புகைப்படக் கேமரா என்றழைக்கப்பட்ட படச்சுருள் இணைந்த கேமராக்களின் காலம் மலையேறிப் போய் இன்று மின்னணு ஒளிப்படக் கருவி என்றழைக்கப்படும் டிஜிட்டல் கேமராக்களின் காலம் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. கைபேசியுடன் இணைந்த கேமராக்கள் வந்தபிறகு மக்களிடையே ஒளிப்படத்தின் மீதான ஆர்வம் அதிகமாகியிருக்கிறது. ஆனால், கேமரா என்பது கைபேசிக்கு கூடுதல் வசதி மட்டுமே. படத்தின் தரம் குறைவாகவே இருக்கும்.
6X4 என்ற Maxi அளவு படத்தை பிரிண்ட் செய்ய குறைந்தபட்சம் 540X360 என்ற பிக்சல் அளவு ரெசல்யூசன் தேவைப்படும். ஆனால் இந்த அளவு ரெசல்யூசனைத் தரக்கூடிய கைபேசிகளின் விலை கேமரா விலையைவிட பல மடங்கு அதிகமாகும்.டிஜிட்டல் கேமரா புதிதாக வாங்குபவர்கள் சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.முதலில் பொழுதுபோக்குக்காகவா அல்லது தொழில் முறை (Professional) யாக படம் பிடிக்க வாங்கப் போகிறீர்களா என்பதைப் பொறுத்தே மாடல்களைத் தேர்வு செய்யவேண்டும்.
பிக்சல் மற்றும் லென்ஸ் அளவு
பொழுதுபோக்கிற்கு என்றால் லென்ஸ் 18-55 எம்.எம் அளவும் 8 முதல் 14 மெகாபிக்சல்களும் (Mega Pixel) , தொழில் முறைக்காக எனில் 18-135 எம்.எம் அளவும் 12 முதல் 21 மெகாபிக்சல்களும் கொண்ட கேமராக்களை தேர்வு செய்யலாம்.
ஆப்டிகல் ஜூம்
தூரத்தில் உள்ளவற்றை படம்பிடிக்க உதவும் வசதி. இது 3x, 4x, 6x, 8x என்று பலவகை இருக்கும். இதில் எது உங்களுக்குப் போதுமானது என்பதைத் தீர்மானிக்கவும்.
பேட்டரி
அல்கலைன் பேட்டரிகள் என்றால் நீங்கள் 30 அல்லது 40 ஒளிப்படங்கள் எடுத்த பிறகு புதிய பேட்டரியை வாங்க வேண்டியதிருக்கும். அதுவே நிக்கல் மெட்டல் ஹய்ட்ரைட் பேட்டரிகளை ரீசார்ஜ் செய்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். செல்போன் பேட்டரிகளைப் உள்ள லித்தியம் அயர்ன் பேட்டரிகள் நிக்கல் பேட்டரிகளைவிட அதிகத் திறன் உள்ளவை. பேட்டரிக்கான சார்ஜர்களிலும் தரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கவும்.
கொள்ளளவு
கேமராக்களின் உள் நினைவகம் குறைவாகவே இருக்கும். மெமரி கார்டுகள் குறைந்தது 2 ஜிபி அளவாவது இருக்க வேண்டும். கூடுதலாக எத்தனை ஜிபி வரை பயன்படுத்த முடியும் என்ற விவரத்தையும் பார்க்கவும்.
எஸ்எல்ஆர் வகை
பொழுதுபோக்கிற்காக உபயோகிக்க கையடக்க கேமராக்கள் (Point and Shoot) போதுமானவை. தொழில்முறை கலைஞர்களுக்கு நல்ல தரமான படங்கள் எடுக்க எஸ்எல்ஆர் (Single Lens Reflex)வகைக் கேமராக்களே சிறந்தவை.
பிற கூடுதல் வசதிகள்
பொதுவாக ஒளிப்படக் கேமராக்களில் வீடியோ எடுக்கும் வசதி என்பது பெயரளவில்தானே தவிர முழுமையானதாக இருக்காது. தற்போது வரும் சில வகை கேமிராக்களில் உயர் தர வீடியோ (HD Video) பதிவு வசதி உள்ளது. இதுபோலவே எல்ஈடி, எல்சிடி டிவியில் இணைத்துப் படங்களைப் பார்க்க உதவும் HDMI அவுட்புட், தொடுதிரை வசதி ஆகியவற்றுடனும் கேமராக்கள் கிடைக்கின்றன.
கூடுதல் வசதிகள், தேவையைப் பொறுத்து விலையும் மாறுபடும்.

பொழுது போக்கிற்கு என காமிரா வாங்குவதானால் தரமான காமிராவின் விலை எவ்வளவு இருக்கும்?
ReplyDelete