Tuesday 20 August 2013

கேமரா வரலாறு

ஒரு புகைபட பார்வைபோட்டோகிராபி எனபது கீரிக் வார்த்தையான “phōs (genitive: phōtós) light” மற்றும் “gráphein’ என்ற வார்த்தைகளில் இருந்து திரிபடைந்து “Photography” என்றானது. பல துறைகளின் கண்டுபிடிப்புகளின் கலவைதான் புகைபடக்கலை துறை. இதற்கான தொடக்கம் பொறியியல் துறையின் தெர்மோமீட்டர் போன்ற பதிவுகளை பதிவு செய்யதான் 18ம் நூற்றாண்டில் புகைபடத்தின் ஆராய்ச்சியில் இறங்கினர் அறிவியல் ஆய்வாளர்கள். கேமேரா வருவதற்க்கு முன் ஓவியத்தையும் சிற்பம் செதுக்குவதையும் புகைபடகலையாக கருதினார்கள். கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் சைனாவின் கணிதவியலாளர் “மோ டி”யும் கிரேக்க கணிதவியலாளர் “அரிஷ்டாடிலும்” “pinhole கேமரா” பற்றி குறிப்பிட்டுள்ளனர். கி.பி ஆறாம் நூற்றாண்டில் பைசாண்டின் என்னும் கணிதவியலாளர் அவரது ஆய்வுகளில் இருபடபெட்டி “obscura” ஒன்று புகைபடம் எடுக்க உபயோகித்தாக குறிப்பு சொல்கின்றது. ஆல்பெர்டஸ் மேக்னஸ் (1193-1280) சில்வர் நைட்ரேட்டை கண்டுபிடித்தார் மற்றும் ஜார்ஜ் Fabricius (1516-71) வெள்ளி குளோரைடை கண்டுபிடித்தார். கி.பி.1568ல் டேனியல் ஓளிசிதறல் கொள்கை பற்றி கூறினார். கி.பி. 1694ல் வில்ஹெல்ம் என்பவர் ரசயானங்களுக்கும் ஓளிக்கும் ஒரு தொடர்புள்ளது (போடோகெமிகல் விளைவு) என்பதை விவரித்தார். 1760ல் பிரெஞ்சு எழுத்தாளர் புகைபடத்தால் என்ன செய்யமுடியும் என்பதை விளக்குவதாக ஒரு புத்தகம் வெளியிட்டார். இப்படி பல அறிவியல் கணித நிபுணர்களின் கற்பனையில் வலம் வந்தது புகைபடகலை.
வேதியல் தொழில் நுட்பத்தின் முன்னேற்றத்தினால் முதல் புகைபடதொழில் நுட்பகனவு 1970ல் நிறைவானது. பிரஞ்சு கண்டுபிடிப்பாளரான Nicéphore Niépce தான் இந்த முதல் புகைபடத்துக்கு சொந்தக்காரர். இவர் எடுத்த புகைபடம் ஜன்னல் வழியாக இயற்க்கை காட்சி. ஆனால் இவருகிட்ட போட்ட எடுத்தவங்க ரொம்ப கஷ்டபட்டுருப்பாங்க. ஏனென்றால் இவருடைய கேமாரா போட்டோ எடுப்பத்ற்க்கு 8 மணி நேரம் எடுத்துகொள்ளுமாம். Nicéphoreவின் இறப்புக்கு பிறகு அவரின் ஆராய்ச்சியை தொடர்ந்த டாகுரே 1838 இல் ஒரு நபரின் முதல் புகைப்படம் எடுத்தார். இந்த கேமேராவுக்கு டாகுரோ வகை கேமேரா என்று பெயர் வைத்தனர். பிரெஞ்சு நாடு உலகிற்கே ஒரு பெரிய பரிசு அளிப்பது போன்று பெருமைபட்டது.
அதே நேரத்தில் 1832ல் பிரான்சிலிருந்து Hercules Florence என்பவர் புகைபடம் எடுப்பது போன்ற கருவி ஒன்றை கண்டுபிடித்து போட்டோகிராப் என்றும் பெயரிட்டுமிருந்தார். இன்னொரு முனையில் ஆங்கிலம் கண்டுபிடிப்பாளரான வில்லியம் ஃபாக்ஸ் டால்போட் சில்வர் செயல்முறை மூலம் புகைபடமாக்க மற்றொரு வழிமுறையை கண்டுபிடித்தார். ஆனால் அதை இரகசியமாக வைத்திருந்தார். டாகுரோ வகை கேமேரா பற்றி தெரிந்ததும் தன்னுடைய கலோவகை கேமேராவில் சோடியம்தையோசல்பேட்டின் உதவியுடன் நெகடிவ் புகைபடம் எடுத்தார். இவருடைய புகைபடம் கருப்பு-வெள்ளைக்கு மாறாக நீலம்-வெள்ளையாக இருக்கும். அதுமட்டுமின்றி போட்டோகிராபி என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியதும் இவர்தான். நெகடிவ் மற்றும் பாஸிடிவ் புகை புகைபடத்துக்கான வித்தியாசங்களையும் விளக்கங்களையும் இவர் ஆய்வறிக்கையில் சமர்பித்தார்.
மார்ச் 1851ல், “ஃப்ரெட்ரிக் ஸ்காட் ஆர்ச்சர்” என்பவர் கெமிஸ்ட். இவர் புத்தகத்தில் “collodion” என்ற தலைப்பில் கண்டுபிடிப்புகளை வெளியிட்டார் அதில் உலர் தட்டு பற்றி அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் பிற்பகுதி 1860ல் புகைபடம் பற்றி மிக பரவலான கருத்து மாறியது. மூன்று விதமான புகைபடமுறை தோன்றியது.
1.Ambrotype (பாஸிடிவ் படம் கண்ணாடியின் மேல்),
2.Ferrotype அல்லது Tintype (பாஸிடிவ் படம் உலோகத்தின் மேல்)
3.வெள்ளை கருவுணவு அல்லது உப்பு தாளில் அச்சிடப்பட்ட நெகடிவ் படம்.
காலம் சுழல ஆரம்பிக்க போட்டோகிராபியின் வளர்ச்சி அதிகமானது. கண்ணாடி, உலோகம், உப்புதாளில் அச்சிடபட்டதை புகைபடசுருளுக்கு மாறியது 1884ல் ஜார்ஜ் ஈஸ்ட்மேன் என்பவர் அடுத்தகட்ட்மாக வண்ண படங்களுக்கான ஆராய்ச்சியில் அதிக முயற்சியெடுத்து 1908 ஆம் ஆண்டு கேப்ரியல் லிப்மேன் பிளேட் என்று அறிமுகபடுத்தினார். “குறுக்கீடு நிகழ்வை அடிப்படையாக கொண்டு பெருகும் நிறங்கள்” அதாவது கருப்பு-வெள்ளை சிவப்பு-பச்சை-நீலத்துக்கு மாற்றுவதற்கான அவரது ஆராய்ச்சிக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.
நிறங்களை பொறுத்தமட்டில் மோனோகுரோமில் தொடங்கிய ஆராய்ச்சி கொடாக் குரோமில் முடிந்தது. 1935ல் கொடாக்(KODAK) குரோமை கொடாக் என்பவர் அறிமுகபடுத்தினார். மூன்று அடுக்குகளை கொண்டது. சிவப்பு, பச்சை, நீலம் நிறங்களை தனிதனியாக உணர்ந்து புகைபடம் எடுத்தது இந்த கொடாக்.
அதன் பிறகு பல மாறூதலுக்கு அப்புறம் டிஜிட்டலாகியது. இப்போது மனிதர்களின் கையெங்கும் சின்ன கைபேசிகளில் கூட செல்ல குழந்தையாக வலம் வருகின்றது கேமேரா.

No comments:

Post a Comment