Saturday 12 January 2013

பாதை மாறிய காண்டாமிருகம் காப்பாற்றப்படும் சுவாரஸ்ய காட்சிகள்

ஆபிரிக்காவின் மேற்கு வானாந்தர பகுதி ஒன்றில் பாதை மாறி இருப்பிடம் செல்ல முடியாது தவித்த காண்டாமிருகம் ஒன்று WWF மற்றும் உள்ளூர் வன அதிகாரிகளால் மீட்கப்பட்டு பத்திரமாக அதன் இடத்தில் சேர்க்கப்பட்டது.
பாதை மாறி வேறு இடங்களுக்கு செல்லும் காண்டாமிருகங்களுக்கு, வேட்டையாடிகளால் ஆபத்து இருப்பதால் அக் காண்டாமிருகம் மீட்புக்கு உட்படுத்தப்பட்டது.
கடந்த ஆண்டில் 341 கறுப்பு காண்டாமிருகங்கள் அதன் கொம்புக்காக கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. உலகின் அழிந்து வரும் இனங்களில் கண்டாமிருகமும் உள்ளடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலங்குவானூர்தி மூலம் காட்டில் இருந்து தூக்கிவரப்பட்ட காண்டாமிருகம், பின்னர் கொண்டெய்னர் ட்ரக் மூலம் அதன் இருப்பிடத்துக்கு பத்திரமாக கொண்டு சேர்க்கப்பட்டது.




No comments:

Post a Comment