பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் என பொதுவாக குறிப்பிட்டாலும் ஒவ்வொரு நாட்டிற்கும் புகைப்படத்தின் அளவு வேறு படும்.இந்தியாவில் உள்ள அளவு வெளிநாடுகளில் செல்லுபடியாகாது. ஏற்கனவே நாம் இந்திய பாஸ்போர்ட் அளவுகளில் புகைப்படங்கள் எடுப்பதுபற்றி பார்த்தோம். இன்று அமெரிக்காவில் எடுக்கப்படும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் தயார்செய்வதைப்பார்ப்போம். 2 கே.பி அளவுள்ள இந்த ஆக்ஷன் டூலை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக் செய்யவும்.வரும் ஆக்ஷன் டூலை போட்டோஷாப்பில இணைத்துக்கொள்ளவும்.இப்போது தேவையான புகைப்படத்தை தேர்வு செய்யவும்.
இப்போது ஆக்ஷன் டூலினை கிளிக் செய்யவும். உங்களுக்கான புகைப்படத்தில் தேவையான அளவுக்கு கர்சரால் அதிகப்படுத்தவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இப்போது என்டர் தட்டுங்கள். உங்களுக்கு அமெரிக்கா பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் இரண்டு தயார். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதே புகைப்படம் உங்களுக்கு 12 காப்பி வேண்டுமானால் நீங்கள் இதிலேயே உள்ள மற்றொரு ஆக்ஷன் டூலினை கிளிக்செய்யவும். புகைப்படத்தினை தேர்வு செய்து என்டர் தட்டவும்.கீ்ழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அமெரிக்காவில இருப்பவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளவும்.மற்றவர்கள் இந்த 5x5 c.m அளவு புகைப்படத்தினை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.கருத்தினை கூறுங்கள்.
No comments:
Post a Comment