இந்தியாவின் பெங்களூரிலுள்ள காடொன்றில் யானையின் கோரப் பிடியில் சிக்கிய நபர் ஒருவர் மயிரிழையில் உயிர்பிழைத்த அரிய சம்பவமொன்றினை புகைப்படவியலாளர் ஒருவர் முழுமையமாக படம் பிடித்துள்ளார்.
விஜய கர்நாடகா பத்திரிகையைச் சேர்ந்த புகைப்படவியலாளாரான கே.எஸ்.ஸ்ரீதர், பெங்களூருக்கு வெளியிலுள்ள கிராமப் புறத்திலுள்ள காடொன்றுக்கு சென்று படமெடுக்கும் போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காட்டிற்குள் அற்புதமான படங்களை எடுக்கும் எண்ணத்தில் யானைகள் இருக் கும் அபாயகரமான எல்லைக்குள் உள்ளூர் வாசிகளும் ஸ்ரீதரும் நுழைந்தனர்.
இதன்போது அங்கு வந்த யானை சேகரை துரத்தியது. அவரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உதவிகள் எதுமின்றி ஓடினார். ஆனால் திரும்பிப் பார்த்தபோது தன்னுடன் வந்த மணிராஜுவை பெண் யானையொன்றின் பிடியில் சிக்கியிருப்பதை கண்ட பீதியீட்டும் சம்பவத்தை மீட்டினார் புகைப்படவியலாளர் ஸ்ரீதர்.
இந்த சம்பவம் குறித்து அவர் மேலும் கூறுகையில், “நான் உள்ளூர் கிராமவாசி ஒருவருடன் நட்பாக இருந்தேன். அவரே என்னை காட்டுக்குள் அவரது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றார். காலை 10.30 மணியளவில் ஹஸ்கர் ஆற்றினை அடைந்தோம். அங்கு ஏற்கனவே பலர் குழுமியிருந்தனர்.
காட்டிற்குள் சென்றதும் அங்கு யானைகள் மரத்தின் பின்னால் இருப்பதை நான் அறிந்து கொண்டேன். அத்துடன் அனைவரை யும் கையடக்கத் தொலைபேசிகளையும் நிறுத்தக் கேட்டுக் கொண்டேன். ஏனெனில் யானைகள் சிறிய சத்தங்களையும் உணவரல்லன. மேலும் 30 அடி தூரத்தில் 12ற்கும் அதிகமான யானைகளையும் கண்டேன்.
இந்நிலையில் கையடக்கத் தொலைபேசியின் ஓசை கேட்க அங்கு பேணப்பட்ட அமைந்து சீர்குலைந்து விட்டது. ஆனால் தொடர்ந்தும் நான் படமெடுத்துக் கொண்டே இருந்தேன், இதன்போது சத்தத்தினால் விரைவாக யானைகள் நாங்கள் இருந்த திசையை நோக்கி நகர்ந்தை என்னால் அவதானிக்க முடிந்தது.
அப்போது நான், ஆபத்தை எதிர்கொண்டு படமெடுப்பதா? அல்லது ஓடுவதா? என இரண்டு மனநிலையில் இருந்தேன். பின்னர் சில படங்களை வரிசையாக எடுத்தவாறு படமெடுப்பதை நிறுத்தினேன். அதுவரையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் மணிராஜு என்பவர் யானையிடம் மாட்டிக் கொண்டார்.
அவர் ஓடிக் களைப்படைந்து யானையின் தும்பிக்கை பிடியில் அகப்பட்டுக் கொண்டார். அத்துடன் மணிராஜுவின் கதை முடிந்தது என நினைத்தேன். பள்ளமொன்றில் இறங்கிய யானை சற்று நிலை தடுமாறியது. எப்படியோ யானை தனது தும்பிக்கையின் பிடியை தளர்த்த மணிராஜு கீழே வீழ்ந்தார்.
என் கண்களை என்னால் நம்பமுடியவில்லை
அதன் பின்னர் வேறு சிலருடன் இணைந்து நான் சத்தமிட்டேன். கிராமவாசிகள் யானை மீது கற்கனை வீசி பயமுறுத்த அது அங்கிருந்து சற்றே நகர்ந்தது.
அதன்பின் கிராமவாசிகள் ஓடிச்சென்று மணிராஜுவின் உடலில் உயிர் இருக்கிறதா? என பார்த்தனர்.
அவர் உணர்வின்றி இருந்தாலும் உயிருடன் இருந்தார். அவரை வைத்தியசாலைக்கு அனுப்பினோம்” பின்னர் படமெடுப்பதா? அல்லது மணிராஜுவின் உயிரைக் காப்பாற்றுவதா? என்பதில் மணிராஜுவைக் காப்பாற்றவே விரைவாக தீர்மானித்தேன்.
பின்னர் கிராமவாசிகளின் உதவியுடன் யானையை விரட்டி மணிராஜு உயிருடன் மீட்கப்பட்டார்” என்றார்.
சுமார் 5 நிமிடங்களில் மணிராஜு மரணத்தின் விளிம்புக்குச் சென்று திரும்பிய இந்தச் சம்பவத்தை தனது கெமராவில் பதிவு செய்து கொண்டு வாழ்நாள் புகைப்படங்களுடன் திரும்பியுள்ளார் கே.எஸ்.ஸ்ரீதர்
No comments:
Post a Comment