Monday 26 August 2013

ஸ்டுடியோ வைத்திருக்கும் அன்பர்களுக்கு இந்த சாப்ட்வேர் நிச்சயம் பயன்படும்

நம்மிடம் உள்ள புகைப்படங்களை அளவினை மாற்ற - கன்வர்ட் செய்ய -  பெயர் மாற்றம் செய்ய - வலது இடது புறம் மாற்ற - திருப்ப -வாட்டர் மார்க் செய்ய என எண்ணற்ற பணிகள் செய்ய இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது.2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான படத்தினை தேர்வு செய்யவும். தனி தனி புகைப்படமாகவோ - மொத்தமாக போல்டரில் உள்ள புகைப்படங்களையோ நாம் தேர்வு  செய்யலாம்
தேர்ந்தெடுக்க வசதியாக இதன் மேற்புறம் நிறைய டேப்புகள் உள்ளது;. தேவைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்க்லாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அளவுகளையும் குறைக்கவோ அதிகமாக்கவோ செய்யலாம். இதில் உள்ள ஸ்கேரல் பார் மூலம் அளவினை  தேர்ந்தெடுக்கலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
உங்களது அனைத்து பணிகளும் முடிவடைந்தபின்னர் நீங்கள் இதில் உள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக்செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இறுதியாக நீங்கள் சேமித்து வைத்துள்ள இடத்தில் சென்று பார்த்தீர்களோயானால் நீங்கள் விரும்பிய படி புகைப்படம் இடம்பெற்று இருக்கும். ஸ்டுடியோ வைத்திருக்கும் அன்பர்களுக்கு இந்த சாப்ட்வேர் நிச்சயம் பயன்படும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

No comments:

Post a Comment