Saturday 19 October 2013

ஆன்ட்றாய்ட் தொலைபேசிகளில் தமிழ் எழுதுவது படிப்பது எப்படி ?

இன்றைய காலகட்டத்தில் ஆன்ட்ராய்ட் தொலைபேசிகளை பயன்படுத்தும் தமிழ் பேசுபவர்களாகிய நாம்   ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற பிரச்சினை தமிழில் எழுதுவது, படிப்பது தான். இனி அந்த பிரச்சினை உங்களுக்கு வேண்டாம்.  உங்களுக்கு ஆன்ட்றாய்ட் தொலைபேசிகளில் தமிழ் எழுதுவது படிப்பது பற்றி நான் இன்றைய பதிவில் சொல்லி தர போகிறேன்.

ஆண்ட்ராய்டில் தமிழில் எழுதுவதற்கு :

ஆன்ட்ராய்ட்டில் தமிழில் எழுதுவதற்கு பல்வேறு அப்ளிகேசன்கள் இருக்கின்றன. அவற்றில் சில. 

நான் பயன்படுத்துவது எழுத்தாணி, அதனையே உங்களுக்கும் சொல்லி தருகிறேன். நீங்கள் Play Store சென்று எழுத்தாணி என்னும் அப்ளிகேஷனை தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். 



இந்த அப்ளிகேஷனை நிறுவிய பிறகு, ஆண்ட்ராய்டில் Settings > Language & Input பகுதிக்கு சென்று, அங்கே Keyboard & Input Methods என்ற இடத்தில் (Ezhuthani) இந்த அப்ளிகேஷனை டிக் செய்ய வேண்டும்.



அதன் பின்னர் நீங்கள் எழுத துவங்கும் முன்பு திரையின் மேலே Swipe செய்து Choose Input Method என்று இருப்பதை Tap செய்யுங்கள்.



அதன் பின்னர் நீங்கள் நிறுவிய அப்ளிகேஷனை Tap செய்யுங்கள். அவ்வளவு தான் இனி தமிழில் உங்களால் எழுத முடியும்.


ஆண்ட்ராய்டில் தமிழில் படிப்பதற்கு :


ஆண்ட்ராய்ட் ஐஸ்க்ரீம் சான்ட்விச் (Android 4.0 IceCream Sandwich) பதிப்பிலிருந்து தமிழ் எழுத்துக்களை மொபைலில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமலேயே எம்மால் படிக்க முடியும். அதற்கு முந்தைய பதிப்பான Gingerbread 2.3.6-ஆக இருந்தால், ஒரு சிறிய மாற்றத்தினை மட்டும் செய்தால் போதும். 

அதாவது Browser  Setting பகுதியில் Language என்ற இடத்தில் "Auto-Detect" என்று மாற்றினால் Browser ல் மட்டும் தமிழ் தளங்களை படிக்கலாம்.


எந்த ஒரு ஆண்ட்ராய்ட் பதிப்பாக இருந்தாலும் சரி Opera Mini உலாவியில் தமிழ் எழுத்துக்களை உங்களால் படிக்கமுடியும் அதற்கு நான் கீழே சொல்ல போகும் மாற்றங்களை மட்டும் நீங்கள் செய்தால் போதும்.


Opera Mini உலாவிக்கு சென்று அங்கே மேலுள்ள Address Bar இல் opera:config என டைப் செய்து Go என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து வருகின்ற பக்கத்தில்  Use bitmap fonts complex scripts என்னுமிடத்தில் No என்று இருப்பதை Yes என மாற்றம் செய்யுங்கள்.


Yes என மாற்றம் செய்த பின்னர் கீழுள்ள Save என்ற பட்டாணி அழுத்தி Save செய்து கொள்ளுங்கள்.

இனி உங்களது தொலைபேசிகளில் தமிழ் தளங்களை பார்வையிட முடியும். (கீழுள்ள படத்தினை கவனிக்க..)



பதிவு பயனுள்ளது என நீங்கள் கருதினால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment