Monday, 19 August 2013

tips of photography.....!

                      ஒரு நல்ல கலைஞனாக உயர, அந்தக் கலையை முதலில் ரசிக்கத் தெரிய வேண்டும்

.புகைப்படத் துறைக்கு புதிதாக வருபவர்களுக்கு அறிவுரை சொல்ல முடியாது. இப்ப வரவங்க ரொம்ப நல்லாவே எடுக்கறாங்க. பொறுப்போடு பொறுமையும் இருக்கணும்.இது ரெண்டும் இருந்தாவே அவங்க எடுக்கற புகைப்படங்கள் காலத்தையும் மீறி நிற்கும்

ஃபிளாஷ் உபயோகிக்கும் போது ஃபிலிம் ரோல் வாங்கிய வெள்ளை டப்பா வை கத்தரித்து ஃபிளாஷ் மேல் வத்து படம் எடுத்தால் மென்மையா ஒளியில் எடுத்த எஃபெக்ட் கிடைக்கும்.

இந்த டெக்னிக், க்ளோஸப்பில் முகங்கள் எடுக்கும்போது நல்லா கைகொடுக்கும். மிகக் கிட்டத்தில் இருக்கும் பொருளை, ஃபிளாஷ் போட்டு எடுத்தா, வெளிரிப்போய் வரும். இந்த மாதிரி நேரத்தில் மேலே சொன்ன சூட்சமம் கைகொடுக்கும்

வீட்டு விசேஷங்களின் போதோ, பார்ட்டி மாதிரி சமயங்களிலோ, மனிதர்களை எடுக்கும்போது, அவங்கள கைகட்டி வரிசையா நிக்க வச்சு எடுக்காம, அவங்களுக்குத் தெரியாம, casualஆ அவங்க பேசர மாதிரியும், சிரிக்கர மாதிரியும் எடுங்க. ஆல்பத்துக்கு ஒரு spontaneity கெடைக்கும். 'வாரே வா'ன்னு புகழ ஆரம்பிச்சுடுவாங்க உங்க கலைக்-கண்ணை
 
அதிகவெளிச்சம் சில சமயம் glare effect உருவாக்க கூடும். முக்கியமாக மனிதர்களை எடுக்கும்போது நெற்றி மற்றும் கன்னங்கள் புகைப்படத்தில் அதிக வெளுப்புடன் வந்து புகைப்படத்தையே கெடுத்துவிடும்
எச்சரிக்கை: ஒரு பொழுதும் உச்சிவெயில் நேரத்தில் அல்லது அதிக சூரியவெளிச்சம் உள்ள நேரத்தில் நேரடியாக சூரியனை புகைப்படம் எடுக்க முயலாதீர்கள். அது கேமராவிற்கும் உங்களுக்கும் தீதாக அமையலாம்

நல்ல வெயில் நேரங்களில் மனிதர்களை புகைப்படம் எடுக்கும் போது ஃபிளாஷ் உபயோகித்தல் நலம். இல்லாவிட்டால் நிழல் படிந்த இடங்கள் ( முக்கியமாய் மூக்கு மற்றும் கண்களுக்கு அடியில்) கருப்பாகவும் மற்ற இடங்கள் நல்ல வெளிச்சத்துடன் இருக்கும். ஃபிளாஷ் வேண்டாம் என்று கரும் பட்சத்தில் மூக்கின் கீழும் கண்களின் கீழும் நிழல் விழாமல் இருக்கும் வகையில் பார்த்து எடுக்க வேண்டும்.

ஒளிவிழும் கோணமும் மிக முக்கியமான ஒன்று. ஒளி விழும் கோணம் தவறாக இருந்தால் வெகு அழகாக வரவேண்டிய புகைப்படம். மிக அசிங்கமாக வரக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம்.

சில படங்கள் பிடிக்கும்போது, advancedஆ திங்க் பண்ணனும், படம் க்ளிக்க வேண்டிய நேரத்தில், க்ளிக்க மட்டும்தான் செய்யணும். உ.ம், பட்டாம்பூச்சி, தும்பியெல்லாம் படம் புடிக்க முயற்ச்சி பண்ணினா, 10 விநாடிகளில், 10 படம் க்ளிக்கணும். அப்பதான் நீங்க நெனச்ச ஒண்ணாவது ஒழுங்கா வரும். குழந்ததகளை படம் பிடிக்கும்போதும், இது பொறுந்தும்.
க்ளிக்கரை, முழுதுமாக அமுக்காமல், பாதி அமுக்கிய நிலையில் (half-press) நீங்கள் எடுக...்க நினைக்கும் frameஐ, focus செய்து கொள்ள முடியும். நீங்கள் நினைத்த காட்சி தெரிந்ததும், மீதிப் பாதியையும் அமர்த்தி, படத்தை க்ளிக்கலாம்.

குழந்தையை படம் எடுக்கும்போது, அது சிரிக்கும் வரை காத்திராமல், viewfinderல், குழந்தையின் முகத்தை frame செய்து, பொத்தானை half-press செய்து, focus lock செய்ய முடியும். குழந்தை சிரிக்கும்போது, மீதிப்பாதியை அமர்த்தி படத்தை எடுக்கலாம்.
 
ஒவ்வொரு படம் எடுக்கும் முன்னும், உங்கள் கேமராவில் இருக்கும் modeஐ சரியாக உபயோகிக்கலாம். க்ளோஸப்பில் பூக்கள் எடுக்க, தூரத்தில் இருக்கும் பொருள் எடுக்க, இரவில் படம் பிடிக்க என்று வரிசையாக இருக்கும் பொத்தான்களை உபயோகிக்கலாம். ஷட்டர் வேகம், aperture இவற்றின் நுணுக்கங்கள் புலப்படும் வரை, கேமராவில் உள்ள இந்த வசதிகள் கைகொடுக்கும்
 
No comments:

Post a Comment