Monday 19 August 2013

ஃபிலிம் கேமராவா டிஜிடல் கேமராவா ?

முதலில் புகைப்படக் கலைப் பற்றிய என் கருத்தை சொல்லிவிடுகிறேன்.

" எப்படி உங்கள் கேமரா காட்சிகளை பார்க்கும் என்பதை புரிந்துகொண்டால், மனதை நிறுத்தி கண்களால் மட்டுமே காட்சிகளை காண முடிந்தால் புகைப்படக் கலை மிகவும் எளிதானது "

சரி விஷயத்திற்கு வருவோம். பின்னூட்டத்தில் வந்த ஒரு கேள்வி. ஃபிலிம் கேமராவை விட டிஜிடல் எந்த வகையில் சிறந்தது என்று.

இரண்டையும் ஒப்பீடு செய்து பாருங்கள். இன்னமும் ஃப்லிம் கேமராவை விட்டு மாறாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். என்னிடமும் பழைய ரேஞ்ச் ஃபைண்டர் கேமரா இருக்கிறது. டிஜிடலை விட அதன் மீது எனக்கு காதல் அதிகம்.





ஆனால் பல விஷயங்களில் டிஜிடல் கேமரா முன்னிலைப் பெறுகிறது.

எடுத்தப் படங்களை உடனுக்குடன் நாம் பார்ப்பதால், படங்களை பலமுறை எடுத்து அதில் நல்லது எதுவென்று ஒன்று தேர்ந்தெடுக்கலாம். வேண்டாதவற்றை உடனுக்குடன் தவிர்த்து விடலாம்.

ஃப்லிம் கேமராவில் அந்த வசதி இல்லை. எதுவானாலும் ஒரு ரோல் ஃப்லிம் முடிந்த பிறகே அதை டெவலப் செய்து பார்க்க வேண்டும். ஒருவேளை அருமையாக வந்திருக்க வேண்டிய படம் ஒன்று சொதப்பலாக வந்திருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. தவறவிட்ட கணங்களை எண்ணி ஏங்குவதைத் தவிற

பகிர்ந்து கொள்ளுதல் மிக எளிதானது.

running cost மிகவும் குறைவு.

எந்த அளவில் வேண்டுமானாலும் கிடைக்கும். இப்போது செல்பேசியிலேயே வந்துவிட்டதால் பயனாளர்கள் மிகவும் அதிகரித்து விட்டனர்.

ஆனால் 35mm ஃபிலிம் கேமரா தரும் தரத்தை 6 மெகா பிக்ஸல்ஸ் கொண்ட டிஜிடல் கேமரா தரமுடியாது என்பது மட்டும் மறுக்க இயலாத உண்மை. ( எப்படி என்பதை பிறகு பார்ப்போம் ).

புகைப்படக் கலை பழகும் காலத்தில் குறைந்த செலவில் தரமான புகைப்படம் பெறவும் திறமையை செப்பனிடவும் சிறந்த வழி டிஜிடல் கேமரா உபயோகிப்பது மட்டுமே என்பது என் எண்ணம்.

உங்களின் கருத்துகளையும் பதியுங்கள். தொடரலாம்

 

No comments:

Post a Comment