Sunday, 25 August 2013

புகைப்படம்

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலே, ஈரான் நாட்டைச் சேர்ந்த அபு அலி என்பவரால் இரும்பு பெட்டி என்ற பெயரில்  புகைப் படம் பற்றியான பரிசோதனை முயற்சிகள் நடத்தப்பட்டன.

இந்தப் படமெடுக்கும் சோதனைகள் அனைத்தையும், ஓவியங்கள் வரைவதற்காகப் பயன்படுத்தினார்கள்.

சீன தேசத்து மனிதர்கள் இதனைத் தொடர்ந்து, ஒளியை ஆராய்ச்சி செய்து நுட்பமான முறையில் புகைப்படம் எடுப்பை வளர்க்க ஆரம்ப கட்ட முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

1831 ஆம் ஆண்டுகளில் லூயிஸ் டோக்ரே என்ற அறிஞர் புகைப்பட கண்டுபிடிப்பில் முதற்படியை மிதித்ததார்.

8 மணி நேரத்தில் இருந்து, 12 மணி நேரம் வரை ஆட்களை உட்கார வைத்து, ஒளியைப் பாய்ச்சி பிம்பத்தை நிலை நிறுத்த போராடியிருக்கிறார்.

டோக்ரேவுக்குப் பிறகு, ஜோசப் மெசீர் என்பவர் சில உலோகத் தகடுகளைப் பயன்படுத்தி புகைப்படங்களை நிலை நிறுத்த செய்தார்.

வெண்ணிற உப்பைத் தூளாக்கி மெல்லிய வெள்ளித் தகடுகளில் புகைப்படங்களை ஜோசப் மெசீர் பதிவு செய்தார்.

1939 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் வில்லியம் கர்சல் என்பவர் முக பாவனைகளை மட்டும் 30 விதமான புகைப்படங்களில் பதிவு செய்து அமெரிக்காவில் கண்காட்சியாக வைத்த போது மக்கள் ஆச்சர்யத்தின் எல்லை கடந்தனர்.

ஆனாலும் சில மணி நேரம் மட்டுமே படத்தை நிறுத்த முடிந்ததால் புகைப்படம் எடுப்பதில் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி மக்கள் காத்திருந்தார்கள்.

புகைப்படம் எடுப்பதில் சில குறிப்பிட்ட மாற்றங்களான,லென்ஸ் பயன்பாடுகளுக்குப் பிறகு, ஆகஸ்டு 19 ஒளிப்பட  தினம் அனுசரிக்கப்பட்டு புகைப்படக் கலை என்பது, அறிவியலாகவும், கலையாகவும் வளர்த்தெடுக்கப்பட்டது.

புகைப்படங்கள் பத்திரிக்கைத் துறையில் பெரும் மையில் கல்லாக உருவெடுத்தது.

இது நாள் வரை வெறும் எழுத்து வடிவிவ் மட்டும் தகவல்களைச் சான்றுகளாக அடுக்கி வந்த காலம் கடந்து ஆயிரம் வார்த்தை சொல்லி புரியவைக்கும் உணர்வுகளை ஒரு புகைப்படத்தின் வழி காட்ட முடிகிறது.

செய்திகளுக்கு புகைப்படங்களே வலு சேர்க்கின்றன. நம்மகத்தன்மையை ஏற்படுத்துகின்றன. தடங்களைக் காட்டும் ஆதாரமாக இருக்கின்றன. காலம் கடந்த பின்னாலும் மிக முக்கிய ஆவணமாக இருக்கின்றன.

மிகக் குறுகிய வடிவங்களில் புகைப்படக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு உலகத்தில் சுறுக்கி நக இடுக்கில் வைத்து விட்டன.

ஒரு பெரிய பத்து முப்பது அடிகளில் கண்டறிப்பட்ட புகைப்படக் கருவிகள், இன்று கைக் காமராவில் தொடங்கி, செல்போன்கள் தொட்டு,கடிகாரத்திலும், பேனாவிலும், கண் கண்ணாடிலும் சட்டைப் பட்டன்களிலும் காமராக்கள் வந்து விட்டன.

இதனால் நெகட்டிவ் கழுவும் அவகாமெல்லாம் இன்று மாறிவிட்டது.
டிஜிட்டல் காமராக்களில்  எடுத்த நொடியில் புகைப்படங்கள் வந்து விழுகின்றன.

2ஜீயிலிருந்து இன்றைய நடைமுறையின் 3ஜியைத் தாண்டி 4ஜி திட்டங்கள்  இன்று உருவாக்கத்தில் இருக்கின்றன. புகைப் படக் கலையில் பல வகைகள் இருக்கின்றன.

இயற்கைப் புகைப்படங்கள் என்ற வகையில், ஒரு மொட்டு மலர்வதையும் சூரியன் தோன்றி மறைவதையும் விரைவுக்காட்சிகளில் ஒரே நேரத்தில் பார்க்க முடிகிறது.

விலங்குகள் மற்றும் பறவைகள் என்று பக்கத்தில் இருந்து பார்க்க முடியாத காட்சிகளையும் பல திட்டமிட்டு பொருத்தி வைக்கப்பட்ட ஆளில்லா காமராக்களில் கண்டு ரசிக்க முடிகிறது. பல ஆய்வுகளை மேற்கொள்ள முடிகிறது.

தெருப் புகைப்படங்கள்உணவுப்புகைப்படங்கள்என்ற வகையில், பயணப்புகைப்படங்கள் பிரமாண்டமாக இருக்கின்றன.
சு
ற்றுலாத் தளங்களில் இருக்கும் நினைவுச் சின்னங்களைச் சென்று பார்த்து வர வாய்ப்புக் கிடைக்காதவர்களும்  புகைப்படத்தின் வழி பார்த்து மகிழ்கிறார்கள்.

கடல் அடியில் எடுக்கப்படும் புகைப்டங்களும், மலைவாழ் மக்களைப் பற்றிய புகைப்படங்களும் பல புரிதல்களை நமக்குத் தந்து கொண்டிருக்கின்றன.

பத்திரிக்கையிலும், காட்சி ஊடகங்களிலும், புகைப் படக்காரர்களைப் பல பிரிவுகளாக பிரிக்கலாம்.

திருவிழாக்கள்கண்காட்சி உண்ணாவிரதம் கலை நிகழ்ச்சிகள் அரசியல் கூட்டங்கள் என்று நடைபெறும் நிகழ்ச்சிகஹ்களைப் படம் பிடிக்கும் புகைப்படக்காரர்கள் தனியாக நியமிக்கப்பட்டிருப்பார்கள்.

தடி அடி - மோதல்  - ஆர்பாராட்டம் - சாலை மறியல்வெள்ளம்பூகம்பம் - அடித்தட்டு மக்கள் விடும் கோஷம் என்று பிரட்ச்சனைக் குரிய சம்பவங்களைப் புகைப்படம் எடுப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறார்கள்.

அரசியல் தலைவர்கள்விஞ்ஞானிகள் என்ற பிரமுகர்களை படம் எடுக்கும் போது அதற்கேற்ற பக்க அடையாளங்களையும் காட்டுவதில் புகைப்படக்காரர்களின் திறமை விளங்கும்.

கள்ளக்கடத்தல் விபச்சாரம் செய்தல் ரேசன் பொருள்கள் கடத்தல் மணல் திருட்டு போன்ற தீய செயல்பாடுகளை அதன் அக்கிரமங்களைப் புகைப்படம் எடுப்பதில் மிகுந்த நுணுக்கத்துடன் செயல்பட வேண்டியிருக்கிறது.

புகைப்படத்தில் இருக்கும் நபர் அவரில்லை, இவரில்லை என்று வரும் பிரட்ச்சினைகளுக்கு இடம் கொடுக்காமல் தத்துருவமாக நுண்பொருள் கருவிகளைப் பயன்படுத்தி புகைப்படம் எடுக்க வேண்டியுள்ளது.

போர்கள் மதக் கலவரங்கள் என்ற கொடூரமான நிலையில் புகைப்படம் எடுப்பவர்களுக்கு மன தைரியம் குறையாமல் இருக்க வேண்டியுள்ளது.

புலனாய்வு துறையால் இரண்டொரு இஞ்சுகளில், அதி நவீனப் புகைப்படக் கருவிகள் பயன்படுத்தப் படுகின்றன.

விளையாட்டு சாகசங்களைப் படம் பிடிக்கும் சமயங்களில் அகன்ற வெளிக் கோணங்களைப் பெரிதும் பயன்படுத்த வேண்டியிருக்கின்றன.

மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டவர்களான தலைவர்கள்நடிகர்கள்சமூக வாதிகள்தொழிலதிபர்கள் என்று இருப்பவர்களைப் பற்றி செய்தி வெளியிடும் போதும் அதற்கான சூழலுக்கேற்ப புகைப்படங்கள் கோப்பாக முன் கூட்டிய சேமித்து வேப்பது தேவையான சமயத்தில் வசதியாக இருக்கும்.

புகைப்படப் பிரிவில் கலையின் உச்சமாக விளங்கும் திரைப்படங்களுக்கு அதிக கற்பனை திறமை இருக்க வேண்டியது அவசியமாகிறது.

பல வேறுபட்ட கோணங்கள் வழி பிம்மங்களைக் காட்டினால் தான் பார்வையாளர்கள் சலிப்படையாமல் இருப்பார்கள்.

விழி அசைவுகள்உதடு அசைவுகள் என்று நெறுக்கமன காட்சிகளை அடுத்துக் காட்டுவதைப் பெரிதும் விரும்புகிறார்கள்.

இருளில் ஒளி பாய்ச்சப்பட்டு, மிகக் குறுகிய ஒளியில் செதுக்கப்படும் பிம்பங்களை மையமிட்டே புகைப்பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன.

பல லட்சம் செலவு செய்து காமரா வாங்கி வைத்தால் மட்டும் திறமையான புகைப்படக் கலைஞனா விளங்க முடியாது.

பல பரிசோதனை முயற்சிகள் பிம்பங்களில் மேற்கொண்டவர்களின் புகைப்படங்கள் உலக அரங்கில் மனிதர்களை கவர்ந்து கலம் கடந்து நிற்கின்றன.

புகைப்படங்கள் கலையாகவும்  முக்கியமான சான்றுகளில் ஒன்றாகவும் இருக்கின்றன.

பள்ளிக் கல்லூரி சான்றிதழலகளிலும், சுய விபர குறிப்புகளிலும் இன்று புகைப் படங்கள் அச்சிடுவது இயல்பாகிவிட்டது.

பத்திரிக்கை முகப்பை புகைப்படங்களில் அலங்கரிப்பதில்  
பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க வசதியாக இருக்கிறது.

வியட்டம் போர்க்களத்தில்  எடுக்கப்பட்ட புகைப்படங்களால் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர  முடிந்தது.

போபால் விஷவாயு போன்ற மர்மங்கள் புகைப்படங்களால் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்கள்.

புகைப்படங்களால் மாபெரும் மனிதர்களின் உருவங்களைக் காலம் கடந்தும் பார்க்க முடிகிறது.

புகைப்படங்களின் வளர்ச்சி இன்றைய சூழலில் காற்றையும் கடந்து விண்ணவெளியில் பறந்து கொண்டிருக்கின்றது.

பூமியில் இருந்து கொண்டே ராக்கட்டுகளையும் செயற்கோள்களையும் இயக்குவதில் தானியங்கிக் கருவிகள்  பக்கத்துக் கோள்களில் இருந்து புகைப்படங்களை எடுத்து அனுப்பிக் கொண்டே இருக்கின்றன.

பால் வெளி அண்டத்தில் சுற்றும் செயற்க்கைக் கோள்கள், பூமியைப் போல வேற்றுக் கிரக வாசிகளை இருந்தால் அவர்களைப் படம் பிடித்தும் அனுப்பும் காலம் வெகுதூரம் இல்லை.  

No comments:

Post a Comment