Monday 26 August 2013

புகைப்படங்களில் தேவையில்லாததை நீ்க்க

போட்டோக்களில் சிலசமயம் தேவையற்றவைகளும் இடம்பெறும. அழகான இயற்கை கர்ட்சியை படம் பிடிப்போம். இடையில் தேவையற்ற கல் -காய்ந்த மரம்- அதன் அழகை கெடுக்கும். முக்கிய உறவினரை படம்பிடிப்போம். தேவையில்லாத நபர் உடன் வந்து நிற்பார்.நமக்கு தேவையில்லாதவற்ற எளிதில் நீக்கிட இந்த சின்ன சாப்ட்வேர் உதவுகின்றது. 2 எம்.பி. கொள்ளளவு  கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்யவும்.  இதில் உள்ள சிலையை எப்படி எடுக்கலாம் என காணலாம்.

இப்போது இந்த சாப்ட்வேரினை கிளிக் செய்தததும் உங்களுக்கான விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்களது புகைப்படத்தினை தேர்வு  செய்யவும். அடுத்து இதில் எந்த பகுதியை நீங்க விரும்புகின்றீர்களோ அதனை முடிவு செய்துகொள்ளுங்கள். நான் சிலையை எடுக்க முடிவு செய்துள்ளேன். இப்பேர்து இதன் வலதுபக்கத்தில் உள்ள போனா போன்ற ஐகானை கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கான டூல் கிடைக்கும். இதன் மேலே உங்கள் டூலுக்கான அளவினை இதில் உள்ள ஸ்லைடர் கொண்டு முடிவுசெய்துகொள்ளவும்.
 இப்போது தேவையில்லா இடத்தினை இந்த டூல்கொண்டு மறைக்கவும்.நீங்கள் மறைக்க விரும்பும் உருவம் ரோஸ் நிறத்தினை கொண்டு நிரப்பவும். 
 இப்போது இதன் கீழே உள்ள டூலினை கிளிக் செய்யவும். நீங்கள் வரைந்த ரோஸ் நிறத்தின் மீது குறிக்கால் கோடுபொடவும். மேலே உள்ள படத்தினை பார்க்கவும்.
இறுதியாக மூன்றாவதாக உள்ள பக்கெட் போன்ற ஐ கானை கிளிக் செய்யவும.உங்களுக்கான பணி நடைபெறுகையில் கீழே உள்ள ஸ்லைடரில் பச்சை நிறங்கள் சிறுசிறு கட்டங்களாக நகர்வதை காணலாம்.இறுதியாக நீக்கப்பட்ட படத்துடன் உங்கள் படம் கிடைக்கும். மேலே உள்ள விண்டோவில் பாருங்கள். சிலை காணாமல் போய்இருக்கும். போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் நண்பர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்

No comments:

Post a Comment