Monday 19 August 2013

வண்ணப் ”புகை”ப்படம்

இந்தப் ”புகை”ப் படங்களை பார்த்து இருப்பீர்கள்.


பல வண்ணப்புகை எப்படி என்று பலர் கேட்டு இருந்தார்கள். கிம்ப்பில் செய்வது பற்றி இங்கே.


முதலில் கருப்பு பின்னணியில் வெள்ளைப்புகையை படமெடுத்துக் கொள்ளுங்கள். கிம்பில் படத்தை திறந்து Colors -> Invert செய்தால்
வெள்ளைப் பின்னணியில் கருப்பு புகையாக மாறிவிடும்.





ஒரு Transparent லெயரை உருவாக்கிக் கொள்ளுங்கள்.





இனி Gradient Blend Tool யை தேர்வு செய்து, shape:Radial என்று மாற்றிக் கொள்ளுங்கள்.





Gradient யை கிளீக்கினால் பல வண்ணத்தில் படங்கள் இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்ததை எடுத்துக் கொள்ளுங்கள்.



படத்தின் நடுவில் கிளிக்கி ஒரு ஓரத்துக்கு இழுத்தால் ( Click and Drag )




இராமராஜனின் சட்டைப்போல் ஒரு வண்ணக் கலவை படத்தில் வரும்.
இனி Mode: color மாற்ற வேண்டியதுதான் பாக்கி.

No comments:

Post a Comment