Thursday 19 September 2013

ஒளிப்படவியல் ஒரு அறிமுகம்

நம்மவர்களுக்கும் ஒளிப்படவியலில் (Photography) ஆர்வம் இருப்பதை உணர்ந்தேன். அதனால் மேற்கொண்டு அதுசம்பந்தமான பதிவுகள் இடலாம் என நினைத்துள்ளேன் உங்கள் ஆதரவும் பிற்குறிப்பும் அதற்கு உதவும்.
நிறய நண்பர்களின் வேண்டுகோளிற்கு இணங்க ஒளிப்படவியலைப்பற்றி ஒரு சின்ன அறுமுகம் எழுதலாம் என முடிவெடுத்துள்ளேன்.
வரலாறு
காட்சிப்படுத்துதல் என்பது மனிதகுலம் தோன்றிய காலம்தொடக்கம் காணப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரீகம் முதலே மனிதன் தனது நடவடிக்கைகளை ஓவியம், சிற்பம் மூலமாக நிலைநிறுத்தியிருக்கின்றான். அதன்பிறகு மன்னராட்சிக்காலத்தில் மன்னர்கள் தமது வெற்றிகளையும் தமது சாதனைகளையும் பதிவுசெய்ய முனைந்திருக்கின்றார்கள். அவைகளில் சில காலப்போக்கில் அழிந்துபோனாலும் இன்றும் சில பதிவுகள் நாம் காணக்கூடியதாக உள்ளது. இலத்திரனவியல் காலத்தில் மனிதன் அதனை ஒளிப்படம் மூலமாக பெற்றுக்கொண்டான். அதன் மூலம் இருவானதே ஒளிப்படக்கலை(photography). Photography என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து உருவானது. இதற்கு ஒளியினைப்பதிதல் என்று பொருட்படும். முதன் முதலாக ஒளிப்படத்தினை சீன தத்துவஞானி ‘மோ டீ’, கிரீக் கணிதமேதை அரிஸ்டோடில் மற்றும் இயுக்லிட்டால் 4ம் 5ம் நூற்றாண்டில் ஊசித்துளை கமராவால் எடுக்கப்பட்டது. ஆனாலும் முதலில் நிரந்தரமாகப்பதியும் ஒளிப்படம் 1826ம் ஆண்டு பிரான்ஸ் படைப்பாளியான ஜோசப் நைசிப்போர் நிப்ஸ் பிடிக்கப்பட்டது. மேலும் வர்ணப்புகைப்படம் 1970 இல் ஸ்கொட்லாந்து பெளதீகவியலாளரான ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்லால் கண்டுபிடிக்கப்பட்டது. நவீன கால எண்ணியல் ஒளிப்படக்கருவி 1969 களிலேயெ உருவாக்கப்பட்டது.
முன்னேற்றம்
இவ்வாறு வழர்ச்சியடைந்த ஒளிப்படவியல் இன்று எல்லோரது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிவிட்டது. இதற்குக்காரணம் டிஜிடல் தொழில்நுல்பத்தில் ஏற்பட்ட அசுர வழர்ச்சியும் கமராவின் தொழில்நுட்பம் மற்றும் இலகுவாகப்பவிக்கும்தன்மை, விலைகுறைவு, படங்களைப்பதியும் பழக்கம் மக்கள் மத்தியில் பெருகியமை, social media எனப்படும் சமூகஊடக இணையத்தளங்களிம் பாவனை அதிகரித்தது போன்ற காரணங்களை சொல்லலாம். ஒருகாலத்தில் புகைப்படம் (புகைப்படம் என்பதைப்பார்க்க ஒளிப்படம் என்பதே இந்த காலகட்டத்திற்கு பொருந்தும்) எடுக்க படப்பிடிப்பகம் (Studio) சென்றே எடுக்கவேண்டும், மேலும் திருமணம் போன்ற முக்கியமான நிகழ்வுகளிற்கே புகைப்படம் எடுக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் இன்று அது எல்லோராலும் அன்றாடமாகப்பாவிக்கப்படுகின்ற ஒரு பொருளாக மாறிவிட்டது.
ஒளிப்படத்தின் மகிமை
ஒளிப்படத்தினை மனிதன் ரசிப்பதற்கு நிறய காரணங்கள் இருந்தாலும், நிலைநிறுத்திப்பார்கின்ற வாய்பினை அது தருவதாலேயே அது மனிதனால் ரசிக்கப்படுகின்றது என நான் நினைக்கின்றேன். அதாவது உலகில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற காட்சிகளை மனிதனால் அப்படியே நிறுத்த முடியாது. பாய்ந்துவிழும் நீர்வீழ்ச்சிகள், பறந்துசெல்லும் பறைவைகள், வேகமாகச்செல்லும் வாகனம், அழகான குழந்தையின் சிரிப்பு என ஒரு சில கணத்தில் நம் முன்னே கடந்து செல்லும் காட்சிகளை நம்மால் அப்படியே நிறுத்திவைத்து ரசிக்கமுடியாது. கண்காளால் அதை செய்ய முடுயாது ஆனால் கமராவால் முடியும். யோசித்துப்பாருங்கள் அவசரமாக நகர்ந்துசெல்லும் மனிதர்கள் நிறைந்த சனத்திரளை படம்பிடித்து, அந்தக்கணப்பொழுதில் ஒவ்வொருத்தரினுடைய முகபாவங்கள், அசைவுகள், செயற்பாடுகளைப் பார்க்க எவ்வளவு நன்றாக இருக்கும். ஒரு ஒளிப்படம் நமக்கு பல கதைகள் சொல்லும், பழய நினைவகளைமீழச்செய்யும், முகத்தில் சந்தோசத்தை, மனதில் மகிழ்ச்சியை, பெருமிதத்தை, பாராட்டை, பிரிவினை இப்படி பலவற்றை நமக்குத்தரும். அதுவே ஒளிப்படக்கலையின் வெற்றிக்குக்காரணம். ஒவ்வொரு நிகழ்வையும் பதியுங்கள் சில காலம் கழித்துப்பாருங்கள் உங்களுக்குள் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி உண்டாக்கும். அதற்கு இந்தகால கட்டத்தில் நிறய வசதிகளும் வாய்ப்புக்களும் உள்ளன. எதையுமே தவறவிடாதீர்கள். ஒரு அழகான காட்சியையோ இல்லை நல்ல தருணத்தையோ வெறுமனே ரசித்துவிட்டு போகாதீர்கள். அதனைப்பதிவு செய்யுங்கள் அடுத்தவரிடம் பிகிர்ந்துகொள்ளுங்கள். மற்றவரிடமும் அதே சந்தோசத்தை கொண்டுசெல்லுங்கள். என்னைப்பொறுத்தவரை நல்ல காட்சியைக்கண்டு படமெடுக்காமல் செல்பவன் சுயநலவாதி என்றே சொல்வேன்.
சிறந்த புகைப்படங்களைப்பார்து ரசிக்கக்கற்றுக்கொள்ளுங்கள். அந்த புகைப்படங்கள் அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்க அவரிகள் என்ன யுக்திகளைக்கையாண்டிருக்கிறார்கள் என்று அராட்சி செய்துபாருங்கள். சிறந்த படம் எடுக்க நாமும் என்ன செய்யலாம் என்று எண்ணுங்கள்.
இவ்வாறு சில புகைப்படங்களைப்பதியும் இணையத்தளங்கள் நிறய உள்ளன.
வெறுமனே உங்கள் படங்களையும் உங்கள் நண்பர்களது படங்களையும் மாறி மாறி எடுப்பதுவல்ல ஒளிப்படக்கலை. இங்கு நிறய உள்ளது. அதனைப்பகிர்வதற்கு முன்னய காலகட்டத்தைவிட நமக்கு சந்தர்ப்பம் உள்ளது. அதனை எவ்வாறு செய்யலாம், என்ன நுட்பங்கள் பயன்படுத்தலாம் என்பதினை நான் உங்களுக்கு எனது பதிவுகள் மூலம் தருவேன். ஒளிப்படக்கலையின் ஒவ்வ்வொரு சிறப்பையும் பெற என்னோடு சேர்ந்து பயணியுங்கள்.

No comments:

Post a Comment