ஆஹா..! இவன் பிலிம் காட்டறான் பாரு ....என வேடிக்கையாக சொல்லுவார்கள். நாம் போட்டோஷாப்பில் பிலிம் ரோலில் புகைப்படம் கொண்டுவருவது எப்படி என பார்க்கலாம். முதலில் போட்டோஷாப் திறந்துகொண்டு அதில் பிலிம் ரோல் ஒன்றை உருவாக்கிஅதன்பிறகு அதில் போட்டோக்களை இணைக்கவேண்டும். முதலில் பிலிம் ரோல் உருவாக்குவதை காணலாம்.
கீழ்கண்ட அளவுகளில் புதிய விண்டோவினை திறந்து கொள்ளுங்கள்.
அதன்பிறகு அதிலேயே புதிய லேயர் ஒன்றை உருவாக்கிகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
கீழ்கண்டவாறு விண்டோ ஓப்பன் ஆகும். ஓ,கே.தாருங்கள்.பின்னர் Rectangular Marquee Tool -லில் அகலம் 225 பிக்ஸல் உயரம் 500 பிக்ஸல் என அமைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது அந்த அளவில் விண்டோவினை அமைத்துக்கொள்ளுங்கள். கீழே உள்ள வாறு விண்டோ தோன்றும். நிறத்திற்கு கருப்பு அ்ல்லது கிரே நிறம் அமைத்துக்கொள்ளலாம்.
இப்போது Eraser Tool-லில் Background Eraser Tool தேர்வு செய்து கொள்ளுங்கள். கீழே உள்ள வி்ண்டோவினை பாருங்கள்.
இப்போது மவுஸை ரைட்கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் கீழே உள்ள வாறு பிரஷ் அளவுகளை அமைத்துக்கொள்ளவும்.ரைட். இப்போது உங்கள் கர்சரானது வட்டத்திற்குள் + குறியுடன் இருக்கும். விண்டோவில் கருப்பு நிற மூலையில் வைத்து கிளிக் செய்து Shift Key அழுத்திக்கொண்டு அதன் நேர்கீழே கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு சிறு கட்டங்கள் வரும் .கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதைப்போல இரண்டுபுறமும் வட்டங்கள் கட்செய்துகொள்ளுங்கள்.இப்போது மூன்று புகைப்படங்கள் தேர்வு செய்துகொள்ளுங்கள். ஓரே அளவாக வர கிராப் டூல் மூலம் 225x150 pix.அளவில் புகைப்படங்கள் கட்செய்து கொள்ளுங்கள்.ஒவ்வோரு படமாக மூவ் டூல் மூலம் கொண்டுவாருங்கள்.
சரியான இடைவெளியில் மூன்று புகைப்படங்களையும் அமைத்துக்கொள்ளுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதை நன்றாக செய்துபாருங்கள். பழக பழக சரியாக வரும்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.இதன் தொடர்ச்சியை அடுத்த போட்டோஷாப் பதிவில் பார்க்கலாம்.
வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment