Sunday, 26 October 2014

உங்கள் கம்ப்யூட்டர் C டிரைவின் அளவு என்ன ?

உங்கள் கம்ப்யூட்டரி C டிரைவின் அளவு (Capacity) ஐ எப்படி சோதித்து பார்ப்பது என்று உங்களுக்கு தெரியுமா ?

நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறீர்கள் என்றால் திடீரென சிலபேர் உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கின் கெபாசிடி என்ன என்று கேடபார்கள். அந்த நேரத்தில் உங்களுக்கு சொல்லத்தெரியவில்லை என்றால் ரெம்பவும் சங்கடமான சுழ்நிலையாகத்தான் இருக்கும்.

சரி........ அதை எப்படி உங்கள் கம்ப்யூட்டரில் சோதிப்பது என்று கேட்கிறீர்களா.

முதலில் உங்கள் கம்ப்யூட்டரின் முகப்பில் (Desktop ல்) My Computer என்று எழுதப்பட்ட கம்ப்யூட்டர் போன்று படம் உள்ள ஐக்கானை கிளிக் செய்யுங்கள்.

அதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழே படத்தில் உள்ள பகுதி திறந்துகொள்ளூம்.







இதில் Local Disk (C) என்று எழுதப்பட்டுள்ள டிரைவை உங்கள் மவுசால் தொட்டு அதன் வலது புறம் கிளிக் செய்து அதில் தெரியும் Properties என்ற இடத்தை தட்டுங்கள்.

அப்படி தட்டியதும் கீழே படத்தில் உள்ளதுபோல Local Disk (C) Properties என்ற பகுதி உங்களுக்கு ஓப்பன் ஆகும்.






இதில் நம்பர் 1 என்று குறிப்பிட்ட இடம் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் எவ்வளவு இடத்தை இதுவரை பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று சொல்கிறது.

அடுத்து நம்பர் 2 என்று குறிப்பிட்டுள்ள இடம் நீங்கள் பயன்படுத்தாத பாக்கி உள்ள இடம் எவ்வளவு என்று தெரியப்படுத்துகிறது.

அடுத்து நம்பர் 3 என்று குறிப்பிட்ட இடம்தான் முக்கியமானது. இதில் கொடுக்கப்பட்டுள்ள அளவுதான் மொத்தமாக உங்கள் C டிரைவின் அளவு. அதாவது உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் கெப்பாசிட்டி என்ன என்று கேட்பவர்களுக்கு நீங்கள் தெரியப்படுத்தவேண்டிய அளவு.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் 39.00 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி என்றால் இந்த கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் கெபசிட்டி மொத்தத்தில் 40 GB அளவில் உள்ளது என்று அர்த்தம்.

மேலும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விபரம் இந்த Local Disk (C:) டிரைவைப்போல அதன் பக்கத்தில் Local Disk (D:) என்ற ஒரு டிரைவ் உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தால் அதன் டிஸ்க் கெபாசிடியையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

உங்கள் C டிரைவ் 40 GB அதோடு உங்கள் D டிரைவ் 40 GB என்று இருந்தால் உங்கள் கம்ப்யூட்டரின் மொத்த ஹார்டிஸ்க் கெபாசிட்டி 80 GB ஆகும்.

No comments:

Post a Comment