Thursday 10 April 2014

மற்றவர்களுக்கு தெரியாமல் இன்டெர்நெட் உபயோகிப்பது எப்படி?

அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி சில நேரங்களில் கணினியில் இன்டெர்நெட் உபயோகிப்பதோ அல்லது வேறு ஏதாவது டவுன்லோட் செய்வதோ யாருக்கும் தெரியாமல் இருந்தால் நன்றாக இருக்கும் நினைப்பதுண்டு. கஷ்டப்பட்டு டைப் செய்துக் கொண்டிருக்கும் போது ஆபிஸில் முக்கியமானவர் திடீர் வரவால் அதை மூட வேண்டியிருக்கும்.

அந்த குறையைப் போக்குவதற்குத்தான் இந்த டபுள் டெஸ்க்டாப் சாப்ட்வேர். இதை இறக்க இங்கே சொடுக்கவும்.



முதலில் அதை இன்ஸ்டால் செய்யவும். பின்பு டெஸ்க்டாப்பின் வலது கீழ் ஓரத்தில் படத்தில் உள்ள சிம்பெள் காணப்படும். அதை க்ளிக் செய்தால் உங்களை அடுத்த டெஸ்க்டாப்பிற்கு அழைத்துச் செல்லும். அங்கு நீங்கள் உங்கள் விருப்பமானவற்றை உபயோகிக்கலாம். திரும்பவும் பழைய நிலைக்கு திரும்ப மறுபடியும் அதே சிம்பளை க்ளிக் செய்யவும். தேவைப்படும் போது அங்கு சென்று உங்கள் விருப்பமானவற்றை பயன்படுத்தலாம், எதையும் க்ளோஸ் செய்ய வேண்டிய அவசியமில்லை.
இதை சில ஷார்ட் கட் கீ உபயோகித்தும் பயன்படுத்தலாம். அதே சிம்பளை ரைட் கிளிக் செய்து "ஆப்சனில்" உங்களுக்கு மிகவும் எளிதாக உள்ள கீயை தேர்வு செய்யவும்.


உதாரனத்திற்கு ஆல்ட்+ஸ்பேஸ் தேர்வு செய்தால், இரண்டு கீயும் அடுத்தடுத்து இருப்பதினால் வேகமாக மாற்ற உதவும்.


எல்லாரும் ஆபிஸில் தொடர்ந்து தடையில்லாம பதிவெழுதி கலக்க ஏதோ நம்மலால முடிஞ்ச சின்ன உதவி(நீ இருக்கிற ஆபிஸ் உருப்பட்டாப்பல தான் !நீங்க சொல்றது எனக்கு கேக்குது).:-))))

No comments:

Post a Comment