- எப்போதெல்லாம் ப்ளாஷ் பயன்படுத்த வேண்டும்
- - இருட்டு இருக்கும் போது தெளிவான படங்களைக் கொணர
- - அதி/வேகத்தில் நகரும் பொருளை "உறைந்த" நிலையில் எடுக்க
- - ஒளி இரைச்சல் அதிகம் வரும் என்று தோன்றினால் அதை தவிர்க்க
- - போர்ட்ரைட் படங்கள் எடுக்க ( முகம் எல்லாப் பக்கமும் தெளிவாக வரவேண்டும் என்ற முனைப்பிருந்தால் ). முடிந்த வரை ஒளி சுவர்களில் பட்டு எதிரொளிப்பது நல்லது.
- - விளம்பர படங்களின் (தேவையான ) போது.
- - மேக்ரோ போட்டோ எடுக்கும் போது
- - நல்ல வெயில் நேரங்களில் மனிதர்களை / பொருட்களை புகைப்படம் எடுக்கும் போது ஃபிளாஷ் உபயோகித்தல் நலம். இல்லாவிட்டால் நிழல் படிந்த இடங்கள் ( முக்கியமாய் மூக்கு மற்றும் கண்களுக்கு அடியில்) கருப்பாகவும் மற்ற இடங்கள் நல்ல வெளிச்சத்துடன் இருக்கும். ஃபிளாஷ் வேண்டாம் என்று கரும் பட்சத்தில் மூக்கின் கீழும் கண்களின் கீழும் நிழல் விழாமல் இருக்கும் வகையில் பார்த்து எடுக்க வேண்டும்.
எங்கு பயன்படுத்த கூடாது?
- - தொட்டிலில் இருக்கும் குழந்தைகள்
- - முகம் அறியா மூன்றாம் மனிதர்கள்
- - பறவைக் கூடுகளில்
- - முகத்துக்கு மிக அருகில்
- - உங்கள் கற்பனைத் திறன் பாதிக்கப் படும் இடங்களில். உதாரணத்துக்கு மெழுகுவத்தியின் வெளிச்சத்தில் அருமையாகக் காணும் பொருள் ஃப்ளாஷ் போட்டால் தட்டையாகப் போய் நீங்கள் கற்பனை செய்த வகையில் வராது.
- - சில வழிபாட்டுத் தலங்கள்.
- - தொல்பொருள் பாதுகாப்பிடம்
- - இரவின் ஒளியை புகைப்படத்தில் சேகரிக்க நினைக்கும் போது
No comments:
Post a Comment