புகைப்படக் கலையின் வளர்ச்சிக்கு வரப்பிரசாதமாக அமைந்தவை இவை. அதி சிறந்த வசதிகள் உள்ளவை. மிகத்துல்லியமான புகைப்படங்களை எடுக்கக்கூடியவை. இந்த வகைக் கமெராக்களின் வில்லைகளை தேவைக்கு ஏற்றவாறு மாற்றி பொருத்த முடியும் (interchangeable lens). இவற்றின் கமெரா தனியாகவும்(body) வில்லை (lens) தனியாகவும் கிடைக்கும். வில்லையின் விலையானது காமெராவின் விலைக்கு ஒப்பானது. மேலும் இவற்றில் அதிகளவில் வெளியிணைப்பு கருவிகளை இணைத்து இவற்றின் திறனை விருப்பதிற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முடியும்.
இவை அளவில் பெரியவை, கனமானவை, மிகவும் விலை அதிகமானவை. இந்த வகைக் கமெராக்கள் நிபுணத்துவ புகைப்படக் கலைஞர்களால் அதிகளவில் பாவிக்கப்படுகின்றன. உதாரணம் : Nikon D300S.
No comments:
Post a Comment