Saturday, 26 October 2013

நானும் கிருமி கண்ட சோழன்


அன்பு நண்பர்களே ,

இது க‌ம்யூட்ட‌ர் உல‌க‌ம் . க‌ம்யூட்ட‌ர் இணைய‌ தொட‌ர்புக்குள் வ‌ரும் போது என்ன வேண்டுமானாலும் செய்ய‌லாம் என்ற‌ நிலையில் உள்ளோம் . கூட‌வே ஆப‌த்தும் சேர்ந்துதான் வ‌ருகிற‌து . வைர‌ஸ் என்ற‌ வ‌டிவில் தான் வ‌ருகிற‌து . இணைய‌த்தில் க‌வ‌ன‌மாக‌ இருக்க‌ வேண்டும் .

கம்பியூட்டர் வைரஸ் இது உலக மகா பிரச்சினை , இது வந்த பின் தடுப்பதை விட வரும்முன் தடுப்பது எப்படிஎன்று பார்ப்போம்.

எப்படி ஒரு கம்ப்யூட்டர் வைரஸ் புரோகிராமினைப் பெறுகிறது?


1. ஏற்கனவே வைரஸ் புரோகிராம் புகுந்த பைல்களை காப்பி செய்வது.
2. வைரஸ் கெடுத்த புரோகிராம்கள் அல்லது டேட்டா பைல்களைக் கம்ப்யூட்டருக்குள் கொண்டு வருவதன் மூலம்.
3. இன்டர் நெட்டிலிருந்து தகவல்கள் மற்றும் புரோகிராம்களை காப்பி செய்வதன் மூலம்.
4. இமெயில் கடிதங்கள் மூலம் ஒற்றிக் கொண்டு வருதல். வைரஸ் புரோகிராமினை நீக்குவது என்பது நேரத்தையும் நம் உழைப்பையும் அதிகமான அளவில் எடுத்துக் கொள்ளும் செயலாகும்.

இப்போது புது வித‌மான‌ வைர‌ஸ் வ‌ருகிற‌தாம் . அது என்ன‌

இமெயில் ( மின் அஞ்ச‌ல் )மூல‌ம் வ‌ருகிற‌தாம் .

உங்க‌ளுக்கு ப‌வ‌ர் பாய்ண்ட் ப்ரெச‌ன்டேச‌ன் ஃபைல் எதாவ‌து உங்க‌ளுக்கு மெயில் வந்தால் உட‌னே அந்த‌ மெயிலை எந்த‌ கார‌ண‌த்துக்கும் உட்ப‌டாம‌ல் திறக்காமல் உட‌னே அழித்து விடுங்க‌ள் .

அந்த‌ மெயிலில் என்ன‌ ச‌ப்ஜெக‌ட் என்றால்

'Life is beautiful.'
If you open this file, a message will appear on your screen saying:
'It is too late now, your life is no longer beautiful.'

இந்த‌ வைர‌ஸ் வ‌ந்தால் உங்க‌ள் க‌ண‌னியில் உள்ள‌ முக்கிய‌ ஃபைல்க‌ளை அழித்து விடும் .

அப்புற‌ம் உங்க‌ள் மெயில் ஐடி பாஸ்வேர்ட் அழிந்து விடும் . ஆக‌வே க‌வ‌ன‌மாக‌ இருங்க‌ள் .

இந்த புதிய வைர‌ஸ் க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளாக‌ உலா வ‌ருகிற‌தாம் .

இந்த‌ த‌க‌வ‌லை மைக்ரோசாப்ட் ம‌ற்றும் நார்த்த‌ன் ஆன்டி வைர‌ஸ் நிறுவ‌ன‌மும் தெரிவித்துள்ள‌ன‌ .

ஆக‌வே உங்க‌ள் க‌ம்யூட்ட‌ருக்கு த‌க்க‌ ஆன்டி வைர‌ஸ் ப்ரொகிராமிட்டு பாதுகாத்துக் கொள்ளுங்க‌ள் .

No comments:

Post a Comment