Monday 26 August 2013

பிடிஎப் பைல்களை சேர்க்க - பிரிக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.

  1. பிடிஎப் பைல்களை சேர்க்க - பிரிக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 12 எம.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 இதில்உள்ள Add கிளிக் செய்து நம்மிடம் உள்ள பிடிஎப் பைல்களை தேர்வு செய்யலாம். மேலும் இதில்  Password கொடுத்தும் நாம் பைலினை பாதுகாக்கலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 சேமிக்க விரும்பும் இடத்தினை தேர்வு செய்தபின்னர் இதில் உள்ள Merge கிளிக் செய்திட சில நொடிகளுக்குபின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான பிடிஎப் பைல்கள் எல்லாம சேர்ந்து ஒரே பைலாக இருப்பதனை காணலாம். இதுபோல ஒரே பிடிஎப் பைல்களை நாம் தனிதனியாக பிரிக்கலாம்.அதற்கு உங்களுக்கு வரும் விண்டோவில் Split Pdf தேர்வு செய்யவும். பிடிஎப் பக்கங்களை தேர்வு செய்யவும். பிரித்தபின் சேமிக்கவிரும்பும் இடத்தினை தேர்வு செய்து பின்னர் இதில் உள்ள  Split கிளிக் செய்யவும்.
சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் ்பிடிஎப் பைல்களானது பிரிந்:து இருப்பதனை காணலாம். இவ்வாறு பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது:. பயனப்டுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 

No comments:

Post a Comment