Friday 11 January 2013

சோடா பாட்டில் அளவேயான 3 வயதான சிறுமி!



  • 0
  • 0
சீனாவில் ஹூவாய்- ஹூவா பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமி லியாங் சியாவோசியாவோ, தன் வயதுக்குரிய வளர்ச்சி இல்லாததால் 54 செ.மீ. உயரமே இருக்கிறாள்.சிறுமி லியாங், பிறக்கும் போது 1.05 கிலோ எடை, 33 செ.மீ. உயரம் இருந்தாள்.கடந்த 3 ஆண்டுகளில் 22 செ.மீ. உயரமே வளர்ந்திருக்கிறாள். எடை தற்போது 2.5 கிலோவாக இருக்கிறாள்.
எடை குறைவாக இருப்பதால் சாங்சா நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். அங்கிருக்கும் மற்ற குழந்தைகளோடு தட்டு தடுமாறி விளையாடுகிறாள்.
இவளைப்பற்றி டொக்டர்கள் கூறியதாவது, மரபியல் குறைபாடு காரணமாக அவளது உடல் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கிறது.


அவள் இனி வளர்வதற்கு வாய்ப்பு இல்லை என்றும் ஒருவேளை வயதானாலும் இவ்வளவு உயரம்தான் இருப்பாள் எனவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களக்கு முன்பு, அமெரிக்காவின் வடகரோலினா மாநிலத்தில் உள்ள சார்லோட் நகரில் உள்ள மருத்துவமனையில் நிக்கி- சாம்மூர் தம்பதிக்கு 25 வாரங்களில் குழந்தை பிறந்தது.
இக்குழந்தை ஒரு சோடா பாட்டில் அளவே இருந்தது. குழந்தையை காப்பாற்ற டொக்டர்கள் மிகவும் போராடினர். 6 மாதங்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதன் பலனாக குழந்தை உயிர் பிழைத்துள்ளது.
கென்னா க்ளெயிர் மூர் என பெயரிடப்பட்ட அக்குழந்தை நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனது. கென்னா, உலகளவில் சிறிய குழந்தைகளில் ஒருத்தியாக கருதப்படுகிறாள்.
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment