Sunday 25 August 2013

கப்பலுக்கெல்லாம் ஏன் பொண்ணுங்க பேரை வைக்கிறாங்க?

கப்பலுக்கெல்லாம் ஏன் பொண்ணுங்க பேரை வைக்கிறாங்க?



சென்னை மக்களின் பொழுதுபோக்கு ஸ்பாட் இப்போது பட்டினப்பாக்கம்தான். இதுவரை மெரீனாவில், பலூன் சுடுவதில் இருந்து பஜ்ஜி சுடுவதுவரை வியாபாரம் செய்துகொண்டிருந்த  பார்ட்டிகள் இப்போது அப்படியே பட்டினப்பாக்கத்துக்கு அலேக் ஆகிவிட்டார்கள். அத்தனை மாற்றங்களையும் நிகழ்த்தியது நிலம் புயல். அந்தப் புயலின் சீற்றத்தினால் தாக்குப் பிடிக்க முடியாத பிரதீபா காவேரி என்ற கப்பல் பட்டினப்பாக்கம் அருகே தரை தட்டி நிற்க, அந்த இடம்  டூரிஸ்ட் ஸ்பாட் ஆகிவிட்டது.
''ஹேய்... கொஞ்சம் தள்ளி நில்லு... பேக்கிரவுண்டுல கப்பல் வர்றமாதிரி போட்டோ எடுத்துக்கலாம்’' சென்னைக் காதலன் ஒருவன் சொல்ல... காதலியோ முகத்தை சரிசெய்தபடி நின்று போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். மீனவ இளைஞர்கள் மீன்பிடி படகை எடுத்துக்கொண்டு பிரதீபா காவேரிக்குப் பக்கத்தில் போய், யூ டர்ன் போட்டுத் திரும்பிவருகிறார்கள். கட்டணம் தலைக்கு 50 ரூபாய். போட்டோகிராஃபர்கள் சிலர் கேமரா, பிரின்டர் சகிதமாக அங்கே டேரா போட்டிருக்கிறார்கள். 'கப்பலோட சேர்த்துவெச்சு போட்டோ எடுத்துத்  தர்றோம் சார்.. ஒரு பிரின்ட் 30 ரூபா.. முப்பதே ரூபா’ என்று கூவுகிறார்கள். கூட்டம் வரிசை கட்டுகிறது. பள்ளிக்கூடத்தை கட் அடித்துவிட்டு சில மாணவிகள் பிரதீபாவை வந்து பார்க்கிறார்கள்.
''கப்பல் முழுக்க ஆசிட் இருக்குதாம். அது மட்டும் ஓட்டை விழுந்துச்சுன்னா மெட்ராஸ்ல பாதி இருக்காதாம். அதனாலதான் கப்பலை வேறபக்கம் இழுத்துட்டுப் போகப்போறாங்களாம்''  தனக்குத் தெரிந்த கதையை அவிழ்த்துவிட்டு பீதியைக் கிளப்பினார் நடுத்தர வயதுக்காரர் ஒருவர்.
புதுசு புதுசாக முளைத்திருக்கும் மீன் கடைகளில் கூட்டம் அள்ளுகிறது. போக்குவரத்தைச் சரி செய்வதற்குள் டிராஃபிக் போலீஸுக்கு மூச்சு முட்டுகிறது.  அந்த வழியில் செல்லும் எல்லா வாகனங்களின் டிரைவர்களின் கண்கள்  ரோட்டைப் பார்க்காமல் பிரதீபா காவேரியைப் பார்த்தபடியே பயணிக்கிறார்கள்.
பிரதீபா காவேரியை இழுத்துக்கொண்டுபோக, மாளவியா, ரத்னா என்ற இரண்டு மீட்புக் கப்பல்கள் வந்து பணியைத் தொடங்கிவிட்டன. '' மச்சான்... கப்பலுக்கெல்லாம் ஏன்டா பொண்ணுங்க பேரையே வைக்கிறாங்க?’' - அங்கே நின்றிருந்த கல்லூரி மாணவன் கலாய்த்துக்கொண்டிருந்தான்.
அதானே!

No comments:

Post a Comment