Wednesday 26 March 2014

நீங்கள் வைல்டு லைப் போட்டோகிராபி எனப்படும் கானுயிர் புகைப்படக்கலையில் ஆர்வம் உள்ளவர் எனில்

நீங்கள் வைல்டு லைப் போட்டோகிராபி எனப்படும் கானுயிர் புகைப்படக்கலையில் ஆர்வம் உள்ளவர் எனில் மேற்கொண்டு படியுங்கள். காரணம் உங்களை ஒரு வரலாற்றில் இடம் பெறச் செய்யப்போகும் பதிவு இது.
போட்டோகிராபிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு உள்ள பெஸ்ட் போட்டோகிராபி தமிழ் இதழில் ஆசிரியர் என்.ஆர்.பழனிக்குமார் தற்போது வைல்டு லைப் போட்டோகிராபர் வளர்ச்சிக்கான ஒரு விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு உள்ளார்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான புகைப்படக்கலைஞர்கள் இருக்கின்றனர், ஆனால் அவர்களை அடையாளப்படுத்தவும், தூக்கிவிடவும், உற்சசாகப்படுத்தவும் ஆள் இல்லாத காரணத்தால் வட மாநிலத்தில் உள்ள வைல்டு லைப் போட்டோகிராபர்கள் அளவிற்கு நம்மவர்கள் புகழ் பெறவில்லை
இதனால் ஏற்படும் இழப்புகள் நிறையவே. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் பிரபலமான நிக்கான், கேனன் போன்ற நிறுவனங்கள் தனது தயாரிப்பு தொடர்பாக இலவசமான டெமோவை நடத்த வேண்டும் என்றாலோ, புகைப்படக்கருவிகளை இலவசமாக உபயோகித்து பார்க்கவேண்டும் என்றாலோ எங்கே வைல்டு லைப் போட்டோகிராபர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்றுதான் முதலில் பார்க்கிறார்கள்.
அதற்கும் காரணம் உண்டு வைல்டு லைப் போட்டோகிராபர்கள் அடிப்படையில் சுற்றுச்சூழல் மீது ஆர்வம் அதிகம் கொண்டு இருப்பார்கள், கேமிரா மற்றும் லென்சின் அனைத்து தொழில் நுட்பங்களையும் சோதனை செய்து பார்த்திருப்பார்கள். இது போன்ற காரணங்களால் வைல்டு லைப் போட்டோகிராபர்களை பெரிய கேமிரா நிறுவனங்கள் தேடவும், தேர்வு செய்யவும் முன்வருகின்றன.
தமிழகத்தில் அதிக வைல்டு லைப் போட்டோகிராபர்கள் இருந்தாலும் அவர்கள் சில இடங்களில் ஒரு குழுவாக இருக்கிறார்களே தவிர ஒரு அமைப்பாக இல்லை. ஆனால் வட மாநிலங்களில் ஒரு அமைப்பாகவே உள்ளனர். ஆகவே எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அமைப்பாக இருப்பதன் காரணமாக வட மாநிலங்களிலேயே வைல்டு லைப் போட்டோகிராபி தொடர்பான பயிற்சி பட்டறைகள் நடத்தப்படுகின்றன.
இதை முதலில் மாற்றவேண்டும் மற்ற எல்லா மாநிலங்களையும் விட தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான வைல்டு லைப் போட்டோகிராபர்கள் இருக்கின்றனர் என்பதை சொல்ல வேண்டும் என்பதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள முதல் முயற்சியே "கானுயிர் ஒளிப்படக் கலைஞர்கள்' என்ற புத்தகம்.
முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள நூறு வைல்டு லைப் போட்டோகிராபர்கள் பற்றி விரிவாக சொல்லும் புத்தகம் இது. பல வண்ணத்தில் தயராகிக் கொண்டு இருக்கும் இந்த புத்தகத்தில் போட்டோகிராபர் பற்றிய படமும், குறிப்பும்,அவர் எடுத்த சிறந்த படங்கள் மற்றும் அவர் பயன்படுத்தும் கேமிரா கருவிகள் பற்றிய குறிப்புகளும் இடம்பெறும்.
பல வண்ணத்தில் சர்வதேச தரத்தில் தயாரிக்கப்படும் இந்த புத்தகத்தில் நீங்கள் இடம் பெற வேண்டும் என்றால் நீங்கள் முழு நேர வைல்டு லைப் போட்டோகிராபராக இல்லாவிட்டாலும் பராவாயில்லை ஆனால் உங்களது பொழுது போக்கு மற்றும் ஆர்வம் வைல்டு லைப் போட்டோகிராபியாக இருக்கவேண்டும்.
நீங்கள் எடுத்தவைகளில் சிறந்ததாக கருதப்படும் வைல்டு லைப் புகைப்படங்கள் மற்றும் உங்களது படம் மற்றும் கேமிரா பற்றிய குறிப்புகள் மற்றும் இதற்கான கட்டணத்தை அனுப்பி வைக்க வேண்டும். இன்னும் குறைந்த அளவிலான போட்டோகிராபர்களே இந்த புத்தகத்தில் இப்போதைக்கு இடம் பெற வாய்ப்பு இருப்பதால் உடனே செயல்படவும்.
இந்த புத்தகம் சம்பந்தபட்ட போட்டோகிராபருக்கு அனுப்பிவைக்கப்படும், அத்துடன் முக்கியமாக பள்ளி, கல்லூரிகளுக்கும், கேமிரா தயாரிப்பு நிறுவனங்கள், கேமிரா விற்பனை நிறுவனங்கள், நூலகங்கள் மற்றும் புகைப்படம் தொடர்பான இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
இந்த புத்தகம் ஏப்ரல் 4ம்தேதி கோவை கொடீசியா அரங்கில் வெளியிட ஏற்படாகியுள்ளது. புத்தக வெளியீட்டை முன்னிட்டு ஒரு புகைப்பட கண்காட்சியும் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள புகைப்படக் கலைஞர்களின் படங்கள் இடம் பெறும். சிறந்த படங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகளும் வழங்கப்படுகிறது.
இது பற்றிய முழு விவரத்திற்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியவர் பெஸ்ட் போட்டோகிராபி ஆசிரியர் பழனிக்குமார்: 9842127033.

No comments:

Post a Comment