போட்டோஷாப்பில் நாம் ஏற்கனவே பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை ஆக்ஷன் டூல் மூலம் கொண்டுவருவதைப்பற்றி பார்த்தோம். இன்று போட்டோவில் அதே ஆக்ஷன்டூல் மூலம் மேக்ஸி Maxi புகைப்படங்கள் கொண்டுவருவது பற்றி பார்க்கலாம். 1 கே.பி. அளவுள்ள இந்த ஆக்ஷன் டூலை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
ஏற்கனவே நீங்கள் போட்டோஷாப்பில் ஆக்ஷன் டூலை இணைப்பது பற்றி பார்த்திருப்பீர்கள். அதன்படி இந்த ஆக்ஷன் டூலையும் போட்டோஷாப்பில் இணைத்துக்கொள்ளுங்கள. இப்போது மேக்ஸி சைஸ் போட்டோ கொண்டுவர விரும்பும் புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.நான் இந்த குழந்தையின் புகைப்படத்தை தேர்வு செய்துள்ளேன்.
மேக்ஸி ஆக்ஷன் டூல் மூலம் முகத்தை மட்டும்தேர்வு செய்து என்டர் கொடுத்தேன்.
முகம் மட்டும் மேக்ஸி சைஸில் வந்துள்ளதை கவனியுங்கள்.
இதைப்போலவே இந்த சிறுமியின் புகைப்படமும்-
ஆக்ஷன் டூல் மூலம் தேர்வு செய்துள்ளேன்-இறுதியாக வந்துள்ள படம் கீழே-
இதைப்போலவே பச்சைக்கிளியின் புகைப்படமும்.-
தேவையான படத்தில் தேவையான பகுதிமட்டும் இந்த மேக்ஸி ஆக்ஷன் டூல் மூலம் எளிதில் கொண்டுவரலாம். இதில் நான் Portrait,.Landscape என இரண்டு மேக்ஸி ஆக்ஷன் டூல்களை இணைத்துள்ளேன்.தேவையானதை தேவையான இடத்தில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.ஆல்பங்களில் ஒட்டப்படும் நமது பெரும்பாலான புகைப்படங்கள் மேக்ஸி அளவிலேயே இருக்கும்.மேக்ஸி டூலை பயன்படுத்திப்பாருங்கள. கருத்துக்களை கூறுங்கள்.
No comments:
Post a Comment