த சோதனையைச் செய்துபார்க்கும்போது கவனத்துடன் செயல்படுங்கள்.. இது அனைத்தும் அடிப்படையில் நாமே செய்துபார்க்கக் கூடிய எளிதான செயல்கள்தான்.

இவை அனைத்தையும் செய்தும் கணனி இயங்கவில்லையா அருகிலுள்ள Hardware டெக்னீஷியனை வரவழைத்து கணினியை சோதனையிட்டு, சரிபார்ப்பதுதான் சிறந்த முறை. அதைச்செய்யுங்கள்.

நன்றி நண்பர்களே..!

இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம். 

No comments:

Post a Comment