Tuesday 27 August 2013

முகத்தில் உள்ள சிறு பள்ளத்தை எப்படி நீ்க்குவது என்று பார்க்கலாம்

சாதாரணமாக முகத்தில் மேடு பள்ளங்கள் ஏற்படுவது சகஜமே...இந்த படத்திலும் உள்ள சிறு பள்ளத்தை எப்படி நீ்க்குவது என்று பார்க்கலாம்.
 குளோன் ஸ்டாம்ப் டூல் ஐ முதலில் தேர்வு செய்து பின்னர் முகத்திலேயே நன்றாக உள்ள இடத்தில்  தேர்வு செய்து Alt Key யை அழுத்திய பின்னர் பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து கர்சரை அழுத்தியவாறு மெதுவாக தேய்க்கவும். பள்ளம் மறைவதை காணலாம்.கீழே உள்ள படத்தை பாருங்கள். 
ரோஜா செடியில் இரண்டு பூக்கள் மலர்ந்துள்ளதை கீழே பார்க்கலாம்.







அதே பூக்களை செடிநிறைய பூத்துள்ளதாக மாற்றி அமைக்கலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பார்கள். இங்கு பாருங்கள். நான் படம்பிடித்த குரங்குக்கு ஐந்து கால்கள் உள்ளது.
உண்மையில் அதற்கு நான்கு கால்கள் தான். போட்டோஷாப் உதவியில் அதற்கு எக்ஸ்ட்ரா ஒரு கால் வரைந்துள்ளேன்.அதன் ஒரிஜினல் புகைப்படம் கீழே:-(அடையாளம தெரியாமல் இருப்பதற்காக அது முகத்தை திருப்பிகொண்டுள்ளது)
கீழே உள்ள சிறுமியின் புகைப்படம் பாருங்கள்.
சிறுவனின் புகைப்படத்தையும் பாருங்கள்.:-
இரண்டுபேரின் முகத்தையும் ஒன்றாக ஆக்கியதால் வந்த புகைப்படம் கீழே:-
குளோனிங் மூலம் புதிய முகம் கிடைத்ததா..? இதுபோல் உங்கள் கற்பனையை உபயோகித்து என்ன வேண்டுமானாலும் செய்து பாருங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன முடித்துக்கொள்கின்றேன்.

No comments:

Post a Comment